ABC குடிக்கறீங்களா பாஸ்? (மருத்துவம்)

Read Time:7 Minute, 19 Second

A, B, C-ன்னு படிக்கதானே முடியும்? எப்படி குடிக்க முடியும்னு டவுட் வருதுதானே? Apple, Beetroot, Carrot இந்த மூன்றும் சேர்ந்த கலவைதான் ஏ.பி.சி ஜுஸ். எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட ஜூஸ் என்பதால் ‘மிராக்கிள் டிரிங்க்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கான மூலிகை மருந்தாக சீன மருத்துவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏ.பி.சி ஜூஸ், உடல் மற்றும் மூளை ஆராக்கியத்துக்குப் பயன்படும் அற்புத குணங்களைப் பெற்றிருப்பதால் இப்போது உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது.

* சத்துக்களின் கலவை

உடல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் கலவைதான் இந்த பானம். ஆப்பிள், பீட்ரூட், காரட் ஜுஸ் வகைகளை தனித்தனியாக பருகுவதால் கிடைக்கும் ஒட்டு மொத்த பலன்களும் இந்த ஒரே பானத்தில் கிடைத்துவிடுகிறது. A, B1, B2, B6, C, E மற்றும் K வைட்டமின்களும், ஃபோலேட், சிங்க், காப்பர், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசயம், நியாசின், சோடியம் மற்றும் மங்கனீஸ் போன்ற தாதுப்பொருட்கள் அனைத்தும் ஒருங்கே அடங்கியுள்ளது.

* முதுமையை வெல்லலாம்

ABC டிரிங்கில் உள்ள A, B-Complex, C, E மற்றும் K வைட்டமின் சத்துக்கள் மினுமினுப்பான தோற்றத்தைத் தருவதால் உண்மையான வயதைவிட மிகவும் இளமையாகத் தெரிவீர்கள். இதிலுள்ள தாதுப்பொருட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உடல் உறுப்புகளுக்கு புத்துயிர் அளித்து, அதன் இயக்கங்களை மேம்படுத்துகிறது.

* பளிச்சுன்னு தெரியலாம்

முகப்பரு, கரும்புள்ளிகளுக்காக எவ்வளவோ க்ரீம்களையும், லோஷன்களையும் தடவி சலித்து போயிருப்பீர்கள். இவற்றுக்குக் காரணமான, உடலில் உள்ள தேவையற்ற ரசாயனக் கழிவுகளையும், நச்சுப்பொருட்களையும் வெளியேற்றி விடுகிறது. இந்த அற்புத பானத்தை நாள் தவறாமல் குடித்து வந்தால் முகம் பளிச்சென்று சிவப்பாக மாறி
விடும். எந்த கிரீமும், லோஷனும் தடவ வேண்டிய அவசியமே இருக்காது.

* கண்ணாடி தேவையில்லை

கம்ப்யூட்டர் முன்பு மணிக்கணக்கில் வேலை செய்வதால் கண்களில் நீர்வறண்டு, கண்ணைச் சுற்றியுள்ள தசைகள் பலவீனமடைந்து விடும். அந்த கண் பார்வையை மேம்படுத்தும் ஏ வைட்டமின் அதிகம் இருப்பதால் கண் தசைகளை பலப்படுத்தும். கண்பார்வையை கூர்மையடையச் செய்யும்.

* மெமரி எகிறும்

பள்ளி செல்லும் உங்கள் பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெற, விலையுயர்ந்த பானங்களை வாங்கிக் கொடுக்கத் தேவையில்லை. நினைவாற்றல் மற்றும் கவனிக்கும் திறனை வளர்க்கும் ABC பானத்தை தினமும் ஒரு கிளாஸ் கொடுத்துப் பாருங்கள். விளையாட்டு, படிப்பு என எல்லவாற்றிலும் சுறு சுறுப்பாவதுடன் நம்பர் ஒன்னாகவும் ஜொலிப்பார்கள்.

* நோயெதிர்ப்பு மாவீரன்

காய்ச்சல், ஆஸ்துமா, ரத்தசோகை போன்ற நோய்கள் வராமல் இருக்க உடலில் நோய் எதிர்ப்புசக்தி வலுவாக இருக்க வேண்டும். ஹிமோகுளோபீன் மற்றும் ரத்த வெள்ளையணுக்கள் எண்ணிக்கை ரத்தத்தில் அதிக அளவில் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ABC ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தி உத்தரவாதம் தந்து நோய்களை அண்டவிடாமல் காக்கிறது.

* புற்றுநோய்க்கு எதிராக போர்

பீட்ரூட்டில் பீட்டாசியின் என்னும் மூலப்பொருள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சிக்கு எதிராக செயல்படுவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மேலும் பீட்ரூட்டில் உள்ள இரும்புசத்து சிவப்பணுக்கள் மீளுருவாக்கத்துக்கு உதவி புற்றுநோய் செல்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது. இதன்மூலமும் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகின்றன.

* வாவ் எஃபெக்ட்ஸ்

கல்லீரல், இதயம், சிறுநீரகம் இந்த மூன்று உறுப்புகள்தான் உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியைச் செய்கின்றன. இந்த மூன்றைத் தவிர மற்ற உள்ளுறுப்புகளும் அதனதன் பணியைச் செய்ய அவற்றை பாதுகாப்பது அவசியம். ABC பானத்தில் கிடைக்கும் முக்கிய மூலப்பொருட்களான ஆல்ஃபா, பீட்டா கரேட்டின் மூலப்பொருட்கள் ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பை கட்டுப்படுத்தி, செரிமானத்தை எளிதாக்குகிறது. மேலும், இதயநோய், கல்லீரல் நோய் மற்றும் சிறுநீரக நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

* ஸ்லிம் ஆகலாம்!

கலோரிகள் குறைந்த ABC ட்ரிங் நிச்சயமாக உடல் பருமனை குறைக்க உதவும். உடற்பயிற்சி செய்து முடித்தபிறகு இந்த பானத்தை எடுத்துக் கொண்டால் புத்துணர்ச்சியும் கொடுக்கும். இப்ப சொல்லுங்க இது மிராக்கிள் டிரிங்க்தானே?

* எப்படி தயாரிப்பது?

ஆப்பிள், பீட்ரூட், கேரட் மூன்றையும் சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்க வேண்டும். அதை ஒரு டம்ளரில் போட்டு, அதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன் கலக்கினால் மிராக்கிள் டிரிங்க் ரெடி. காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. தினமும் ஒரு டம்ளர் தவறாமல் குடித்து வந்தால் அற்புதமான பலன்கள் கண்கூடாகவே தெரிய வரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண் பெண் – தகாத உறவுகளுக்கு காரணம் என்ன? (அவ்வப்போது கிளாமர்)
Next post எச்சரிக்கை – அரபிக் கடலில் இன்று உருவாகிறது நிசர்கா புயல்!! (உலக செய்தி)