ஹோமாகமயில் சுற்றிவளைக்கப்பட்ட ஹெரோயின் வியாபாரம்!!

Read Time:1 Minute, 44 Second

ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரகதி மாவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 35 கிராம் 640 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் முச்சக்கர வண்டியில் வைத்து பெண் ஒருவர் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கட்டுவான பகுதியில் வைத்து குறித்த பெண்ணும் முச்சக்கரவண்டி ஓட்டுனரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபரான பெண்ணிடம் இருந்து 37 கிராம் 140 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்த குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்ட போது அவருடைய வீட்டில் இருந்து 43 கிராம் 430 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 170,600 பணம் கைப்பற்றப்பட்டள்ளது.

43, 23 மற்றும் 24 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொரோனாவுக்கு 196 மருத்துவா்கள் பலி!! (உலக செய்தி)
Next post கொரோனா பி.சீ.ஆர். பரிசோதனை!!