பேரன்டல் கன்ட்ரோல் ஆப்!! (மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 42 Second

கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வது இப்போது வழக்கமாகிவிட்டது. இருவரும் வேலைக்கு சென்றால்தான் சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் வாழும் பலரால் குடும்பத்தை நகர்த்த முடியும்.

இல்லையென்றால் கொஞ்சம் கடினம்தான். இது ஒரு பக்கம் இருக்க… கூட்டுக்குடும்பம் என்ற முறையை இப்போது மறந்துவிட்டோம். கல்யாணம் அடுத்து தனிக்குடித்தனம். ேவலைக்கு செல்லும் பெண்களில் பலர் குழந்தையை டேகேரில் விட்டுச் செல்கிறார்கள். வசதி படைத்தவர்கள் வீட்டில் பார்த்துக் ெகாள்ள ஆட்களை நியமிக்கிறார்கள்.

மூன்றாவது பிரச்னை குருவிக்கூடு போன்ற அடுக்குமாடி குடியிருப்பில் தான் பலர் வசித்து வருகிேறாம். நாடு இருக்கும் சூழலில் பெண் குழந்தைகளோ ஆண் குழந்தைகளோ யாராக இருந்தாலும், யாரையும் நம்பி விட்டுச் ெசல்ல முடிவதில்ைல. இதனால் தனித்து விடப்படும் இந்த குழந்தைகளின் உற்ற துணை ேகட்ஜெட்ஸ் தான். தொழில்நுட்பம் வளர்ந்து வருவது ஒரு பக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது என்றாலும், வீட்டின் வளர்ச்சியை அது முற்றிலும் தடை செய்து விடுகிறது. சின்ன வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் அந்த கைபேசிக்கு அடிமையாகிவிட்டார்கள்.

எவ்வளவு தான் இவர்களிடம் சொன்னாலும் அவர்களால் அதில் இருந்து மீளமுடிவதில்லை. முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் என்பது போல, ஒரு தொழில்நுட்பத்தை இன்ெனான்றால் தான் மீட்க முடியும். குழந்தைகள் எவ்வளவு நேரம் கேட்ஜட்சில் விளையாடுகிறார்கள் என்பதை கண்காணிக்கவும் அவர்களை அதில் இருந்து வேறு பக்கம் திசை திருப்பவும் சில பேரன்டல் கன்ட்ரோல் ஆப்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ேதாழியர்களே இனிமேல் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே உங்கள் குழந்தைகள் எவ்வளவு நேரம் கேட்ஜெட்சில் விளையாடுகிறார்கள் என்று கன்ட்ரோல் செய்யலாம். இதன் மூலம் அவர்கள் கேட்ஜட்சை மறந்து நண்பர்ளுடன் சென்று வெளிேய விளையாட வாய்ப்பினை ஏற்படுத்தித் தரலாம்.

எம்.எம்.கார்டியன் பேரன்டல் கன்ட்ரோல் ஆப்

டீன் ஏஜ் பருவம் வந்துவிட்டாலே அவர்களை யாரும் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது. அப்படியே கேட்டாலும் அவர்களிடம் இருந்து சரியான பதில் கிடைக்காது. மேலும் இந்த வயதில் அவர்களுக்கு என தனி உலகம், நட்பு வட்டங்கள் என்று அமையும். மேலும் அவர்கள் இந்த வயதில் எப்போதும் பெற்றோர்களிடம் இருந்து கொஞ்சம் ரகசியமாக தான் இருப்பார்கள். அதற்காக அவர்கள் தவறு செய்வார்கள் என்று நாம் நினைக்க வேண்டாம். தகாத நட்புகளால் அவர்களின் திசை மாறவும் வாய்ப்புள்ளது. அதை பெற்றோர்கள் நாம் தான் கவனிக்க வேண்டும்.

இந்த வயதில் செல்போன் தான் அவர்களின் மொத்த உலகம். அதை நாம் அவர்களிடம் இருந்து பறிக்க முடியாது என்றாலும் அதை நம்மால் கண்காணிக்க முடியும். இதன் மூலம் அவர்கள் சிறு தவறு ெசய்தாலும் அவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதில் இருந்து மீட்கலாம். எம்.எம்.கார்டியன் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு காவலன் என்று தான் சொல்லணும்.

