உயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி!! (மருத்துவம்)
அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய் வகையை சேர்ந்த முள்ளங்கி எப்போதும் எளிதாக கிடைக்க கூடியது. இதில் சுவை மட்டுமல்ல மருத்துவ குணங்களும் ஏராளம். எனவே உணவாக மட்டுமின்றி முள்ளங்கி மருந்தாகவும் பயன்படுகிறது. இதில் உள்ளசத்துக்கள் ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்க செய்கிறது. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி மஞ்சள் காமாலை வராமல் பாதுகாக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. முள்ளங்கியில் வைட்டமின் சி, உள்ளிட்ட சத்துகள் அதிகம் உள்ளது. முள்ளங்கி இலைகளும் மருத்துவ மகத்துவம் கொண்டது. கல்லீரலை பாதுகாக்கிறது. தொடர்ந்து பயன்படுத்தும் போது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் திறன் கொண்டது.
முள்ளங்கியை பயன்படுத்தி பசியைத்தூண்டும் மருத்துவம் குறித்து அறிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: முள்ளங்கி, சீரகம், மஞ்சள். செய்முறை: முள்ளங்கியை சுத்தம் செய்து அதை விழுதாக அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். ெகாதிக்கும் அந்த நீரில் அரைத்த முள்ளங்கி விழுது சேர்த்து கொதிக்கவிடவும். அதனுடன் சீரகம், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி குடித்து வர உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். நச்சுக்களை வெளியேற்றி ஈரலை பலப்படுத்தும். பசியை தூண்டும். ரத்தம் மற்றும் ஜீரணப்பாதையை சுத்தப்படுத்துகிறது.
மலச்சிக்கலை போக்குகிறது. மஞ்சள் காமாலை வராமல் பாதுகாக்கிறது. முள்ளங்கியை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னைகளுக்கு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: முள்ளங்கி விதை(நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்), கருஞ்சீரகம், பனங்கற்கண்டு. செய்முறை: முள்ளங்கி விதைப்பொடி ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து அதனுடன் அரை ஸ்பூன் கருஞ்சீரகம், சிறிது பனங்கற்கண்டு சோ்த்து நீர் விட்டு கொதிக்க விடவும். அதை வடிகட்டி உணவுக்கு முன்பு இரு வேளை தொடர்ந்து குடித்துவர பெண்களின் மாதவிலக்கு பிரச்னைகள் சீராக்கி முறைப்படுத்தும். இது அல்சருக்கும் அருமருந்தாக உள்ளது.
அல்சர் மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்: முள்ளங்கி, கெட்டி தயிர், உப்பு.செய்முறை: முள்ளங்கியை துருவி பிழிந்து சாறு எடுக்கவும். 50 முதல் 100 மில்லி அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். இதனுடன் கெட்டி தயிர் சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் குடித்துவர அல்சர், மூலம், வெள்ளை போக்கு பிரச்னைகள் சரியாகும். சிறுநீர் கற்களை கரைத்து வெளியேற்றும். சிறுநீர் தாரை எரிச்சலை போக்கும். ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்க செய்யும். பித்த சமனியாக விளங்குகிறது.
வெண்புள்ளிகளை போக்கும் முள்ளங்கி மருத்துவம். தேவையான பொருட்கள்: முள்ளங்கி விதை, இஞ்சி. செய்முறை: முள்ளங்கி விதைகளை பொடியாக்கி அதனுடன் இஞ்சி சாறு கலந்து வெண்புள்ளிகள் உள்ள இடங்களில் தடவிவர அவை மறையும். முள்ளங்கி இலைகளை பொரியலாக்கி சாப்பிட சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. எனவே எளிதில் கிடைக்கும் முள்ளங்கியை முடிந்தஅளவு அன்றாட உணவில் சேர்த்து பயன்பெறுவோம். இனி திடீர் தும்மலை போக்கும் மருத்துவம். இதற்கு தேவையான பொருட்கள்: தூதுவளைபொடி, மிளகுப்பொடி, தேன். செய்முறை: தூதுவளைபொடி, மிளகுப்பொடி, சமஅளவு எடுத்து தேன் கலந்து சாப்பிட தும்மல் போகும். சுடுநீரிலும் கலந்து சாப்பிடலாம்.
Average Rating