கல்யாணப் பொண்ணுக்கு ஜுவல் ஃபேஷியல்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 27 Second

நம் சருமத்தில் உள்ள மாசு தூசுக்களை அகற்றி பொலிவாக வைத்துக் கொள்ள தான் நாம் ஃபேஷியல் செய்கிறோம். சருமத்தில் உள்ள அழுக்கை நீக்க மட்டுமே ஃபேஷியல் நாம் செய்வதில்லை, மன அழுத்தம் காரணமாக ஏற்படும், கருவளையம், சருமத்தில் ஏற்படும் சுருக்கம் மற்றும் பிக்மென்டேஷன் போக்கவும் ஃபேஷியல் செய்யலாம் என்கிறார் சென்னையில் உள்ள கிரீன் டிரண்ட்ஸ் அழகு கலை நிலையத்தில் முதன்மை அழகு கலை நிபுணர் சுமதி.
“திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்கள் இருபது நாளைக்கு ஒரு முறை ஃபேஷியல் செய்வது அவசியம். அப்போதுதான் ரிசப்ஷனில் பளிச்சென்று இருக்க முடியும்.

கல்யாண பெண்களுக்கு என தனிப்பட்ட ஃபேஷியல்கள் உள்ளன. பேர்ல், கோல்ட், டயமெண்ட், ஃப்ரூட் என நிறைய இருக்கு. சில சென்சிடிவ் சருமங்களுக்கு இயற்கை முறையில் பழக்கூழ்களை கொண்டு பேஷியல் செய்யலாம். தற்போது லேட்டெஸ்ட் வரவு ஜுவல் ஃபேஷியல். பெயருக்கு ஏற்ப நவரத்தினங்களின் துகள்கள் கொண்ட ஃபேஷியல். பண்டைய காலத்தில் அரச பரம்பரை பெண்கள் இதனை பயன்படுத்தி வந்தனர். இப்போது அதுவே மார்டர்ன் பெண்களுக்கு ஏற்ப வந்துள்ளது.

இந்த ஜுவல் ஃபேஷியலில் ஐந்து விதமான நவரத்தினங்களை பயன்படுத்தியுள்ளனர். முத்து, வைரம், டர்காய்ஸ், பெரிடாட், ரோஸ் க்வார்ட்ஸ் என ஐந்து நவரத்தின கற்களின் துகள்கள் கொண்டு இந்த ஃபேஷியல் கிட்டை தயார் செய்துள்ளனர். இந்த ஒவ்வொரு ரத்தினங்களும் நம்முடைய சருமத்தை பராமரிப்பதற்கு ஏற்ற குணங்களை கொண்டவை. பெரிடாட் சருமத்தில் ஊடுருவி சென்று அதில் உள்ள அழுக்கை நீக்கும். டர்கோசிஸ் சருமத்தில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்கும். முத்து சருமத்தை மிருதுவாக்கும். ரோஸ்க்வார்ட்ஸ் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். வைரம் கொலாஜெனை சீராக்கும். இவை மூன்றுமே சருமத்திற்கு மிகவும் அவசியம். அப்போது தான் நம்முடைய சருமம் என்றும் இளமையாக இருக்கும்.

இந்த மகத்துவத்தை தெரிந்து கொண்டு தான் பண்டைய காலத்தில் நவரத்தின கற்களின் பொடிகளை பயன்படுத்தி வந்தனர். அவங்க தங்களின் சருமத்தை மிகவும் கவனமாக பராமரித்து வந்தாங்க. அந்த அடிப்படையில் நாமும் அதில் புதுமையை புகுத்தி அறிமுகம் செய்து இருக்கோம். எல்லா விதமான சரும ஊட்டச்சத்து கொடுக்க கூடியது தான் ஜுவல் ஃபேஷியல். மற்ற ஃபேஷியலை பொருத்தவரை கடைசியில் மாஸ்க் மட்டுமே போடுவாங்க. இதில் மாஸ்கிற்கு பிறகு சீரம் கொடுப்பதால் அது மேலும் சருமத்தை பளபளப்பாக்கும். இந்த ஃபேஷியல் ஜெல் முறையில் வருவதால், சருமத்தை பாதிக்காது. பொதுவாக ஸ்கிரப் செய்யும் போது, அதில் சின்ன சின்ன துகள்கள் இருக்கும். அது சருமத்தில் உள்ள தேவையற்ற இறந்த செல்களை நீக்கும்.

