சகோதரி நூலகம்!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 27 Second

எழுத்துலகில் ஆண்களுக்கு கிடைக்கும் மதிப்பு, முக்கியத்துவம் பெண் எழுத்தாளர்களுக்கு கிடைப்பதில்லை. மேலும் போற்றப்படுவதும் இல்லை. பெண்கள் சார்ந்த சிந்தனைகளை ஒரு பெண்ணால் மட்டுமே சிறப்பாக வெளியிட முடியும்.

பெண்கள் படைப்பை, பெண் வாசகிகள் தேடிப் படிப்பதும் குறைவு. இந்தச் சூழலில் பெண்கள் எழுதியவற்றை சேகரித்து அதற்காகவே ஒரு நூலகம் திறந்தால் அது மக்களிடம் மேலும் சிறப்பாக எடுத்துச்செல்லும் என்ற அடிப்படையில் துவக்கப்பட்டதுதான் சகோதரி நூலகங்கள்.

மும்பையின் பந்தராசி மட்டரி சாலை சங்கரிலாவில், சமீபத்தில் சகோதரி நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. பெண் எழுத்தாளர்களின் புத்தகம் என்றால் பெண்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இங்கு ஆண்கள் படிக்கவும் அனுமதி உண்டு. இதன் அமைப்பாளர் அக்கி தாமி, டார்ஜிலிங்கை பிறப்பிடமாக கொண்ட மும்பை வாசி.

29 வயது நிரம்பிய கலைஞரான தாமி தன் கலை மூலம் சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் கலை மூலம் ‘த தாராவி ஆர்ட் ரூம்’ என்ற திட்டத்தில் தாராவியில் உள்ள பெண் மற்றும் குழந்தைகளை மேம்படுத்தும் ஒரு முயற்சியில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டது தான் சகோதரி நூலகம்.

இந்தாண்டு மே மாதம் கிரவுட் பண்டிங் மூலமாக துவங்கப்பட்ட சகோதரி நூலகம் தில்லி, புனே, கோவா, பெங்களூரு, கொச்சி, மும்பை போன்ற நகரங்களை சுற்றி வலம் வந்து தற்போது நிரந்தரமாக மும்பையில் உள்ளது. இது குறித்து தாமி கூறுகையில், ‘‘பல நூலகங்களுக்கு விஜயம் செய்தபோது அங்கு பெண்கள் படைப்புகள் கடைசி நிலையில் இருந்ததை பார்க்கும் போது வருத்தமாக இருந்தது.

அது மட்டும் இல்லை பெண் எழுத்தாளர்கள் பாதி பேரின் புத்தகமும் அங்கில்லை என்பது தான் அதிர்ச்சியாக இருந்தது. அது தான் என்னை சகோதரி நூலகம் துவங்க தூண்டியது. இங்கு பெண்களின் படைப்புகளுக்கு மட்டுமே இடம் கொடுப்பது என முடிவு செய்ேதன்’’ என்றவரின் நூலகத்தில் 600-க்கும் அதிகமான பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் உள்ளன.

சகோதரி நூலகம் மூலம் பெண்களுக்கு, பெண் எழுத்தாளர்கள் படைத்த படைப்புகளை அறிமுகம் செய்வது மட்டும் இல்லாமல் அந்த புத்தகத்தை பற்றி விவாதங்களும் நடத்தப்படுகிறது. இது பெண்களை மேலும் எழுதவும் அவர்களின் எண்ணங்களை படைக்க ஒரு காரணமாக அமையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாய்மைக்கு கிடைத்த வெற்றி!! (மகளிர் பக்கம்)
Next post தவறி விதைக்கப்பட்ட விதைகளை நல்ல விளைநிலங்களுக்கு எடுத்துச் செல்வோம்!! (கட்டுரை)