ஈராக்கில் பதவியேற்றுள்ள புதிய ஜனநாயக அரசுக்கு துணை நிற்போம் அமெரிக்க அதிபர் ஜோர்ச் புஷ் உறுதி

Read Time:1 Minute, 56 Second

Irak.jpgPush-Usa.jpg

ஈராக் நாட்டின் பிரதமராக நூரி அல் ரூ மாலிக்கி என்பவர் நேற்று பதவியேற்றார். போருக்கு பின் பதவியேற்கும் முழுநேர பிரதமர் மாலிக்கி என்பது குறிப்பிடத்தக்கது. நாட்ட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றுக்குத் தாம்முன்னுரிமை கொடுக்கப் போவதாக மாலிக்கி உறுதி அளித்துள்ளார்.

தொடர்ச்சியான ஜனநாயக நடவடிக்கைகளின் விளைவாக ஈராக்கில் முதன்முதலாக அரசியல் சட்டரீதியான அரசு அமைந்துள்ளது.
இப்போது அமைந்துள்ள புதிய அரசு பல்வேறு சவால்களைச் சந்திக்கவுள்ளது என ஈராக்கில் புதிய அரசு பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்து அமெரிக்க அதிபர் ஜோர்ச் புஷ் அவர்கள் நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த சவால்களை ஈராக் தனியாகச் சந்திக்க வேண்டியதில்லை தீவிரவாதத்துக்கு எதிரான போரில் முக்கிய நாடாக விளங்கும் ஈராக்கிற்கு அமெரிக்காவும் சுதந்திரத்தை விரும்பும் உலகின் இதர நாடுகளும் துணை நிற்கும்.
பல்வேறு இனத்தினர், இஸ்லாமியர் மதச் சார்பற்றவர்கள் என்று பல்வேறு மக்கள் அடங்கிய இப்புதிய அரசு அந்த நாட்டின் வரலாற்றில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என புஷ் மேலும் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மட்டக்களப்பில் இந்தியர் கடத்தப்பட்டுள்ளார்.
Next post தமிழகத்திற்கு செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு