மணப்பெண்ணுக்கு 100 புத்தகங்கள் பரிசு!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 45 Second

திருமணத்தின் போது பெண்கள் மாப்பிள்ளை வீட்டுக்கு வரதட்சணை கொடுப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், முஸ்லீம்கள் திருமணத்தில் பெண்ணுக்கு நகையோ, பணமோ பரிசாக கொடுத்தால்தான் ஆண் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி கேரளாவில் நடைபெற்ற திருமணம் வைரலாக சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது. இதற்கு மணப்பெண் பரிசாக கேட்ட பொருள்தான் காரணம். அப்படி என்ன கேட்டார்? அவர் பணமோ நகையோ கேட்காமல் தன் வருங்கால கணவரிடம் புத்தகம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அவரது ஆசையை நிறைவேற்றி அந்த பெண்ணை கரம்பிடித்துள்ளார். கேரளா 100% கல்வியறிவு பெற்ற மாநிலம்.

அந்த மாநிலத்தை சேர்ந்த மணப்பெண் அஜ்னா நிஜாம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற நிச்சயதார்த்தத்தின் போது தனக்கு 80 புத்தகம் வேண்டும் என்று மணப்பெண் தன்னை திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளையிடம் கேட்டுள்ளார். காதலி கடைக்கண் காட்டிவிட்டால் காதலருக்கு மாமலையும் சிறுகடுகாம். அதுபோல் தனது வருங்கால மனைவி கேட்ட அத்தனை புத்தகங்களையும் கடை கடையாக தேடியுள்ளார். சில புத்தகங்களை ஆன்லைனிலும் வலைவீசி தேடியுள்ளார். அவர் கேட்ட 80 புத்தகங்களுடன் கூடுதலாக 20 புத்தகங்கள் என 100 புத்தகங்களை 2 மாதங்களில் தேடிப்பிடித்து அஜ்னா முன் கொட்டியுள்ளார் மணமகன் இஜாஜ் ஹக்கிம்… அத்துடன் விட்டாரா ஹக்கிம்… தனது மனைவி 100 புத்தகங்கள் மத்தியில் படித்தபடி உள்ள புகைப்படத்தையும் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார். அதன் கீழே அறிவுக்கு இணையானது எதுவும் இல்லை. பாராட்டுக்கள்.

அவள் ஒரு மாணிக்கம்’ என குறிப்பிட்டிருந்தார். இப்போது கேரளாவில் அந்த படம் வைரலாகிறது. அவர் தேடிப்பிடித்து வாங்கிய புத்தகங்களில் இந்துக்களின் புனித புத்தகமான பகவத்கீதை, இஸ்லாமியர்களின் குரான், கிறிஸ்தவர்களின் பைபிளும் அடக்கம். இது தவிர இந்திய அரசியலமைப்பு தொடர்பான புத்தகத்தை வாங்கி பெண்ணுக்கு பரிசாக அளித்து மனைவியை கைப்பிடிக்கும் முன்பே அசத்திவிட்டார் ஹக்கிம். ஃபேஸ்புக்கே கதி என இருக்கும் பெண்கள் மத்தியில் தனது அறிவு தாகத்தை தீர்க்க புத்தகம் கேட்ட மணப்பெண் இணையதளவாசிகளின் இதயத்தில் இடம்பிடித்து விட்டார். கடந்த 2016ம் ஆண்டு திருமணத்தின்போது மணப்பெண் ஒருவர் 50 புத்தகங்களை பரிசாக கேட்டு அவற்றை பெற்ற சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதை 100 புத்தகங்கள் பெற்றதன் மூலம் முறியடித்துவிட்டது அதே கேரளா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திசைகாட்டிகளின் முள்கள் !! (கட்டுரை)
Next post பழைய சோறு… பலன்கள் நூறு!! (மருத்துவம்)