நோ மேக்கப் லுக்!! (மகளிர் பக்கம்)
கண் முன்னே நாம் பார்க்க செலிபிரிட்டியாய் வலம் வரும் பலர் எப்படி இத்தனை ப்ளாலெசாக இருக்காங்க… அதெப்படி இவர்களுக்கு மட்டும் இத்தனை அழகா மினுமினுப்பான ஸ்கின் நேச்சுரலாக அமையுது. மேக்கப் போட்ட மாதிரியே சுத்தமாகத் தெரியலையே. மேக்கப் போட்டிருக்காங்களா? இல்லை ஒரிஜினல் ஸ்கின்னா..? இப்படியான பல சிந்தனைகள் எட்டிப் பார்க்க, அப்படியான ஒரு ‘நோ மேக்கப் லுக்’ குறித்து நம்மிடம் பேசத் தொடங்கினார் செலிபிரிட்டி மேக்கப் ஆர்டிஸ்ட் ஃபாத்திமா மூவா. சுருக்கமா சொல்லனும்னா மேக்கப் போட்டும் போடாத மாதிரியே காட்றதுதான் ‘நோ மேக்கப் லுக்’ என்கிறார் சிரித்தபடி.
‘‘மேக்கப் பண்றதுக்கு முன்னாடி வழக்கமா எல்லாரும் செய்யுற மாதிரி முகத்தைக் கழுவியதும் உடனே மேக்கப் ஆரம்பிக்கக் கூடாது. அப்படி செய்தால் நன்றாகவே இருக்காது. இது தவறான செயல்’’ என்ற ஃபாத்திமா, ‘‘நான் சொல்லும் இந்த ரெண்டு ஸ்டெப்பை மட்டும் செய்துவிட்டு அதன் பிறகு மேக்கப் போட்டால் நீங்க போடுற மேக்கப் உங்களுக்கு ரொம்பவே சப்போர்டிவா பார்க்க அழகா மென்மையான லுக் கொடுக்கும்’’ என்றவர் மேலே தொடர்ந்தார்.
‘‘மேக்கப் போட்டும் போடாத லுக்கை பெற, முதலில் சருமத்தை முறையான சில விசயங்கள் செய்து ரெடி பண்ணணும். மேக்கப் போடுவதற்கு முன்பே ஸ்கின் எக்ஸ்ஃபாலியேஷன் (exfoliation) அண்ட் ஹைட்ரேஷன்(hydration) இரண்டையும் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது ஸ்கின் ரொம்பவே மினுமினுப்பாக இருக்கும்.
எக்ஸ்ஃபாலியேஷன் என்பது மேக்கப் முன்பு செய்ய வேண்டிய மிக முக்கியமான ஒரு ஸ்டெப். இதைச் செய்வதால் தோலில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். சருமத்தில் உள்ள தேவையற்ற ப்ளாக் லேயர் மற்றும் டாப் லேயர்கள் தானாய் வெளியேறி மினுமினுப்பாகவும்,பளிச்சென்று மாறும். 21 நாட்களுக்கு ஒரு முறை நமது சருமம் இயல்பா இறந்த செல்களை தானாகவே வெளியேற்றும்.
சில நேரங்களில் அவை முழுமையாய் வெளியேறாமல், தோல் வறண்டு மெல்லிசாய் தோன்றும். இந்த நிலையில் அதன்மேல் மேக்கப் போடும்போது, மேக்கப் உள்வாங்காமல், ஆங்காங்கே முகத்தில் திட்டு திட்டாக வெளிப்படும். எனவே ஸ்கின்னை எக்ஸ்ஃபாலியேஷன் செய்வது ரொம்பவே முக்கியம். இது ஸ்கின் கேர் பாதுகாப்பில் செய்ய வேண்டிய முக்கியமான ஸ்டெப்.
