எங்கள் மருந்து கொரோனா வைரசிற்கு முடிவுகட்டும்- பரிசோதனையின் போது வெற்றியளித்துள்ள மருந்தினை உருவாக்கிய நிறுவனத்தின் தலைமை அதிகாரி கருத்து!! (கட்டுரை)

Read Time:4 Minute, 44 Second

பிபைஜர் பையோன்டெக் நிறுவனங்களின் கொரோனா வைரஸ்மருந்து கொரோனாவைரசின் தலையில் தாக்கி அதனை அழிக்கும் வைரஸ் ஆபத்தினை முடிவிற்கு கொண்டுவரும் என மருந்து தயாரிப்பில் முக்கிய பங்கினை வகித்த விஞ்ஞானியொருவர் தெரிவித்துள்ளார்.
பயோன்டெக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் உகுன் சகின் இதனை தெரிவித்துள்ளார்.

பிபைஜர் பையோன்டக் டெக் நிறுவனங்கள் தாங்கள் உருவாக்கியுள்ள மருந்து மூன்றாம் கட்ட சோதனைகளின் போது எங்களின் எதிர்பார்ப்பையும் மீறி செயற்பட்டுள்ளது,கொரோனா வைரசினால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதில் அது 90வீதம் பலனளித்துள்ளது என குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை தொடரும் சோதனைகள் குறித்த முழுமையான தரவுகள் வெளியாகாத நிலையில் இந்த மருந்து அறிகுறியற்ற நோயாளிகளை குணப்படுத்தும் திறன் உடையதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதேவேளை கார்டியனிற்கு வழங்கியுள்ள பேட்டியில் கொரோனா வைரஸ் தொற்றினை இந்த மருந்துமூலம் தடுத்து நிறுத்தமுடியுமா என்றால் எனது பதில் ஆம் என்பதே என பயோன்டெக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் உகுன் சகின குறிப்பிட்டுள்ளார்.

வைரஸ்தொற்றினை எங்கள் மருந்து மூலம் தடுத்து நிறுத்தமுடியுமா என்ற கேள்விக்கு ஆம் என்பதே எனது பதில் ஏனென்றால் அறிகுறிகள் உள்ள தொற்றிலிருந்து பாதுகாத்தாலே அது பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை முடிவுகள் வெளியாகும்வரை மனித நோய் எதிர்ப்பு முறையிடமிருந்து இந்த மருந்திற்கு வலுவான எதிர்வினையிருக்குமா என்ற சந்தேகம் எனக்கிருந்தது,தற்போது இந்த தடுப்பு மருந்தினால் வைரசினை தோற்கடிக்க முடியும் என்பது எங்களிற்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பு மருந்தின் திறமை குறித்த முக்கிய கேள்விகளுக்கு எதிர்வரும் வாரங்களிலேயே பதில் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ள சஹின் நோய்அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்களின் தொற்றினை தடுப்பு மருந்தினை தடுக்க முடியுமா என்பது ஒரு வருடத்தின் பின்னரே தெரியவரும் என குறிப்பிட்டுள்ளார்.

வெவ்வேறு வயதினருக்கு இந்த மருந்து வெவ்வேறு வகையான பாதுகாப்பினை வழங்குகின்றதா என்ற கேள்விக்கு இரண்டு மூன்று வாரங்களில் இதற்கான பதில் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
வெவ்வேறு இனத்தவர்களிடம் இந்த மருந்து வெவ்வேறு விதத்தில் செயற்படுமா என்பது குறித்து இன்னமும் முழுமையாக தெரியவரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மருந்தினை பெறுபவர்கள் மூன்று வாரகால இடைவெளியில் கையில் மூன்றுமுறை ஊசிபோட்டுக்கொள்ளவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ள சஹின் ஒருவருட காலத்திற்கே மருந்த பயனளிக்கும் என தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகளான தம்பதியினர் சாஹின் மற்றும் ஒஸ்லம் டுரேசியும்,அவுஸ்திரிய புற்றுநோயியல் நிபுணர் கிறிஸ்டொப் ஹபரும் இணைந்து எம்ஆர்என்ஏ என்ற பரிசோதனை முறை மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post GPS இனி தேவையில்லை.. ISRO -வின் புது படைப்பு!! (வீடியோ)
Next post குதிகால், மூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை!! (மருத்துவம்)