வீடு தேடி வரும் பார்லர்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 39 Second

பெண்கள் எப்போதும் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள விரும்புவார்கள். இவர்களுக்காகவேதான் இப்போது ஒவ்வொரு தெருவிலும் அழகு நிலையங்கள் இயங்கி வருகின்றன. ஒரு முறை சென்றால் குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் வரை அங்கு செலவிட வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி அலுவலகம் செல்லும் பெண்களாக இருந்தாலும், தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் தயங்குவதில்லை.

ஆனால் இப்போது இருக்கும் அவசர காலக்கட்டத்தில் வேலைக்கு போகும் பெண்களோ வீட்டில் இருக்கும் தாய்மார்கள் யாராக இருந்தாலும், அழகு நிலையம் சென்று தங்களுக்கானதை செய்துகொள்ள அதிக நேரம் இருப்பதில்லை. காரணம் வேலை காரணமாக ஏற்படும் ஒரு விதமான சோம்பல்.

அதே சமயம் இந்த சேவை அனைத்தும் அவர்கள் வீட்டை தேடி வந்தால் யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள். வீட்டில் ஓய்வு எடுத்தது போல் ஆச்சு, அதே சமயம் தங்களையும் அழகுப்படுத்திக் கொள்ளலாம். இவர்களுக்காகவே இப்போது பியூட்டி ஆப்கள் வந்துவிட்டன. தங்களுக்கு தேவையான சேவை என்ன என்று பதிவு செய்து விட்டால் போதும், குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் வீடு தேடி வந்து நீங்கள் விரும்பும் சேவை செய்து தருகிறார்கள். அப்படி செய்யக்கூடிய ஆப்கள் என்ன என்று பார்ப்போம்.

LOKACI

பொதுவாக அழகு நிலையத்தில் ஃபேஷியல், ஹேர்ஸ்டைலிங், புருவம் திருத்தம் போன்றவற்றை தான் பெண்கள் செய்து கொள்வார்கள். மணப்பெண் என்றால், மணப்பெண் அலங்காரம் செய்யலாம். ஒரு சில ஹைடெக் அழகு நிலையத்தில் ஸ்பா வசதியும் உண்டு. இவை அனைத்தையும் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப உங்கள் வீட்டிலேயே செய்யலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டும் தான். LOKACI ஆப்பினை உங்கள் செல்ேபானில் தரவிறக்கம் செய்து, பதிவு செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு உங்களின் சேவை என்று குறிப்பிட்டால், அதனை உங்கள் வீட்டுக்கே வந்து செய்து தருவார்கள். சிலர் பார்லருக்கு சென்று செய்து கொள்ள விரும்புவார்கள். ஆனால் அவர்கள் வீட்டுக்கு அருகே எந்த பார்லரில் என்ன வசதியுள்ளது என்று தெரியாது. அதற்கான தீர்வும் இந்த ஆப் மூலம் பெறலாம். இந்த ஆப்பில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் உங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் அழகு நிலையங்கள் பற்றிய தகவல்களும் இதில் வெளியாகும். அதன் மூலம் எந்த பார்லரில் என்ன சேவை செய்யலாம் என்று பதிவு செய்து கொள்ளுங்கள்.

முக்கிய அம்சங்கள்

* ஒரே நேரத்தில் பலதரப்பட்ட அழகு நிலையங்கள் பற்றிய விவரங்கள் மட்டும் இல்லாமல் அங்கு ஒவ்வொரு சேவைக்கான கட்டணம் குறித்த தகவல்கள்.

* ஆண், பெண், குழந்தைகள் என்று அவரவர் தேவைக்கு ஏற்ப பார்லர்களை தேர்வு செய்யலாம்.

* கட்டணத்தை ஆன்லைன் முறையிலும் செலுத்தலாம்.

* சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வசதியும் உண்டு.

இனி பார்லர் சென்று கியூவில் நிற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலேயே அந்த அனுபவத்தை பெறலாம்.

அட் ஹோம் திவா

பொதுவாகவே பார்லருக்கு ெசல்லும் போது, அங்கு முன்பே அப்பாயின்ட்மென்ட் பெற வேண்டும். அப்படியே கிடைச்சாலும், நாம் சொல்லும் நேரத்தில் அங்கு சேவைகள் செய்யப்படுமா என்பது சந்தேகம். சிலர் நேரடியாக சென்று பார்க்கலாம் என்று நினைப்பார்கள். அவ்வாறு சென்றால் சில மணி நேரம் காத்திருந்து தான் நமக்கான சேவையை பெறமுடியும்.