இரண்டாவது ஹைட்ரேஷன். உங்கள் சருமம் வறண்டதோ அல்லது எண்ணைத் தன்மையோ எதுவாக இருந்தாலும் சருமத்தை ஹைட்ரேட் செய்தால் ஸ்கின் மென்மையாகும். ஹைட்ரேஷனுக்கு என மாஸ்க் விற்பனையில் உள்ளது. துணி மாஸ்க் மாதிரியே ஈரமாக இருக்கும். அதனை முகத்தில் போட்டுக்கொண்டு பதினைந்து நிமிடம் கழித்து நீக்கினால், டீப் மாய்சரைஸிங் எஃபெக்ட்டினை சருமத்திற்குக் கொடுக்கும். மாஸ்க்கை நீக்கி டிஸ்யூ பேப்பரால் முகத்தில் இருக்கும் ஈரப்பதத்தினை ஒற்றி எடுக்கலாம். எந்தக் காரணம் கொண்டும் முகத்தைக் கழுவுதல் கூடாது. உங்கள் சருமத்தில் மினுமினுப்பான மென்மையான ஃபீல் உடனே கிடைக்கும்.
மேலே சொன்ன இரண்டு ஸ்டெப்பும் கட்டாயம் மேக்கப் போடுவதற்கு முன்பு செய்யப்பட வேண்டியது’’ என்றவர் தொடர்ந்தார்… ‘‘அடுத்ததாக மாய்ச்சரைஸ் ஸ்டெப். இது நம் சருமத்தின் வயதைக் குறைத்துக் காட்டும். சருமம் ஈரப்பதத்தில் இருக்கும் நிலையில் மாய்ச்சரைஸ் பயன்படுத்தும்போது சுலபமாக உள் வாங்கும். இதனால் சருமம் மிருதுவாக இருக்கும். மாய்ச்சரைஸர் தேர்வும் சருமத்தின் தன்மைக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
வறண்ட சருமம் என்றால் கிளிசரின் மற்றும் எண்ணை தன்மை அதிகம் கொண்ட மாய்ச்சரைசர்ஸ் தேவைப்படும். எண்ணை சருமம் என்றால் ஆயில் ஃப்ரீ மாய்ச்சரைஸ் அதாவது தண்ணீர் அல்லது ஜெல் தன்மையுடைய மாய்ச்சரைசர்ஸ் பயன்படுத்தலாம். சென்சிட்டிவ் ஸ்கின் உள்ளவர்கள் ஆல்ஹகால் அல்லது ஃப்ராக்ரன்ஸ் ஃப்ரீ மாய்ச்சரைசர்ஸ் பயன்படுத்தலாம். மாய்ச்சரைசரை சருமத்தில் தடவிய பிறகு அதை அப்படியே 2 அல்லது மூன்று நிமிடம் விட்டுவிடவேண்டும். அப்போதுதான் தோல் அதனை நன்றாக உள்வாங்கும்.
மேலே சொன்ன அனைத்துமே மேக்கப் போடுவதற்கு முன்பு நமது சருமத்தை ரெடி செய்வதற்கான முன்னெடுப்பு.இனி மேக்கப் ஸ்டெப்ஸ்…மேக்கப்பிற்கு முதல் தேவை ப்ரைமர். இது ரொம்ப ரொம்ப முக்கியமானது. இதுவும் சருமத்தின் தன்மைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்க வேண்டும். வறண்ட சருமத்திற்கு ரேடியன் மற்றும் மாய்ச்சரைசர் ப்ரைமர்.
எண்ணெய் தன்மை சருமத்திற்கு சிலிக்கான் பேஸ்ட், ஆயில் ஃப்ரீ மற்றும் மேட்டிபையிங் ப்ரைமர்ஸ் பயன்படுத்தலாம். காம்பினேஷன் ஸ்கின் உள்ளவர்களுக்கு இரண்டும் தேவைப்படும். ‘டி’ ஜோனில் அதாவது நெற்றி மற்றும் மூக்கு பகுதியில் ஆயில் ஃப்ரீ ப்ரைமரையும், மற்ற இடங்களில் மாய்ச்சரைசர் அல்லது ரேடியன்ட் ப்ரைமரை பயன்படுத்தலாம்.
