52 மாடி கட்டடத்தில் விமானம் மோதி விபத்து
நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் 52 மாடி கட்டடத்தில் சிறிய விமானம் மோதியதில் பலர் பலியாகினர். தீவிரவாதிகள் தாக்குதலோ என பீதி ஏற்பட்டதால் நியூயார்க் நகரில் போர் விமானங்கள் வானில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. நியூயார்க்கைச் சேர்ந்த பேஸ்பால் வீரர் கோரி லிட்டில் தனது சிறிய ரக விமானத்தில் மன்ஹாட்டன் பகுதியில் பறந்து கொண்டிருந்தார். அப்போது அந்த விமானம் எதிர்பாராதவிதமாக 52 மாடிக் கட்டடம் ஒன்றின் மோதியது.
இதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. கட்டடத்தின் சில மாடிகளும் சேதமடைந்து தீப்பிடித்து எரிந்தன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நியூயார்க் இரட்டை கோபுரம் விமானம் மூலம்தான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. இதேபோல இந்த சம்பவம் நடந்ததால், தீவிரவாதிகள் தாக்குதலாக இருக்கக் கூடும் என பீதி கிளம்பியது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு அமெரிக்க புலனாய்வு அமைப்பினர், போலீஸார் விரைந்து வந்து சுற்றி வளைத்தனர். போர் விமானங்களும் உஷார்படுத்தப்பட்டன. நியூயார்க் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் போர் விமானங்கள் வான் வழி கண்காணிப்பு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. நடத்திய விசாரணையில் மன்ஹாட்டன் சம்பவம் ஒரு விபத்து என தெரிய வந்தது. வானிலை சரியில்லாத காரணத்தால் விமானம் திசை மாறி கட்டடத்தின் மீது மோதியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் பேஸ்பால் வீரர் லிட்டில் மற்றும் பலர் இறந்துள்ளனர். இதுவரை நான்கு பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரின் 72வது கிழக்குத் தெருவில் விபத்துக்குள்ளான கட்டடம் உள்ளது. இந்த கட்டடம் 1980ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். இங்கு ஏராளமான அபார்ட்மென்ட்டுகள் உள்ளன.
லிட்டில் பயணம் செய்து விபத்தில் சிக்கிய விமானம் நான்கு பேர் அமரக் கூடிய வகையிலான மிகச் சிறிய விமானம் ஆகும். நியூஜெர்சியில் உள்ள டெடர்போரோ விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் கிளம்பியது.
விபத்து குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டோனி பிரேட்டோ கூறுகையில், இந்த விபத்து குறித்து அதிபர் புஷ்ஷுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. விபத்து குறித்த முழு விவரங்களையும் சேகரித்து வருகிறோம் என்றார்.
விபத்தைத் தொடர்ந்து மன்ஹாட்டன் பகுதிக்கு மேல் விமானங்கள் பறக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது. மேலும், நியூயார்க் நகரிலிருந்து கிளம்பும் விமானங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...