இனி இது போன்ற பிரச்னை இல்லை. ஒரு விரல் தட்டினால் போதும், நாம் விரும்பும் நேரத்தில் விரும்பிய இடத்தில் நமக்கான அழகு சார்ந்த சேவைகள் செய்ய அட் ஹோம் திவா ஆப் மூலம் நிபுணர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த ஆப்பின் சிறப்பம்சங்கள்

* வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் என எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு பலதரப்பட்ட சலுகைகள் பெறலாம்.

* உயர் ரக அழகுசாதன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.

* அம்சமான பேக்கேஜ்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.

* உங்களின் நேரத்திற்கு ஏற்ப சேவைகளை பதிவு செய்து கொள்ளலாம்.

* முதல் பதிவின் போது ரூ.500 தள்ளுபடியும் பெறலாம்.

* வார நாட்களில் 1500 ரூபாய்க்கு மேல் என்றால், 30%, மற்றும் 2500 ரூபாய்க்கு மேல் என்றால் 40% சலுகை உண்டு.

* உங்கள் நண்பர்களை பரிந்துரைப்பது மூலம் ரூ.200 சலுகை பெறலாம்.

* புருவம் திருத்துதல் முதல் ஹேர் ஸ்பா மற்றும் பாடி பாலிஷ் வரை அனைத்து ரக அழகு சார்ந்த சேவைகள் உங்கள் வீட்டிற்கே வந்து வழங்கப்படும்.

* ஆப்பினை டவுண்லோட் செய்து உங்களுக்கான சேவையை பதிவு செய்யுங்கள்.

கெட் லுக் பியூட்டி சர்வீஸ்

உங்கள் வீட்டுக்கு அருகேயுள்ள சிறந்த அழகுக் கலை நிபுணர்களை நீங்கள் இருக்கும் இடத்திற்கே வரவைக்கும் ஆப் தான் கெட் லுக் பியூட்டி ஆப். வேறு ஹேர்ஸ்டைல் மாற்ற வேண்டுமா? உங்கள் உடலுக்கு மசாஜ் செய்ய ேவண்டுமா? ெமனிக்யூர், பெடிக்யூர் செய்ய வேண்டுமா? பார்ட்டிக்கு அலங்காரம் செய்ய வேண்டுமா? எதுவாக இருந்தாலும், வீட்டிற்கே வந்து செய்து தரப்படும். பேஷியல், பிளீச், வாக்சிங், ஹேர்கட், ஹேர் கலரிங், ஸ்பா, மசாஜ், மணப்பெண் அலங்காரம் என அனைத்து பார்லர் மற்றும் சலூன் சேவைகள் செய்து தரப்படும்.

அர்பன் கிளாப் பியூட்டி மற்றும் ஹோம் சர்வீஸ்

அர்பன் கிளாப் இந்தியாவின் மிகப் பெரிய ஹோம் சர்வீஸ் ஆப். இந்த ஆப் மூலம் உங்கள் வீட்டுக்குத் தேவையான எல்லாவிதமான சேவைகளையும் பதிவு செய்து அனுபவிக்கலாம். அது அழகு சார்ந்த விஷயமாக இருக்கட்டும். அல்லது தச்சு, எலக்ட்ரீஷியன் மற்றும் பிளம்பர் போன்ற வீட்டு பழுது மற்றும் பராமரிப்பு சேவைகள் எதுவாக இருந்தாலும் இந்த ஆப்பில் பதிவு செய்தால் போதும். இவர்கள் அளிக்கும் சேவைகள் என்ன என்று தெரிந்துகொள்ளலாம்.