இந்த ஆப் மூலம் உங்கள் குழந்தையின் செல்போனில் என்ன செய்தி, படங்கள் வருகிறது, அவர்கள் என்னென்ன ஆப்பினை பார்க்கிறார்கள் என அனைத்தையும் நாம் கண்காணிக்க முடியும். இந்த ஆப்பினை பதிவு செய்யும் போது அதை உங்கள் குழந்தையின் செல்போனிலும் அமைத்து இரண்டையும் இணைக்க வேண்டும். அதன் பிறகு உங்க குழந்தையின் செல்போன் உங்கள் கையில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதனால் பெற்றோர்களுக்கு தங்களின் குழந்தைகள் பத்திரமாக இருக்கிறார்கள் என்ற உணர்வு ஏற்படும்.

எம்.எம்.கார்டியனின் சிறப்பம்சங்கள்

* போனில் வரும் செய்திகள் மற்றும் அழைப்புகளை கண்காணிக்கவும் அதை பிளாக் செய்யவும் முடியும்.

* அவர்கள் போனில் என்ன ஆப் பயன்படுத்துகிறார்கள் என்று அதை பார்க்கலாம், அதை அவர்கள் பயன்படுத்த முடியாதபடி மாற்றியும் அமைக்கலாம்.

* உங்க குழந்தை எங்கு இருக்கிறார்கள் என்பதை மேப் மூலமாக கண்டறியலாம்.

* ஒரு சின்ன அழுத்தம் மூலம் உங்க குழந்தையின் செல்போனை நீங்களே இருக்கும் இடத்தில் இருந்து இயக்கலாம்.

இது போன்ற பாதுகாப்பு அம்சங்களை தவிர மற்ற விஷயங்களையும் நீங்கள் அவர்களின் போனில் இயக்கலாம்.

* எல்லா போன்களிலும் அலாரம் இருக்கும். ஆனால் அதை நாம் தான் இயக்க வேண்டும். குழந்தைகள் பாடம் சுமை காரணமாக மறந்துவிடுவார்கள். அவர்களுக்கான அலாரத்தை நாமே அவர்கள் போனில் இந்த ஆப் மூலமாக அமைக்கலாம்.

* அவர்கள் எந்த ஆப்பினை கவனிக்கிறார்கள் என்று மட்டும் இல்லை, அந்த ஆப்பினை எவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் என்பதையும் பெற்றோர்களால் நிர்ணயிக்க முடியும்.

எம்.எம்.கார்டியன் ஆப்பினை முதலில் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் ேபானில் தரவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு இருவரின் செல்போனையும் ஈ-மெயில் ெகாண்டு இணைக்க வேண்டும். அவ்வளவு தான். இப்போது பெற்றோரின் செல்போன் குழந்தைகளின் செல்போனில் போர்டலாக மாறிவிடும். அதன் பிறகு உங்களின் குழந்தைகளை எளிதில் கண்காணிக்க இது மிகவும் பக்கபலமாக இருக்கும். இந்த ஆப் இயங்க இருவரின் செல்போனிலும் இன்டர்நெட் வசதி அவசியம்.

பேரன்டல் கன்ட்ரோல் ஆப் டைம் லிமிட்

இந்த ஆப்கள் இந்த காலத்து குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான அம்சமாகும். இது பெற்றோர்களை ஒருபடி முன்னே அழைத்து செல்ல உதவும். இந்த ஆப் உங்கள் குழந்தைகள் கைபேசியில் எவ்வளவு நேரம் விளையாடலாம் என்பதை நீங்கள் திட்டமிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் எளிதாக வடிவமைக்கப்பட்டு இருப்பதால், இயக்குவது சுலபம். நான்கு எண்கள் கொண்ட பாஸ்வேர்டை கொண்டு உங்கள் குழந்தைகள் எவ்வளவு ேநரம் பயன்படுத்த ேவண்டும் என்பதை நீங்களே அமைக்கலாம். இதனால் குறைந்த நேரம் செல்போனில் விளையாடிவிட்டு மற்ற நேரம் ஓடியாடி விளையாட முற்படுவார்கள். இதில் சில முக்கியமான அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

