சுவையும் அதிகம்… சத்தும் அதிகம்!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 14 Second

கனிகள் என்பவையே சத்துக்களும், சுவையும் நிரம்பியவையும்தான். அவைகளில் சீத்தாப்பழம் மிகுந்த சுவையும், சத்துக்களையும் தன்னகத்தே கொண்டது. இக்கனியின் தனித்தன்மைகளை டயட்டீஷியன் உத்ரா விளக்குகிறார்…

*Custard apple என அழைக்கப்படுகிற சீத்தாப்பழம் வைட்டமின்-சி, பி-காம்ப்ளக்ஸ், இரும்புச்சத்து, வைட்டமின்-ஏ, நார்ச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் முதலான ஊட்டச்சத்துக்கள் கொண்டது. எனவே, சீத்தாப்பழத்தை குழந்தைகள், சிறுவர், சிறுமியர், நடுத்தர வயதினர், முதியோர்கள் என அனைத்து தரப்பு வயதினரும் எவ்வித தயக்கமும் இல்லாமல் தாராளமாக உண்ணலாம்.

* சீத்தாப்பழத்தில் உள்ள ‘பி’ காம்ப்ளக்ஸ் ஆஸ்துமா மற்றும் சளி போன்ற பிரச்னைகளைக் குறைக்க உதவுகிறது. அது மட்டுமில்லாமல், இந்தப் பழம் நமது தசைப்பகுதிகளை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள மிகவும் உறுதுணையாக செயல்படுகிறது.

* ரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு சீத்தாப்பழம் சிறந்த மருந்தாக உள்ளது. ஏனெனில், இதில் உள்ள பொட்டாசியம் ரத்த கொதிப்பைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது.

* ஆயுர்வேத மருத்துவத்தில் உடலில் ஏற்படுகிற புண்களைக் குணப்படுத்த சீத்தாப்பழம் தலைசிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இப்பழத்தின் இலைகள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுவதாக இந்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

* சீத்தாப்பழத்தில் வைட்டமின்-ஏ ஏராளமாக உள்ளது. இது தலைமுடியையும், சருமத்தையும் பாதுகாக்க உதவுகிறது.

* சீத்தாப்பழம் ரத்தசோகை குறைபாட்டைத் தடுக்கவல்லது. குறிப்பாக, பெண்களுக்கு மிகவும் ஏற்ற மருத்துவ குணம் நிறைந்த கனியாக திகழ்கிறது.

* நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்குப் பொருந்தும் வகையில், எண்ணற்ற பயன்களைக் கொண்டுள்ள இந்தப் பழத்தை உணவோடு சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னதாகவும், உணவு உண்ட ஒரு மணிநேரத்துக்குப் பிறகும் சாப்பிடுவதே முழுமையான பலன்களைத் தரும்.

* கருவுற்ற பெண்களுக்கு மிகச் சிறந்த உணவாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் கனியாக சீத்தாப்பழம் உள்ளது. இப்பழத்தை கர்ப்பிணிகள் தினமும் சாப்பிட்டு வர, சிசுவின் வளர்ச்சி ஆரோக்கியமாக அமையும்.

* சீத்தாப்பழத்தில் நார்ச்சத்து 5.10 கிராம் அளவு உள்ளது. எனவே, மலச்சிக்கல் குறைபாட்டைச் சரி செய்து, வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள இந்தக் கனி பயன்படுகிறது.

* போதுமான உடல் எடை இல்லாமல் அவதிப்படுபவர்கள் சீத்தாப்பழத்தின் சதைப்பகுதியைத் தேனில் ஊற வைத்து, தினமும் சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் உடல் எடை கணிசமாக அதிகரிக்கும்.

* சீதாப்பழத்தில் வைட்டமின் பி1, பி2 என ஏராளமான வைட்டமின்கள் உள்ளன. ஒரு சராசரி சீத்தாப்பழத்தில் பி 1 வைட்டமின் – 0.13 Mg, பி 2 வைட்டமின் – 0.09 Mg, பி 3 வைட்டமின் – 0.69Mg, பி5 – 0.19 Mg, வைட்டமின் பி 6 – 0.07 Mg என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. இது தவிர மக்னீசியம் 38.47 Mg-யும், பொட்டாசியம் 278 Mg-யும் புரோட்டீன் 1.62G, கொழுப்பு 0.67G-யும் அஸ்கார்பிக் ஆசிட் 21.51 Mg-யும் காணப்படுகிறது.

* சீத்தாப்பழம் தன்னிடத்தில் அளவுக்கு அதிகமாக குளுக்கோஸைக் கொண்டுள்ளது. எனவே, சர்க்கரை நோயாளிகள் இதனை அறவே தவிர்ப்பது நல்லது.

* சர்க்கரை நோயால் பாதிக்கப்படாதவர்கள் தினமும் 75 கிராம் முதல் 80 கிராம் வரை சாப்பிடலாம். அதிகமாக உட்கொண்டால் ரத்தத்தின் சர்க்கரையின் அளவைக் கண்காணிக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனநாயகம் குறித்த வினாக்களும் தேசிய இனப்பிரச்சினையின் எதிர்காலமும் !! (கட்டுரை)
Next post சளி, இருமலை விரட்டும் கற்பூரவள்ளி இலை..! (மருத்துவம்)