கொரோனா வைரஸ் நோயாளி என்ற சந்தேகத்தில் தாய் மருத்துவமனையில் அனுமதி- மாற்றுதிறனாளியான மகன் தற்கொலை- ஹோமாகமவில் சம்பவம்!! (கட்டுரை)
கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொண்ட மாற்றுதிறனாளி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹோமாஹமவில் இந்த சம்பவம் 31ம் திகதி இடம்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட நபரின் பிரதேப்பரிசோதனைகள் இன்று முல்லேரியா மருத்துவமனையில் இடம்பெறவுள்ளன என தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியானால் அவரது உடல் கொரோனா வைரஸ் விதிமுறைகளின் கீழ் அடக்கம் செய்யப்படும் அல்லது உறவினர்களிடம் கையளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மாற்றுதிறனாளியை பராமரிப்பதற்கான உரிய நடவடிக்கையை பொதுசுகாதார பரிசோதகர்கள் எடுக்கவில்லை என அவரின் அயலவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதேவேளை இது குறித்து தெரிவித்துள்ள பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகன உயிரிழந்தவரை பராமரிப்பதற்கு முதலில் அவரது இளைய சகோதரர் முன்வந்தார் எனினும் பின்னர் எனினும் இறுதி நிமிடத்தில் கொரோனா அச்சம் காரணமாக அவர் பின்வாங்கிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் தாயை பேலியகொடை சந்தைக்கு சென்ற பின்னர் அந்த பகுதியில் கட்டுப்பாடு இல்லாமல் நடமாடி வருகின்றார் என அந்த பகுதி பொதுமக்கள் முறைப்பாடு செய்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை உறுதிசெய்த பின்னர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற சுகாதார பரிசோதகர்கள் அவரை அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பும்போது அவருக்கு மாற்றுதிறனாளியான மகன் ஒருவர் இருக்கின்றார் என அயலவர்கள் தெரிவித்தனர்,
தனது மூத்த மகனை பராமரிக்கும் வலு காலியில் உள்ள இளைய மகனுக்குள்ளது என தாயார் தெரிவித்திருந்தார்
இளைய மகன் ஒரு கணக்காளர் அவர் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார் எனவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகன குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகர்கள் இளைய மகனை தொடர்புகொண்டவேளை அவர் தனது சகோதரரை பராமரிப்பதற்கு இணங்கியுள்ளார்,
ஆனால் ஊரடங்கு காரணமாக தன்னால் வரமுடியாத நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்
இதன் பின்னர் அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த பொலிஸ் நிலையத்தை தொடர்புகொண்ட பொதுசுகாதாரபரிசோதகர்கள் காலி பொலிசுடன் தொடர்புகொண்டு அவருக்கு ஊரடங்கில் பயணிப்பதற்கான அனுமதியை பெற்றுக்கொடுக்குமாறு கேட்டனர் என உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.
எனினும் இறுதி நேரத்தில் தனது தாயார் கொரோனா நோயாளி என அச்சப்படுவதால் தன்னால் அங்கு வரமுடியாது என அவர் தெரிவித்தார் என உபுல்ரோகன குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீட்டின் முன்னாள் மேசையில் உணவை வைக்குமாறு நாங்கள் அயலவர்களை கேட்டுக்கொண்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே இளைய மகன் இறுதி நிமிடத்தில் பின்வாங்கியதன் காரணமாகவே இந்த பிரச்சினை எழுந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்
எங்களால் அவரை அம்புலன்சில் அனுப்ப முடியாது அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது அவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்துள்ள உபுல்ரோகன எங்களால் எதுவும் செய்ய முடியாது கொரோனா வைரஸ் நோயாளி என சந்தேகிக்கப்படும் தாயை அனுமதிக்காமல் வைத்திருந்திருக்கலாம் அதனை மாத்திரம் நாங்கள் செய்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மாற்று திறனாளி விடயத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் உரிய அக்கறையை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
Average Rating