ஆரோக்கியமான விரல் நகங்களுக்கு!…!! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 2 Second

பெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள். இவைகளை அழகுற பாதுகாத்தால் வசீகரம் கூடும். அதற்கான சில டிப்ஸ்…

* விரல்கள் மற்றும் நகங்கள் சொர சொரப்பு நீங்கி பளபளக்க நல்லெண்ணெயைத் தடவி மசாஜ் செய்யலாம்.
* ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊறவைத்து பின்பு கழுவி வந்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.

* நகம் கருமை நிறமாக மாறி சொத்தையாகி இருந்தால் துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து தடவினால் விரைவில் சொத்தை மறையும். கருமை நிறமும் மாறும்.
* உடலில் கால்சியம் சத்து குறைவதால் நகங்கள் பாதிக்கப்படுகின்றன. கால்சியம் மாத்திரைகளையோ அல்லது கால்சியம் சத்து நிறைந்த உணவுகளையோ உட்கொள்ளுதல் நல்ல பலனைத் தரும்.

* நகங்களைச் சுற்றி தடித்தும், வலியும் இருந்தால் வெதுவெதுப்பான தண்ணீரில் டெட்டால், பெப்பர்மின்ட் ஆயில் சேர்த்து அதில் நகங்கள் படும்படி வைத்து பின்பு கழுவினால் வலி நீங்கி நகங்கள் சுத்தமடையும்.
* வெற்றிலையில் சிறிதளவு வெள்ளை சுண்ணாம்பு கலந்து அரைத்து நகத்தில் தடவினால் நகத்தைச் சுற்றி வரும் புண் குணமாகும்.
* வெள்ளை ஜெலட்டின் (கால்சியம் சத்துள்ளது) இரண்டு தேக்கரண்டி எடுத்து நான்கு தேக்கரண்டி இளஞ்சூடான தண்ணீரில் கரைத்து விரல்களின் மீது பூசி ஊறவைத்து கழுவி வர நகங்கள் உடையாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீக்கம், வலியை போக்கும் வாகை!! (மருத்துவம்)
Next post ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது!! (மகளிர் பக்கம்)