திருமண உறவு அவசியமா? (அவ்வப்போது கிளாமர்)

Read Time:5 Minute, 43 Second

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! டாக்டர் டி.நாராயண ரெட்டி

மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே… – கவிஞர் வாலி

செல்வாவுக்கு வயது 32 ஆகியும் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. திருமணம் செய்துகொண்டால் ஒரு பெண்ணுக்கு அடிமையாகி விடுவோம்… அவளிடம் சிறைப்பட்டு விடுவோம் என பயந்தான். அவனது தெரிந்த வட்டத்தில் உள்ளவர்களுக்கு திருமண வாழ்க்கை வெற்றி பெறாமல் போயிருந்தது. செல்வாவின் அண்ணனுக்கு திருமணம் நடந்து ஒரு வருடத்திலேயே மனைவியோடு பிரச்னை வந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருக்கிறான்.

இப்படியான கசப்பான விஷயங்களால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டான் செல்வா. குடும்பத்தினர் எவ்வளவோ வற்புறுத்தியும் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டான். கல்யாணம் செய்து கொள்ளாமலே ஜாலியாக வாழ்க்கையை கழித்துவிடலாம் என்பது அவனுடைய எண்ணம். இது எந்த அளவு சாத்தியம்? சரியான முடிவா?திருமண உறவு அவசியம் என நம் முன்னோர் பின் எதற்காக சொல்லி வந்தார்கள். திருமண உறவைப் பொறுத்தவரை பெண்களை விட ஆண்களுக்குத்தான் அதிக பயன்கள் இருக்கிறது.

ஆண்களுக்கு மன அழுத்தத்தை குறைத்து ஆசுவாசம் அளிப்பது திருமண உறவு தான் என பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எந்த வயதில் இருந்தாலும் பெண்களை விட ஆண்கள்தான் தாம்பத்திய வாழ்க்கையில் அதிக சுகமும், சந்தோஷமும் அடைகிறார்கள் என்றும் ஓா் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. பெண்களை எடுத்துக் கொண்டால் இந்த நிலைமை தலைகீழாக இருக்கிறது.

திருமணமான பெண்களை விட மணம் செய்து கொள்ளாமல் தனியே வாழும் பெண்கள்தான் அதிக மகிழ்ச்சியில் உள்ளார்கள் எனவும் அதே ஆராய்ச்சி தெரிவிக்கிறது. மனைவி முதலில் இறந்துவிட்டால் பெரும்பாலான கணவர்கள் தனிமையை எதிர்கொள்வதில் சிரமப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் முழுக்க மனைவி செய்யும் பணிவிடைகளை சார்ந்து வாழ்கிறார்கள். ஆனால், பெண்கள் கணவனை இழந்த பிறகும் பல காலம் வாழ்வார்கள். தங்களது குழந்தைகளை நல்ல படியாக வளர்த்து ஆளாக்கிவிடுவார்கள்.

1994ம் ஆண்டில் Sex In America என்ற பெயரில் செக்ஸ் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள் பெரிய புத்தகமாக வந்தது. அதில் ஒரு கட்டுரையில் செக்ஸ் வாழ்க்கையில் அதிகம் மகிழ்ச்சி அடைபவர்கள் யார் என்ற கேள்விக்கு 88 சதவிகிதம் திருமணமானவர்கள்தான் என சொல்லப்பட்டுள்ளது. திருமண உறவானது 100 சதவிகிதம் வெற்றிபெறும் என யாரும் உறுதி கூறவும் முடியாது. அதன் வெற்றி, தோல்வி சம்பந்தப்பட்ட ஜோடிகளை பொறுத்துதான் அமையும். திருமணம் குறித்து சில யோசனைகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

உங்களை பிடிக்காத நபரை எந்த கட்டாயம் இருந்தாலும் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். அது பிரச்னையில் தான் போய் முடியும்.திருமணமானால் எல்லாம் சரியாகி விடும் என பிடிக்காதவரை மணம் செய்தால் எல்லா பிரச்னைகளும் அதிகமாகுமே தவிர குறையாது. திருமணம் முடிவு செய்யும் போதே, மாப்பிள்ளையும், பெண்ணும் ஒருவருக்கொருவர் பேசி புரிதல் அடைவது அவசியம். திருமணமான பிறகும் ஒருவருக்கொருவர் நேர்மையாக இருக்க வேண்டும்.

நம்பிக்கைதான் திருமணத்திற்கான அஸ்திவாரம். திருமணமான பின் அடுத்த பெண்ணை தேடிப் போகாமல் இருந்தாலே தாம்பத்திய உறவில் பல பிரச்னைகள் ஏற்படாது. திருமணத்திற்கு பிறகு தம்பதிகளில் ஒருவரை மற்றொருவர் மனம் நோகும் படி செய்வதோ, அடுத்தவரை அழச் செய்வதோ கூடாது. அவர்கள் அன்புக்கு தகுதி இல்லாதவர்கள். திருமண உறவிற்கு யாரும் கியாரன்டி அட்டை தர முடியாது. அது இரு மனம் சம்பந்தமான சூதாட்டமே. அப்புறம் ஏன் திருமணம் செய்ய வேண்டும் எனக் கேட்பவர்களுக்கு பதில்… இந்த சிறப்பான உறவுக்கான மாற்று உறவு இதுவரை கண்டறியப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அலைபேசியில் அலையும் குரல்! (அவ்வப்போது கிளாமர்)
Next post குறை சொன்னால் குஷி இருக்காது! (அவ்வப்போது கிளாமர்)