விஷத்தை முறிக்கும் நாய்துளசி!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 24 Second

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிதான மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில் விஷத்தை முறிக்க கூடிய தன்மை கொண்டதும், படை, சொரி, சிரங்கு உள்ளிட்ட தோல் நோய்களை போக்க கூடியதும், சளி, இருமலுக்கு மருந்தாவதும், எவ்வித காய்ச்சலையை குணப்படுத்த கூடியதுமான நாய் துளசியின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.

தோட்டம், புல்வெளி, வாய்க்கால் ஓரங்களில் காணப்படும் மூலிகை நாய் துளசி. பல்வேறு நன்மைகளை கொண்ட இது, வயிற்றில் சேர்ந்திருக்கும் வாயுவை வெளியேற்றும். காய்ச்சலை தணிக்கும் தன்மை கொண்டது. இருமலை இல்லாமல் செய்கிறது. நாய் துளசியை மேல்பற்றாக போடும்போது விஷ முறிவாக பயன்படுகிறது. பாம்பு, தேள், வண்டு கடியின்போது, இதை மேலே பூசுவதால் வலி, வீக்கம், எரிச்சல் இல்லாமல் போகும்.

நாய் துளசியை பயன்படுத்தி சளி, இருமல், காய்ச்சல், வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நாய் துளசி, சுக்கு, மிளகு, பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுக்கவும். இதில் 2 ஸ்பூன் நாய் துளசி இலை சாறு ஊற்றவும். இதனுடன் சிறிது மிளகுப்பொடி, சுக்குப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர், இதை வடிகட்டி காலை, மாலை என இருவேளை குடித்துவர சளியை கரைத்து வெளியே தள்ளும். இருமலை தணிக்கும் மருந்தாக இது விளங்குகிறது. எவ்வித காய்ச்சலையும் குணப்படுத்தும். நுண்கிருமிகளை நீக்குவதோடு, உடலில் ஏற்படும் வலியை குறைக்கிறது.

நாய் துளசி இலைகளை பயன்படுத்தி படை, சொரி, சிரங்கு உள்ளிட்ட தோல் நோய்களுக்கான மேல் பூச்சு மருந்து தயாரிக்கலாம்.தேவையான பொருட்கள்: நாய் துளசி இலைகள், தேங்காய் எண்ணெய். செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விடவும். இதனுடன் நாய் துளசி இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இந்த தைலத்தை தோலில் ஏற்படும் படைக்கு மேல்பூச்சாக பயன்படுத்தலாம். இது, தோலில் ஏற்படும் தடிப்பு, அரிப்பு, எரிச்சல், வலியை குணமாக்கும். படை, சொரி, சிரங்கு போன்ற தோல்நோய்கள் சரியாகும். வண்டு, தேள் கடியால் ஏற்படும் தடிப்பு, எரிச்சல் குணமாகும்.
அற்புத மருத்துவ குணங்களை உடைய நாய் துளசியானது, ஒவ்வாமையால் ஏற்படும் அரிப்பு, தடிப்பை சரிசெய்யும். துளசியை போன்று மணம் கொடுக்க கூடியது.

நாய் துளசியை கொண்டு வண்டு, பூச்சிக்கடிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நாய் துளசி, சுண்ணாம்பு. செய்முறை: சிறிது சுண்ணாம்புடன் நாய் துளசி இலை சாறு சேர்த்து கலந்து பூச்சி கடித்த இடத்தில் பூசிவர பூச்சிக்கடி சீக்கிரம் குணமாகும். வலி, வீக்கம் குறையும். எளிதாக கிடைக்கும் இந்த மூலிகை விஷத்தை முறிக்க கூடிய தன்மையை கொண்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாதவிலக்கு கோளாறை போக்கும் மலைவேம்பு!! (மருத்துவம்)
Next post கைய புடிச்சு இழுத்தியா ? என்ன கைய புடிச்சு இழுத்தியா ?? (வீடியோ)