ஒருத்தரை நேரில் பார்க்கும்போது மேக்கப் போட்டு இருக்காங்களா இல்லை இவரின் ஸ்கின்னே இப்படித்தானோ என யோசிக்க வைக்க வேண்டும் என்றவர் அடுத்த கட்டத்திற்குள் நம்மை அழைத்துச் சென்றார். அடுத்தது கன்சீலிங். கன்சீலிங் என்பது சருமத்தில் இருக்கும் கறைகள், பிக்மென்டேஷன், தளும்புகள், பரு, மரு போன்றவற்றை மறைப்பது. அந்த இடங்களில் கன்சீலரை விரலால் எடுத்து நன்றாக சருமத்துடன் தேய்க்க ேவண்டும்.
அடுத்தது ஃபவுண்டேசன். ஸ்கின் டோனுக்கு ஏற்ப இது பல வகையில் உள்ளது. இதையும் சருமத்திற்கு ஏற்ப ேதர்வு செய்ய வேண்டும். ஸ்பான்ைஜ ஈரமாக்கி இறுக்கி பிழிந்த பிறகு ஒரு டிராப் போட்டு சருமத்தில் சமமாக பரவும்படி செய்யவும்.கிளியர் ஸ்கின் உள்ளவர்களுக்கு
ஃபவுண்டேசன் தேவையில்லை.தொடர்ந்து க்ரீம் பேஸ்ட் ஹைலைட்டிங், க்ளோயிங் லிப்ஸ்ஸ்டிக் போட்டு முடித்தால் செலிபிரிட்டி ஸ்கின் சைனிங் லுக்கோடு நீங்கள் வெளியே செல்லத் தயார்.
பேஸ் ப்ரைமர், கன்சீலர், ஃபவுண்டேசன், ஹைலைட்டர், லிப்ஸ்டிக், மஸ்காரா இதெல்லாம் போட்டு முடித்ததும், இறுதியாக எண்ணை சருமம் உள்ளவர்கள், ஸ்கின் டோனுக்கு மேட்ச் ஆகும் மேக்கப் செட்டிங் பவுடரை பிரெஷ் வைத்து முகம் முழுவதும் லைட் டச் செய்யவும். வறண்ட சருமத்திற்கு இது தேவையில்லை.
எந்த மேக்கப் சார்ந்த பொருட்களை பயன்படுத்தினாலும் சிறிய அளவில் எடுத்து பயன்படுத்தினாலே போதும். நிகழ்ச்சிக்கு மட்டுமல்ல, அலுவலகம் செல்பவர்களும் நோ மேக்கப் லுக்கை தாராளமாகப் பின்பற்றலாம். இப்போதெல்லாம் கல்யாண மணப் பெண்களும் ‘நோ மேக்கப் லுக்’ அதாவது நான் மேக்கப் போட்ட மாதிரியே தெரியக் கூடாது என்றே அணுகுகிறார்கள்’’ என முடித்தார்.
டிப்ஸ்
* பகல் நேரங்களில் ஹைலைட்டர் தேவையில்லை. இரவு நேரங்களில் க்ரீம் ஹைலைட்டரை பயன்படுத்தும் போது இரவு நேர வெளிச்சத்திலும் சருமம் மின்னும்.
* கிளாஸி எஃபெக்ட் கொண்ட லிப்ஸ்டிக், உங்களின் உதட்டினை கூடுதல் எடுப்பாகக் காட்டும்.
* கிளாஸி மஸ்காரா, உங்கள் கண்கள் மேலும் பெரிதாகவும், பவர்ஃபுல்லாகவும்எடுத்துக் காட்டும்.
Average Rating