ஆனால் இதில் ஸ்கிரப்பும் ஜெல் வடிவில் உள்ளது. ஆனால் இதில் உள்ள ரத்தின கற்களின் துகள்கள் அந்த வேலையை செய்யும்.
மேலும் சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கும் இந்த ஃபேஷியல் உகந்தது. மேலும் அனைத்து சரும நிலை, அதாவது, சாதாரணம், எண்ணெய் மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் யாருக்கும் இது பொருந்தும். பருக்கள் அதிகம் இருந்தால், அவர்களுக்கு இந்த ஃேபஷியல் பொருந்தாது. மற்றவர்கள் யார் வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம்.

யாராக இருந்தாலும், ஃபேஷியல் செய்யக்கூடிய வயதான 18யை தாண்டி இருக்கணும். இந்த ஃபேஷியல் மற்ற ஃபேஷியல் செய்வது போன்ற முறைதான். அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தான் மாறும்.முதலில் சருமத்தை சுத்தம் செய்யணும். இதில் இரண்டு வகை உள்ளது. முதலில் கிளென்ஸ் செய்யும் போது அது சருமத்தில் உள்ள மேலோட்ட அழுக்கை நீக்கும். இரண்டாம் முறை செய்யும் போது, சருமத்தினுள் இருக்கும் அழுக்கையும்

நீக்கிவிடும். அதன் பிறகு ஸ்கிரப், ஸ்டீம் கொடுத்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் வயிட் ஹெட்ஸை நீக்கலாம். கடைசியாக மசாஜ் கொடுக்க வேண்டும். இந்த மசாஜ் மூலம் சறுத்தில் உள்ள தேவையற்ற செல்கள் நீங்கும், கண்களில் கருவளையம் மறையும், முகம் பொலிவடையும். கடைசியாக முகத்தில் பேக் போட்டு, சீரம் அப்ளை செய்ய வேண்டும், இது சருமத்திற்கு போஷாக்கு கொடுக்கும், பளபளப்பாக்கும்.

இந்த ஃபேஷியலின் மற்றொரு சிறப்பு கால்வானிக் சிகிச்சை அளிப்பது. ஸ்கிரப் கொடுத்த பிறகு கால்வானிக் கருவியை கொண்டு மசாஜ் செய்யலாம். இந்த கருவியில் பிளஸ் (+) மற்றும் மைனஸ் (-) என இரண்டு குறிகள் உள்ளன. ஸ்கிரப் செய்திட்டு கால்வானிக் கருவியை மைனசில் வைத்து மசாஜ் கொடுக்க வேண்டும். இந்த கருவி மைனசில் இருக்கும் போது, சருமத்தில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் மற்றும் இறந்து போன செல்களை நீக்கும். அதே போல் மசாஜ் கொடுத்திட்டு இந்த கருவியை பிளசில் வைத்துவிட்டு மசாஜ் கொடுத்தால் அது சருமத்திற்குள் ஊடுறுவி சென்று சருமத்தை இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்க உதவும். பற்களில் கிளிப் மற்றும் செயற்கை பற்களை பொருத்தி இருந்தால் கால்வானிக் கருவியை தவிர்க்க வேண்டும். மற்றபடி கல்யாண பெண்களுக்கான சிறந்த ஃபேஷியல் ஜுவல் ஃபேஷியல்.”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முடிவில்லாத பிரச்னையா முடி? (மகளிர் பக்கம்)
Next post வாயு தொல்லை நீக்கும் தனியா!! (மருத்துவம்)