ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)
ஃபேஸ் லிஃப்டிங் வீட்டில் செய்யும் முறை
நாற்பது வயதைக் கடந்து முதுமைக்குள் நுழையும் வயதில் இருப்போர், முகத்தில் தொங்கும் சதைகளை சரி செய்து இளமையைத் தக்க வைக்கவும், சுருக்கங்களை நீக்கி தளரும் சருமத்தை இழுத்துப் பிடிக்கவும், தொடர்ந்து கொலாஜன் மற்றும் எலாஸ்டிசிட்டி தன்மையினை சருமத்திற்குள் கொடுக்கவும், கைவசம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு ஃபேஸ் லிஃப்டிங் செய்து இளமையை எவ்வாறு தக்கவைப்பது என்பதைக் காண்போம்.
தேவையான பொருட்கள்
மசித்த வாழைப்பழம், ஊறவைத்த ஓட்ஸ், லாவண்டர் ஆயில், ஆமணக்கு எண்ணெய், தேன், கடலை மாவு, முட்டையின் வெள்ளைக்
கரு, அரிசி களைந்த நீர்.
1. ஏதாவது ஒரு வாழைப்பழத்தை 2 அல்லது 3 துளி எலுமிச்சை சாற்றுடன் இணைத்து நன்றாக மசித்து முகத்தில் தடவவும்.
2. பத்த நிமிடங்கள் கழித்து முகத்தை அரிசி களைந்த நீரால் சுத்தம் செய்யவும்.
3. அரைமணி நேரம் ஊறவைத்த ஓட்ஸை முகத்தில் தடவவும்.
4. பத்து நிமிடம் கழித்து நீக்கி சுத்தம் செய்யவும்.
5. லாவண்டர் ஆயில், ஆமணக்கு எண்ணெய், தேன் மூன்றையும் கலந்து முகத்தில் தடவவும். தொடர்ந்து ஐந்து நிமிடத்திற்கு முகத்திற்கு மசாஜ் கொடுக்கவும்.
6. முட்டையின் வெள்ளைக் கருவோடு இரண்டு டீஸ்பூன் கடலை மாவை இணைத்து மெல்லிய லேயராக தடவி உலர விடவும். இரண்டாவது லேயராக மீண்டும் அதே கலவையை அடர்த்தியாகத் தடவவும். பதினைந்து நிமிடம் கழித்து நீக்கி சுத்தம் செய்யவும்.
மாடல்: ஜனனி
உதவி: விஜி
ஃபேஸ் லிஃப்டிங்கிற்கான சில டிப்ஸ்கள்
* முகத்தை சுத்தம் செய்ய அரிசி களைந்த நீரை பயன்படுத்தினால் எலாஸ்டிசிட்டி தன்மை சருமத்திற்கு அதிகரிக்கும்.
* ஓட்ஸ் இல்லாத நிலையில் அவலை ஊறவைத்து அத்துடன் தேன் இணைத்து ஃபேஸ் பேக் போடலாம்.
* எண்ணெய் தன்மை கொண்ட சருமத்தினை உடையவர்கள், எண்ணெய்க்குப் பதிலாக பப்பாளி பழத்தை மசித்து பேக் போட்டு மசாஜ் செய்யலாம்.
* வாரத்திற்கு ஒருமுறை இதனைத் தொடர்ந்து செய்தால் சருமம் சுருங்கி தொங்குவதில் இருந்து நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
ஃபேஸ் லிஃப்டிங் தவிர்த்து முகத் தளர்ச்சியை மறைக்க சில டிப்ஸ்
* ஜெஜோபா எண்ணெய் (Jojoba oil) அல்லது பாதாம் எண்ணெய் வைத்து முகத்திற்கு மசாஜ் கொடுக்கலாம்.
* ஸ்கின் லிஃப்டிங் மேஜிக் டேப் பயன்படுத்தி மாற்றத்தை காட்டலாம்.
* சிகை அலங்காரம் மூலமாக வயதான தோற்றத்தை சற்று மறைக்கலாம்.
* கான்டூர் செய்வதன் மூலம் முகத்தில் மாற்றத்தை காட்டலாம்.
* காபிப் பொடி அல்லது பட்டையினை தூள் செய்து முகத்தில் மாஸ்க் போடும்போது முகத்திற்கு இறுக்கம் கிடைக்கும்.
* மூச்சை உள்ளே இழுத்து விடும் பயிற்சி மூலமாக முகத்திற்கு புத்துணர்ச்சி தரலாம்.
அழகு நிலையங்களில் ஃபேஸ் லிஃப்டிங் செய்யும் முறை
* முதலில் சருமத்தில் இருக்கும் அழுக்கை நீக்க முகத்திற்கு இரண்டு அல்லது மூன்று நிமிடம் கிளென்சிங் செய்வார்கள்.
* அடுத்தது டோனர் அப்ளை செய்யப்பட்டு அதன்மேல் என்சைம் மாஸ்க்(Enzeym) போடப்படும்.
* ஐந்து நிமிட இடைவெளிக்குப் பிறகு இரண்டு நிமிடங்கள் தொடர்ந்து மசாஜ் கொடுக்கப்படும்.
* எண்ணை பசை கொண்ட சருமத்திற்கு க்ரீமை பயன்படுத்தியும், வறண்ட சருமமாக இருந்தால் ஜெல்லை பயன்படுத்தியும் ஸ்க்ரப் செய்யப்படும்.
* தொடர்ந்து மசாஜ் க்ரீம் கொண்டு முகத்திற்கு மசாஜ் தர வேண்டும்.
* ஸ்கின் டைட்டனிங் ஜெல்லைத் தடவி கெல்வானிக் மெஷின் கொண்டு, முகத்தில் சதை தொங்கும் அளவினைப் பொறுத்து செட் செய்து மசாஜ் கொடுக்கப்படும்.
* இறுதியாக டபுள் மாஸ்க் போடுதல் வேண்டும்.
* முதலில் ஜெல் மாஸ்க் மிகவும் மெல்லிதாக இருக்கும். அதை போட்டு சிறிது இடைவெளியில் இரண்டாவதாக ஃபீல் ஆஃப் மாஸ்கினை அதற்கு மேல் போடுதல் வேண்டும்.
அடுத்த இதழில்…உடலில் இருக்கும் ரோமத்தை அகற்றும் ‘பாடி வாக்ஸிங்’முறை…
Average Rating