* குழுந்தைகள் கைபேசியில் பயன்படுத்தும் ஆப்களை ேதர்வு செய்து லாக் செய்யலாம்.
* ஒரு ஆப்பினை அவர்கள் எவ்வளவு நேரம் பார்க்கலாம் என்று நிர்ணயிக்கலாம்.
* எண்கள், பேட்டர்ன், கைவிரல் ரேகை அல்லது ரிமோட் மூலமாகவும் பாஸ்வேர்டினை அமைத்து அதன் மூலம் லாக் செய்யலாம்.
* இந்த ஆப் இருப்பதால்தான் லாக் செய்கிறார்கள் என்று அதை நீக்க முயற்சிக்கலாம். அதை உங்களை தவிர வேறு யாராலும் நீக்கம் செய்ய முடியாதபடி அமைக்கலாம்.

சென்டரி பேரன்டல் கன்ட்ரோல்

ஆண்ட்ராய்ட் செல்போன் அல்லது டேப்களை பயன்படுத்தும் அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டதுதான் சென்டரி ஆப். இதில் அமைக்கப்பட்டு இருக்கும் பாதுகாப்பு சாதனங்கள் மூலம் ஆபத்தில் இருந்து தங்களின் குழந்தைகளை பாதுகாக்கவும் மற்றும் அவர்களின் செல்போன் பயன்பாட்டினை கவனிக்கவும் உதவும்.

சாதாரண செய்திகள் மட்டும் இல்லாமல் ஃபேஸ்புக் மெசன்ஜர், வாட்ஸ்சப், ஸ்னாப்சாட், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் என அனைத்து சமூக
வலைத்தளங்களையும் கண்காணிக்க முடியும். இதன் மூலம் குழந்தையின் பிரைவசி பாதிக்கப்படாமல், பெற்றோர்களுக்கும் குழந்தைக்குமான நல்ல உறவு மேம்படும்.

முதலில் இந்த ஆப்பினை பெற்றோர்கள் கைபேசியில் தரவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு அதில் குறிப்பிட்டுள்ள அறிவுரை படி அதனை உங்களின் குழந்தைகளின் செல்போனில் டவுன்லோட் செய்ய வேண்டும். இதை செய்தவுடன் இந்த ஆப் மூலம் பெற்றோர்கள் சில அம்சங்களை பயன்
படுத்திக் கொள்ளலாம்.

* சந்தேகப்படக்கூடிய புகைப்படங்கள், எஸ்.எம்.எஸ் செல்போனில் வந்தாலோ அல்லது குழந்தைகள் எடுத்தாலோ அது குறித்து அறிவிப்பு பெற்றோர்களின் செல்போனுக்கு வரும்.

* குழந்தைகள் இருக்கும் இடம், அவர்கள் பயன்படுத்தும் மற்ற ஆப்களின் விவரங்கள், போனின் பேட்டரியின் நிலை மற்றும் போனின் ஒலியை அதிகரிப்பது மற்றும் அழைப்பின் விவரங்கள் என அனைத்தும் பெற்றோர்களால் பார்க்க முடியும்.

கிட்ஸ் பிளேஸ்

பெற்றோர்கள் விரும்பும் படி தங்களின் குழந்தைகளின் செல்போன் மற்றும் டேப்பினை கண்காணிக்க உதவும் ஆப் தான் கிட்ஸ் பிளேஸ். இந்த ஆப் மூலம் குழந்தைகளின் போனில் நீங்க எதை கண்காணிக்க விரும்புகிறீர்கள் என்பதை நம் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.

*முதலில் இந்த ஆப்பினை பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் செல்போனில் இன்ஸ்டால் செய்யவேண்டும்.

* அவர்களுக்கு தேவையில்லா ஆப்கள் மற்றும் இதர இணையதள பக்கங்களை தடை செய்து கொள்ளும் வசதியுண்டு.

* சில ஆப்கள் இலவசமாக இருக்கும். சிலவற்றுக்கு நாம் குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும். அவ்வாறு கட்டணம் செலுத்தக்கூடிய ஆப்களை மற்றும் இணையத்தை பிளாக் செய்ய முடியும்.

