ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை எரிக்க முயற்சி: தீ பரவியதால் 87 குடிசைகள் சாம்பல்

Read Time:3 Minute, 43 Second

Tamilnadu.1.jpgதிருவொற்றிïரை அடுத்த திருச்சினாங்குப்பம் பகுதியில் கடலோரத்தில் புதுநகர் எனும் மீனவகுப்பம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகள் உள்ளன. அதில் ஒரு குடிசையில் விதவைப் பெண் வீரம்மாள் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு வீரம்மாள் தன் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தார். அவருடன் அவரது தாயார் நாகம்மாள், குழந்தைகள் தினேஷ், திலகா, பிச்சாண்டி ஆகியோரும் படுத்து இருந்தனர். நள்ளிரவு 2 மணிக்கு அவர்கள் குடிசைப் பகுதிக்கு 2 மர்ம மனிதர்கள் வந்தனர்.

வீரம்மாள் குடிசை வீட்டின் கதவை வெளியில் பூட்டினார்கள். திறக்க முடியாத படி கதவை கயிறுகளால் கட்டினார்கள். பிறகு வீட்டின் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டனர்.

திடீரென வீட்டில் தீ பிடித்து எரிவதை கண்டதும் வீரம்மாள் அதிர்ச்சி அடைந்தார். குழந்தைகளை எழுப்பி வெளியில் ஓடி வரமுயன்றார். கதவு வெளிபக்கமாக பூட்டப் பட்டிருந்ததால் முடிய வில்லை.

தங்களை கொல்ல தீ வைக்கப்பட்டுள்ளதை அறிந்த வீரம்மாள் உதவி கோரி கூச்சலிட்டார். அவர் சத்தம் கேட்டு பக்கத்து குடிசைகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் வீட்டு கதவை உடைத்து வீரம் மாளையும் அவர் குடும்பத் தினரையும் மீட்டனர்.

இதற்கிடையே வீரம்மாள் குடிசை வீட்டில் பிடித்த தீ பக்கத்து குடிசைகளுக்கு மளமளவென பரவியது. தீயை அணைக்க அந்த பகுதி மக்கள் போராடினார்கள். ஆனால் தீ பல தெருக்களுக்கு பரவியது.

சுமார் ஒரு மணிநேரம் போராடி தீ அணைக்கப்பட்டது என்றாலும் அதற்குள் 87 குடிசைகள் தீயில் எரிந்து சாம்பலாகி விட்டன. வீரம்மாள் தான் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 10 பவுன் நகை எரிந்து போய் விட்டதாக கண்ணீர் விட்டு கதறியபடி கூறினார்.

வீரம்மாள் குடும்பத்தினரை உயிருடன் எரிக்க முயன்றவர்கள் யார் என்று தெரியவில்லை. அவர்கள் வைத்த தீயில் 10 லட்சத்துக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. குடிசைவாசிகள் உணவு உடை இழந்து தவித்தனர்.

தீ வைக்கப்பட்ட சம்ப வம் குறித்து அறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ரன்வீர்பிரசாத், அம்பத்தூர் தாசில்தார் தீனதயாளன், அமைச்சர் கே.பி.பி.சாமி, முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு அதிகாரிகள் உதவிகள் செய்தனர். பாதிக்கப் பட்டவர்கள் தற்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விடுதலைப் புலிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம்: அதிபர் ராஜபட்சய ஆவேசம்
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்