பெண் – ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) – 10 குறிப்புகள்!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:3 Minute, 49 Second

1. இந்த 13 -15 வயது காலகட்டத்தில், பெண் – ஆண் பாலின உறுப்புகள் வேகமாக வளர ஆரம்பிக்கின்றன. சுமார் 13 வயது பிற்பகுதியில் ஆரம்பித்த பருவ வளர்ச்சி, சுமார் 15 வயதில் கிட்டத்தட்ட 75 சதவிதம் முழு வளர்ச்சி அடைகிறது.

2. சுமார் 12-14 வயது காலகட்டத்திலேயே, ஆணும், பெண்ணும் இனவிருத்தி செய்யக்கூடிய அளவில் இருக்கிறார்கள்.

3. சுமார் 13 – 14 வயதில், பெண்ணிற்கு முதல் மாதவிடாய் ஆரம்பமாகிறது. ஆனால், அதற்கு சுமார் 2 வருடங்களுக்கு முன்பே, பாலியல் ஹார்மோன்கள் சுரப்பதால், பருவத்தின் அறிகுறிகள் ஆரம்பமாகி விடுகின்றன. இந்த வளர்ச்சி 17 – 18 வயதில் முடிவடைகிறது,

4. பெண்களுக்கு வெளிப்படையாகத் தோன்றும் மாறுதல்கள்:

அ. முகத்தில் மினுமினுப்பு கூடுதல்.
ஆ. கண்களில் அழகும் கவர்ச்சியும் தோன்றல்.
இ. புன்னைகையில் பல அர்த்தங்கள் காணல்.
ஈ. இடுப்பு எலும்புகள் அகலமாதல்.
உ. புட்டப்பகுதியில் கொழுப்பு சேர்த்து அகலமாதல், மார்புகள் சிமிழ்போல் வளர்ச்சி அடைதல்.
ஊ. பெண்குறியின் உதடுகள் சற்று தடித்தல்.
எ. தலைமுடி அடர்ந்து வளருதல் போன்றவை ஏற்படும்.

5. ஆண்களுக்கு, சுமார் 12 வயதில் ஆரம்பமாகும் பருவ மாறுதல், 13 – 17 வயதில் உச்சத்தை அடைந்து, சுமார் 18 – 19 வயதில் ஒரு நிலைக்கு வந்து விடுகிறது.

6. ஆண்களுக்கு வெளிப்படையாகத் தோன்றும் மாறுதல்கள்.

அ. ஆண்குறியின் அடிப்பாகம் மற்றும் விதைப்பைகளின் மேல் பாகத்தில் மயிர் நன்றாக வளருதல்.
ஆ. விதைகளும், விதைப்பைகளும் பெருத்தல்.
இ. குறி விறைப்பு அடிக்கடி நிகழுதல்.
ஈ. உடல் உயரமும், எடையும் திடீரென்று கூடுதல்.
உ. தோள்கள் விரிவடைதல்.
ஊ. குரல் உடைந்து வெளிப்படுதல்.
எ. மேல் உதடு, மார்பு போன்றவற்றில் மயிர் வளருதல்.
ஏ. விந்து உற்பத்தியாகி, கனவுகள் மூலம் இன்ப அதிர்வுடன் வெளியேறுதல்.

7. அடிக்கடி பாலியல் உணர்வு உந்துதலால், கல்வியைவிட, கலவியில் நாட்டம் அதிகமாக இருக்கும்! மனதை, அதன்போக்கில் சற்றுவிட்டுத் திருப்ப வேண்டும். அடக்குதல் கூடாது. எதையும் விழிப்புணர்வோடு பார்க்கவும். அதே நினைப்பு வேண்டாம்.

8. சுய இண்பம் காண பெரும் விருப்பம் ஏற்படும். இதில் எந்தக்குற்ற உணர்வும் கொள்ள வேண்டாம். இது மிகவும் இயல்பானது. இதனால் உடலுக்கு எந்தத் தீங்கும் கிடையாது. இது விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

9. இதுவரை இருந்து வந்த தன் இன மோகம், இப்பொழுது எதிர்ப்பால் இனத்திடம் தாவும்.

10. காதலுக்கும், இனக்கவர்ச்சிக்கும் வித்தியாசம் தெரியாத பருவம். ஆகவே, இதுபாலரும் மிகவும் விழிப்பாக, அறிவுபூர்வமாக எதையும் சிந்திக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா? நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா? (அவ்வப்போது கிளாமர்)
Next post ஐடியா ஐம்பது!!! (மருத்துவம்)