மாதவிலக்கு கோளாறை போக்கும் மலைவேம்பு!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பாதுகாப்பான பக்கவிளவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வயிற்று பூச்சிகளை வெளியேற்ற கூடியதும், ஈரலுக்கு பலம் தரவல்லது, மாதவிலக்கை முறைப்படுத்ததும் தன்மை கொண்டதும், புண்களை ஆற்றக்கூடியது, காய்ச்சலை தணிக்க கூடியதுமான மலைவேம்புவின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது மலைவேம்பு. இது, நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை போக்கும் தன்மை உடையது. மாதவிலக்கை முறைப்படுத்த கூடியதாக விளங்குகிறது. மலட்டு தன்மை போக்கும் அற்புதமான மருந்தாகிறது. மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலியை சரிசெய்கிறது. ஈரலுக்கு பலம் தருகிறது. சிறுநீரை பெருக்கிறது. கற்களை கரைக்கிறது.
மலைவேம்பு இலைகளை பயன்படுத்தி மாதவிலக்கு கோளாறுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மலைவேம்பு இலை, மிளகு, சீரகம், தேன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதனுடன் ஊறவைத்த நெல்லி வற்றலை சேர்க்கவும். ஒருபிடி மலைவேம்பு இலை, மிளகுப்பொடி, சீரகப்பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து கலந்து குடித்துவர மாதவிலக்கு கோளாறு விலகிப்போகும். ஈரலுக்கு பலம் கொடுப்பதாக இது அமைகிறது. வயிற்று பூச்சிகளை வெளியேற்றும். வலி நிவாரணியாக விளங்குகிறது.
மலைவேம்பு இலைகளை பயன்படுத்தி பேன் தொல்லையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மலைவேம்பு இலை, தேங்காய் எண்ணெய். செய்முறை: சிறிது தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் இலை பசை சேர்த்து களி பதத்தில் கிளறவும். சூடானதும் இதை எடுத்து ஆறவைத்து, பின்னர் தலையில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளித்துவர பேன்கள் இல்லாமல் போகும். வாதத்தினால் உண்டாகும் தலைவலி குணமாகும். தலையில் ஏற்படும் சொரியை சரிசெய்யும். இளநரையை போக்கும் அற்புதமான மருந்தாக இது விளங்குகிறது.
மலைவேம்பு இலையை பயன்படுத்தி புண்களை ஆற்றும் தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மலைவேம்பு இலைகள், நல்லெண்ணெய், மஞ்சள், எலுமிச்சை. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் எடுக்கவும். இதனுடன் மலைவேம்பு இலை பசையை சேர்த்து கலக்கவும். இதில், எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதை தைலப்பதத்தில் காய்ச்சி மஞ்சள்பொடி சேர்க்கவும். இந்த தைலம் ஆறாத புண்கள், பூஞ்சை காளான்களால் ஏற்படும் தொற்று, சேற்று புண்களுக்கு மேல்பூச்சாக பயன்படுகிறது. தொழுநோய் புண்களை ஆற்றும் அற்புத மருந்தாகிறது.
புற்றுநோய் புண்களை கூட ஆற்றும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட மலை வேம்பு, உள் மருந்தாகி கற்களை கரைக்கிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. காய்ச்சலை போக்குகிறது. மேல் மருந்தாகி ஆறாத புண்களை ஆற்றுகிறது. கண்களை சுற்றி ஏற்படும் கருவளையத்துக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: நந்தியாவட்டை பூக்கள், தேங்காய் எண்ணெய். செய்முறை: நந்தியாவட்டை பூக்களை தேங்காய் எண்ணெய்யில் இட்டு 4 நாட்கள் சூரிய வெளிச்சத்தில் வைத்து, அந்த எண்ணெய்யை கண்களை சுற்றி பூசிவர கருவளையம் இல்லாமல் போகும்.
Average Rating