நரம்புகளை பலப்படுத்தும் அமுக்கரா கிழங்கு!! (மருத்துவம்)
நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவு பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நாம் இன்று சுண்ணாம்பு மற்றும் இரும்பு சத்துக்கள் குறைபாடால் வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் தாக்கக்கூடிய எலும்பு தேய்மானம், எலும்பு முறிவினை தடுக்கும் மருத்துவ உணவு குறித்து பார்க்கலாம்.
இயற்கையாகவே எலும்புகள் இரும்பு போல் இருக்க வேண்டியவை. ஆனால் அவை சிலருக்கு சோளத்தட்டையை போல் மென்மையாகவும், எளிதில் உடைந்து போகும் தன்மையுடனும், எலும்புகள் கரைந்தும், துருபிடித்த நிலையிலும் இருக்கின்றன. இதனால் சிறிது நேரம் நின்றாலும் கால் கடுப்பு, இடுப்பு வலி, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் எலும்பு முறிவு ஏற்படுகின்றன. குறிப்பாக இந்நோயினால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதால் பலவீனத்துடன் காணப்படுகின்றனர். அஸ்வகந்தா கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, முருங்கை கீரைகளை பயன்படுத்தி இதற்கான மருந்து தயாரிப்பது குறித்து பார்க்கலாம். கை, கால் அசதி, உடல் சோர்வினை நீக்கும் முருங்கை சூப்:
தேவையான பொருட்கள்:
முருங்கை கீரை, பூண்டு, நல்லெண்ணெய், மிளகுப்பொடி, உப்பு.
பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, சூடானதும் அதனுடன் நசுக்கிய பூண்டு, முருங்கை கீரை இலை சேர்த்து வதக்கவும். பின்னர் இதனுடன் போதிய நீர்விட்டு நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் மிளகு பொடி சேர்த்து சூப்பாக பருகி வந்தால் எலும்புகள் வலுப்பெற்று உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். மாதவிலக்கினால் பெண்களுக்கு ஏற்படுகின்ற ரத்த குறைபாடு உடலில் சுண்ணாம்பு சத்து அளவினை குறைக்கிறது. முருங்கை கீரையை தினமும் பயன்படுத்துவதால் ரத்த சோகையை நிலையிலிருந்து காக்கிறது. எலும்புகளை பலப்படுத்தும் ஊட்டச்சத்து உள்ளிட்ட பல மருத்துவ குணங்களை முருங்கை பெற்றுள்ளது.
உடலை வலுவாக்கும் கருப்பு உளுந்து கஞ்சி:
தேவையான பொருட்கள்: கருப்பு உளுந்து, பனைவெல்லம், தேங்காய்ப்பால்.
பாத்திரத்தில் பொடி செய்த கருப்பு உளுந்துடன், வெல்லம் சேர்த்து நீர் விட்டு கரைத்து கொள்ளவும். அந்த கலவையை அடுப்பில் வைத்து கஞ்சி பதத்தில் காய்த்து எடுக்கவும். இதனுடன் தேங்காய் பால் சேர்த்து அருந்துவதால் உளுத்து போன உடலுக்கு கூட உடனடி பலம் கிடைக்கும். கருப்பு உளுந்தில் நார்சத்து, இரும்பு, சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது. ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இருக்கும் இந்த கஞ்சியை வளரும் இளம் பெண் குழந்தைகளுக்கு கொடுத்து வருவதால், உடல் நல்ல ஆரோக்கியம் பெறும்.
நரம்பு தளர்வு, மனச்சோர்வை அகற்றும் அஸ்வகந்தா கஞ்சி:
அமுக்கரா (அஸ்வகந்தா) கிழங்குப்பொடி, தண்ணீர் விட்டான் பொடி, பனைவெல்லம், காய்ச்சிய பால்
அரை ஸ்பூன் அமுக்கரா கிழங்கு பொடி, அரை ஸ்பூன் தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி, பனைவெல்லம் சேர்த்த கரைசலை நீர் விட்டு கொதிக்க விடவும். கஞ்சி பதத்தில் வந்ததும் இதனை வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து குடிக்கலாம். இதனை இரவு நேரத்தில் அருந்துவதால், உடல் மற்றும் மன சோர்வுக்கு மருந்தாகி மனதுக்கு இதமான சூழ்நிலையை உருவாக்குகிறது. அமுக்கரா கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. எச்ஐவி என்ற கொடிய நோய்க்கு கூட பாதி மருத்துவம் இந்த மூலிகையில் உள்ளது. இதனுடன் தண்ணீர் விட்டான் கிழங்கு மற்றும் பால் சேர்த்து தேநீராக குடிக்கும் போது, எலும்புகள் பலம் பெறுவதோடு, நரம்புகள் திடமாகிறது.
Average Rating