பியூட்டி அண்ட் வெல்நெஸ் : பார்லர் சேவைகள், ஸ்பா, பார்ட்டிக்கான மேக்கப், மசாஜ் மற்றும் ஹேர்கட்.ஹெல்த் அட் ஹோம் : யோகா மற்றும் பிட்நெஸ் பயிற்சிகள்பழுது மற்றும் பராமரிப்பு : எலக்ட்ரிஷியன், பிளம்பர், தச்சு வேலை, ஏ.சி, வாஷிங் மெஷின், சிம்னி, குளிர்சாதனப் ெபட்டி, ஆர்.ஓ வாட்டர் ப்யூரிபையர், மைக்ரோவேவ், கீசர் போன்ற அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களை பழுது பார்ப்பது மற்றும் பராமரிப்பு.சுத்தம் மற்றும் பூச்சி கட்டுப்பாடு கழிவறை சுத்தம் செய்தல், சோஃபா, கார்பெட், சமையல் அறை, கார் போன்றவற்றை சுத்தம் செய்தல், கரையான் மற்றும் கரப்பான் பூச்சி கட்டுப்பாட்டு சேவை.

வீடு சார்ந்த சேவைகள் : வீட்டுக்கு சுண்ணாம்பு அடிப்பது மற்றும் வேறு வீட்டுக்கு மாற்றம் செய்யும் போது பொருட்களை கொண்டு செல்வது.இது போன்ற 50க்கும் மேற்பட்ட சேவைகளை இந்த ஆப் வழங்கி வருகிறது. ேமலும் இதனை செய்பவர்கள் அனைவரும் கைதேர்ந்த நிபுணர்கள் என்பதால், அவர்கள் அளிக்கும் சேவைகளும் தரமான முறையில் இருக்கும். தற்போது தில்லி, பெங்களூரூ, மும்பை, சென்னை, ஐதராபாத், பூனா, ஜெய்ப்பூர்,ெ கால்கத்தா, லக்னோ, துபாய், அபுதாபி, குர்கான்… என பல இடங்களில் இந்த ஆப்பின் சேவை இயங்கி வருகிறது.

யெஸ் மேடம் – பியூட்டி அண்ட் வெல்நெஸ்

உங்கள் வீட்டு வாசலில் உங்களுக்கு தேவையான அழகு சேவைகளை அள்ளித் தரும் ஆப் தான் யெஸ் மேடம். சரும பராமரிப்பு, ஹேர்ஸ்டைல் மற்றும் ஸ்பா என அனைத்து வசதிகளும் உங்கள் இல்லத்திற்கே வந்து செய்து தரப்படும். சிலர் ஒரு சில அழகு சாதனப் பொருட்கள் தான் பயன்படுத்துவார்கள். வேறு பயன்படுத்தினால் அவர்களுக்கு அலர்ஜி ஏற்படும் வாய்ப்புள்ளது.

அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களின் அழகு சாதனப் பொருட்களை கொண்டே சரும பராமரிப்பு செய்து தரப்படும். மேலும் அதற்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். இந்த ஆப்பினை பயன்படுத்துவது மிகவும் சுலபம். உங்களின் செல்போனில் ஆப்பினை டவுண்லோட் செய்யுங்கள். பிறகு உங்களுக்கு தேவையான சேவை என்ன என்று பதிவு செய்து மகிழுங்கள்.

யெஸ் மேடம் – பியூட்டி அண்ட் வெல்நெஸ்

உங்கள் வீட்டு வாசலில் உங்களுக்கு தேவையான அழகு சேவைகளை அள்ளித் தரும் ஆப் தான் யெஸ் மேடம். சரும பராமரிப்பு, ஹேர்ஸ்டைல் மற்றும் ஸ்பா என அனைத்து வசதிகளும் உங்கள் இல்லத்திற்கே வந்து செய்து தரப்படும். சிலர் ஒரு சில அழகு சாதனப் பொருட்கள் தான் பயன்படுத்துவார்கள். வேறு பயன்படுத்தினால் அவர்களுக்கு அலர்ஜி ஏற்படும் வாய்ப்புள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களின் அழகு சாதனப் பொருட்களை கொண்டே சரும பராமரிப்பு செய்து தரப்படும். மேலும் அதற்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

இந்த ஆப்பினை பயன்படுத்துவது மிகவும் சுலபம். உங்களின் செல்போனில் ஆப்பினை டவுண்லோட் செய்யுங்கள். பிறகு உங்களுக்கு தேவையான சேவை என்ன என்று பதிவு செய்து மகிழுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 18 வயசுலே மேக்கப் போட்டுக்கலாமா? (மகளிர் பக்கம்)
Next post சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் கட்டுக்கொடி!! (மருத்துவம்)