ஆப்பிள் தி கிரேட்!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 44 Second

காலங்கள் என்னதான் மாறினாலும்… கிவி, ஃபிக் என்று எத்தனையோ பழங்கள் சந்தைக்குள் வந்தாலும் இப்போதும் ‘கனிகளின் அரசி’ ஆப்பிள்தான். அசைக்க முடியாத, அடித்துக் கொள்ளவே முடியாத அளவுக்கு அப்படி என்னதான் ஆப்பிளில் இருக்கிறது என்று கடுப்பாகி ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள் United states department of agriculture குழுவினர்.

ஆப்பிளுடன் மேலும் 100 உணவுப் பொருட்களை ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட போதுதான் ஆன்டி ஆக்சிடெண்டுகளும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் Quercetin என்ற வேதிப்பொருளும் ஆப்பிளில்அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. இத்துடன் அல்ஸைமர், பார்க்கின்ஸன் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் மூளை பாதுகாக்கப்படுவதையும், ஆப்பிளைக் கடித்துத் தின்கிறபோது அதிகரிக்கும் உமிழ்நீர் சுரப்பு, பாக்டீரியாவின் தாக்குதலில் இருந்து பற்களைப் பாதுகாப்பதும் தெரிய வந்தது.

முக்கியமாக, இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பல்வேறு புற்றுநோய்களைத் தடுக்கும் திறன் கொண்டது ஆப்பிள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு, ஆப்பிளில் இருக்கும் Flavonols கணையப் புற்றுநோயை 23 சதவிகிதம் தடுக்கும் என்பதை ஓர் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. இதேபோல, ஆப்பிளில் இருக்கும் Soluble fibre என்கிற கொழுப்பில் கரையும் நார்ச்சத்து, ரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதுடன் டைப் 2 டயாபடீஸையும் தடுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி இருக்கிறார்கள்.

இதனால் எடையைப் பராமரிக்க விரும்புகிறவர்களுக்கும் ஆப்பிள் அருமருந்து என்கிறார்கள். இன்றைய தவறான உணவுமுறையால் பாதிக்கப் படும் கல்லீரலை சுத்தப்படுத்தும் Detoxifier வேலையையும் ஆப்பிள் செய்கிறது என்றும் பெருமைப்படுகிறார்கள் மருத்துவர்கள். நிஜமாகவே ‘ஆப்பிள் தி கிரேட்’தான் !

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாரம்பரியததை மீட்டெடுகக சத்தமின்றி சாதனை!! (மகளிர் பக்கம்)
Next post மோகத்திற்கு எதிரி முதுகுவலி! (அவ்வப்போது கிளாமர்)