முடிவில்லாத பிரச்னையா முடி? (மகளிர் பக்கம்)
மனிதனுக்கு அழகு தருபவைகளில் ஒன்று முடி.சத்தான உணவுகளை உட்கொண்டு நல்ல உடல் நலத்துடன் இருந்தால் தலைமுடி செழுமையாகவே கரு கருவென வளரும். உடல் கோளாறுகள், மன உளைச்சல்கள், வைட்டமின்களின் குறைபாடுகள், வயது ஆகியவை தலை முடியை பெரிதும் பாதிக்கின்றன. நமது உணவில் போதிய புரதச்சத்துக்கள் இல்லையெனில் முடிகள் உடைந்து போகவும் வறண்டு போகவும் செம்பட்டை நிறமாகவும் மாற வாய்ப்புகள் அதிகம். சாதாரணமாகவே ஒரு மனிதனுக்கு தினமும் 0.5 மி.மீ. நீளம் தலைமயிர் வளர்ச்சி அடைகிறது. ஏறத்தாழ இரண்டாண்டு காலம் ஆயுளுடன் தலை முடி வலர்ந்து, உதிர்ந்து பின் மீண்டும் முளைக்கிறது. பாலாடை வெண்ணை, பச்சைக் காய்கறிகள், கேரட், மீன்கள், ஆட்டு ஈரல், ஆகியவை உணவுகளில் வைட்டமின் ஏ., டி. அதிகமாக உள்ளன. வயது முதிர்ச்சி, தூக்கமின்மை, ஹார்மோன் கோளாறுகள், அதிகமான காபி, தேனீர், குளிர்பானங்கள் தலைமுடியை பாதிக்கும் அதுமட்டுமல்லாமல் தலைமுறை தலைமுறையாக தலையில் வழுக்கை இருப்பவர்களுக்கு அதுவே தொடருவது இயல்புதான்.
முடியை பராமரிக்க…
அரைப்படி உப்பை ஒரு தொட்டி தண்ணீரில் கரைத்து வாரம் ஒரு முறை குளித்து வந்தால் தேகம் தூய்மையாகி அழகும் பலமும் உண்டாவதுடன் தலை முடி நன்றாக வளரும். கடலை மாவு, புளித்த தயிரை சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் எவ்வளவு எண்ணெய் பிசுக்கு அழுக்கு இருந்தாலும் நீங்கிவிடும். தலை முடியும் ஆரோக்கியமாக வளரும். முடிக்கொட்டி தலை வழுக்கையான இடத்தில் காளானை அரைத்துத் தேய்த்து வந்தால் மீண்டும் முடி வளரும். இரவில் படுக்கப்போகுமுன் தலையில் சிறிது விளக்கெண்ணெய்யை தலையில் தேய்த்துக் கொண்டால் கண்கள் குளிர்ச்சி ஆவதுடன் கூந்தல் உதிர்வது நின்று, அடர்த்தியாக முடிவளரும்.
எலுமிச்சம் பழச்சாற்றை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தொடர்ந்து தேய்த்து தலைக்கு குளித்துவந்தால் தலைமுடி உதிர்வது நின்றுவிடும். முடி செழுமையுடனும் கருநிறத்தோடும் வளரும். நரையும் மாறும். ஆலமரத்தின் விழுதைக்கொண்டு வந்து அம்மியில் வைத்து நன்றாக அரைத்து மாவாக்கிக் கொள்ள வேண்டும். 200 கிராம் மாவுடன் 30 மி.லி. எலுமிச்சம் பழச்சாற்றை சேர்த்து கலக்கி தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊரவைத்து பிறகு தலைக்கு குளித்துவிட வேண்டும். இதனால் முடி நீண்டும் கருமையுடனும் செழிப்பாகவும் வளரும். முடியை பராமரிப்பதில் தனி கவனமும் அக்கறையும் செலுத்திவந்தால் மனிதனுக்கு முடியால் தனி மதிப்பும் மரியாதையும் கூடும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating