மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 10 Second

மரம் வாழ்ந்த பின்பு பலகையாகிறது. சந்தன மரம் மட்டும் வாழ்ந்தபின்பும் சந்தனமாகவே இருக்கிறது. ஒப்பற்ற மனித சமுதாயம் மட்டும் வாழும்போதே மூட்டுவலியால் முக்கி, முனங்கி இயக்கம் தடைப்பட்டு மூலையில் ஏன் முடங்க வேண்டும்.உடல் பருமன் அடைவதுபோல், இதயமும், மூட்டும் பெரிதாவதில்லை. எனவே, அதிக உடல் எடையால் அடிக்கடி மூட்டு வலியால் அவதிப்படும் அன்பர்கள் பலர் உள்ளனர். நெல்லி, கொள்ளு சூப் சாப்பிட மூட்டு வலி குறையும்.

நரம்பு பிடிப்பால் சிதைந்து வரும் மூட்டு வலியை முருங்கையும், முடக்கற்றானும் சரி செய்யும். முறையான தூக்கம், சாந்தி ஆசனம், தியானம், நல்ல இசை, வழிபாடு முதலியவைகளால் அருமையான மனநலம் பெற்று, சுரப்பிகளை சிறப்பாக இயங்க செய்யலாம். குளிர்காலத்தில் உடல் சூடு குறைவதாலும், நரம்பு பிடிப்பு, தசை இறுக்கம் மிகுவதாலும், வேர்வை சுரப்பி, தோல் சுருங்குவதாலும் மூட்டு வலி ஏற்படுகிறது. தரையில் அமர்ந்து வேலை செய்தாலும், உட்கார்ந்தாலும், படுத்தாலும் மூட்டு வீக்கம், வலி, வளையும் தன்மை அதாவது முடக்குவாதம் உண்டாகிறது.பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையால், ரத்த சோகையால் வந்த மூட்டு வலியை மாதுளையும், பேரீட்சையும் சரிசெய்யும்.

கால்சியம் குறைவால், எலும்பு மஜ்ஜை குறைவால் ஏற்படும் வலியை சரிசெய்ய, கீரை சாறு, முந்திரி, கோஸ், முருங்கை, உணவில் சேர்த்து சரிசெய்யலாம். வாயுப்பிடிப்பால் விளைத்திடும் மூட்டு வலியை போக்க பூண்டு, வெங்காய பச்சடி அருந்த வேண்டும்.மூட்டு வலிக்கான காரணங்கள்: அதிகளவில் டீ, காபி அருந்துதல், அதிக அளவு எண்ணெய் உணவுகள் சாப்பிடுதல், கடல் உப்பு, உணவில் அதிகம் சேர்த்தல், வெள்ளை சீனி சேர்த்த இனிப்புகள், பானங்கள் எடுத்தல், அசைவ உணவு, மொச்சை, பட்டாணி, தட்டைபயறு, உருளை பதப்படுத்திய ரசாயன குளிர்பானங்கள் எலும்புகளை உருக்கி சிதைத்து விடுகின்றன.

மன உளைச்சல், மனபயம், மன சோர்வுகளால் தூக்கமின்மை ஏற்பட்டு, சுரப்பிகளின் இயக்கம் சீர்குலைந்தால் மூட்டு வலி அதிகரிக்க வாய்ப்பு உண்டு.எளிய தீர்வுகள்: மூன்றுநாள் உபவாசம் அல்லது பழச்சாறு நோன்பு 30 நாட்களுக்குள் மூட்டுவலியை விரட்டிவிடும். தினமும் மூன்று நிமிடம் முழங்கால் விரல்களில் கொடுக்கும் பயிற்சி, தினமும் மூட்டுகளை சுற்றி ஈரத்துணியால் பட்டி போட்டால் 30 நாளில் குணமாகும்.எண்ணெய் இல்லாத உணவுகள் எவ்வித மூட்டு வலியையும் போக்கும். வெள்ளைப்பூண்டு, முடக்கற்றான் ஆகியவை மூட்டு வலியை ஒட ஒட விரட்டும். வஜ்ஜிராசனம், பத்மாசனம், உட்கடாசனம், தாளாசனமும் கருடாசனம், பாதங்குஸ்தாசனம், படகு ஆசனம், விருச்சிகாசனம் ஆகிய ஆசனங்கள் செய்தபின் சாந்தி ஆசனம் செய்து வந்தால் மூட்டுவலி, உடலை விட்டு ஓடிவிடும். காலை, மாலை கனி உணவு உண்போர் மூட்டு வலியால் கலங்கிட மாட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…? (அவ்வப்போது கிளாமர்)
Next post அடியே அப்படி பொய் தனிய பேசலாமா!! யாராவுது பார்த்தா என்ன நினைப்பாங்க நா வரல!!! (வீடியோ)