*அது மட்டும் இல்லாமல் தேவையற்ற சில தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளையும் பிளாக் செய்யலாம். அதே போல் வயர்லெஸ் இணைப்புகளையும் துண்டிக்கலாம்.

* இந்த ஆப்பினை குழந்தைகளால் நீக்க முடியாது. அப்படியே நீக்க வேண்டும் என்றால் அதற்கான சிறப்பு குறியீட்டினை கொண்டு அவ்வாறு செய்ய முடியாதபடி பெற்றோர்கள் தடை செய்து கொள்ளலாம்.

இந்த ஆப் இலவசமாகவும் உள்ளது. கட்டணம் செலுத்தியும் அதனை டவுன்லோட் செய்து கொள்ள முடியும். அதற்கு ஏற்ப சலுகைகளும் மாறுபடும்.

செக்யூர் டீன் பேரன்டல் கன்ட்ரோல்

உங்க வீட்டில் டீன் ஏஜ் குழந்தைகள் உள்ளனரா… அல்லது உங்கள் குழந்தை அதிக நேரம் செல்போன், டேப் அல்லது கணினியில் இணையத்தில் விளையாடுகிறானா… இவர்கள் என்ன பார்க்கிறார்கள். சின்ன பையனாக இருந்தாலும் தேவையற்ற சில வீடியோக்கள் தென்படும் போது அதை எவ்வாறு தடை செய்வதுன்னு குழப்பமா இருக்கா? இனி அந்தக் கவலை வேண்டாம்.

செக்யூர் டீன் பேரன்டல் கன்ட்ரோல் ஆப் மூலம் உங்க குழந்தைகளின் செல்போன் மற்றும் டேப்பினை கன்ட்ரோல் செய்யலாம். அவர்கள் தங்களின் செல்போனில் என்ன ஆப்களை டவுன்லோட் செய்கிறார்கள், இணையத்தில் என்ன பார்க்கிறார்கள், அவர்கள் இருக்கும் இடம், அவர்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகள்… எதுவாக இருந்தாலும் உங்களின் கைபேசிக்கு அது தெரியப்படுத்தும்.

மேலும் அவர்கள் பார்க்க தவிர்க்க கூடிய வீடியோக்கள் மற்றும் ஆப்களை கூட இந்த ஆப் மூலம் தடை செய்ய முடியும். இதனால் உங்கள் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பான முறையில் தான் இணையத்தை கையாளுகிறார்கள் என்று பெற்றோர்கள் மனநிறைவுடன் இருக்க உதவும்.

இதில் உள்ள சிறப்பு அம்சங்கள்

* உங்கள் குழந்தைகள் பார்க்கும் இணையத்தின் நேரத்தை நிர்ணயிக்கலாம். அதே சமயம் அவர்கள் 24 மணி நேரத்தில் எவ்வளவு நேரம் இணையத்துடன் இணைந்து இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

* ஒரு நாளைக்கு அவர்கள் எவ்வளவு மணி நேரம் டேப் அல்லது செல்போனை பயன்படுத்தலாம் என்று நேரத்தையும் நிர்ணயிக்கலாம்.

*அவர்கள் செல்போனுக்கு வரும் செய்திகள் மற்றும் அழைப்புகளை கவனிக்கலாம். அதே போல் அவர்களின் முகநூல் பயன்பாட்டையும் தெரிந்து கொள்ள முடியும்.

*இந்த ஆப் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை நாம் கண்காணிக்க முடியும். அது அவள் ஆபத்தில் இருக்கும் நேரத்தில் அவள் எந்த இடத்தில் இருக்கிறாள் என்பதை சுட்டிக் காட்டும். மேலும் ஆன்லைன் மூலம் உங்க குழந்தையின் அனைத்து செயல்களையும் நாம் கன்ட்ரோல் செய்ய முடியும் என்பதால் ஒவ்வொரு பெற்றோருக்கும் பாதுகாப்பு தன்மையை உணரச் செய்யும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ்த் தேசியமும் குழாயடிச் சண்டைகளும்!!! (கட்டுரை)
Next post தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)