அந்தந்த வயதில்…!! (மருத்துவம்)
ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும், அதனைத் தொடரவும் உடல் பரிசோதனை என்பது மிகவும் முக்கியமாகும். வரும் முன் காப்போம் என்பதுபோல மருத்துவரை அணுகி பரிசோதித்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது மிக அவசியமான ஒரு வாழ்க்கைமுறை. அப்படி இல்லாதபட்சத்தில் எதிர்காலத்தில் பல இன்னல்களை சந்திக்க வேண்டி நேரிடும்…
உரிய நேரத்தில் நோயைக் கண்டறிவதும், எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறைகளும்தான் எதிர்வரும் காலத்தில் நம்மை காக்கும் அரணாக அமைகிறது. எனவே, ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் ஏற்ற சிகிச்சைமுறையைப் பற்றி பிரபல கல்லீரல் மருத்துவரான சாண்ட்ரா கபாட் கூறுகிறார். ஆஸ்திரேலியவைச் சேர்ந்தவரான சாண்ட்ரா, தொலைக்காட்சிகள் மூலமும் பல புத்தகங்களின் மூலமாகவும் பரவலாகவும் அறியப்படுபவர். அந்த செக்லிஸ்ட்டை நாமும் கொஞ்சம் சரிபார்த்துக் கொள்வோம்…
நம்மில் பெரும்பாலானவர்கள் மருத்துவர்களை சந்திப்பதற்கும், பரிசோதனைகள் செய்துகொள்வதையும் முடிந்தவரைத் தவிர்க்கிறோம். யாரேனும் ஆலோசனை சொன்னாலும் அதைப் பின்பற்ற முன் வருவதில்லை. உடல்ரீதியிலான உணர்ச்சி மற்றும் பாலியல் கவலைகள் குறித்தும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை. ஏதேனும் தீவிரமான உடல்நலக்கோளாறுகள் வந்தால் மட்டுமே சிகிச்சை பெற முன் வருகிறோம்.
இந்த கவனக்குறைவைத் தவிர்த்து 20 முதல் 60 வயது வரையிலானவர்கள் எதிர்கொள்ளும் உடல்ரீதியிலான பிரச்னைகள், அதற்கான பரிசோதனை முறைகள் பற்றி பார்ப்போம்…
20 வயதுகளில்…
இந்தப் பருவத்தில் தனி மனிதனின் வாழ்க்கை அவனால் முடிந்த வரை உணர்ந்து தீர்மானிக்கப்படுகிறது. மேலும் நன்றாக படிக்க வேண்டுமா, உழைக்க வேண்டுமா அல்லது பொழுதுபோக்குகளுக்கு சென்று சந்தோஷமாக நேரத்தை செலவழிக்க வேண்டுமா என்றும் முடிவு செய்யப்படுகிறது. அதிக நேரம் தூங்குவதும் தினமும் உடற்பயிற்சி செய்வதும் உணவுமுறையில் கட்டுப்பாடு கடைபிடிப்பதும், காய்கறிகள் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது குறித்து இந்த காலகட்டத்தில் ஒருவர் முடிவு செய்ய வேண்டும். இது உடல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமும் ஆகும்.
வருடத்திற்கு ஒரு முறை பொது மருத்துவரை அணுகி ரத்த அழுத்தம், நுரையீரல், இதயத்துடிப்பு சீராக உள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும். மதுப்பழக்கம் உடையவராகவோ அல்லது கொழுப்பு உணவுகளை அதிகம் உண்பவராகவோ இருந்தால் கல்லீரல், சிறுநீரகம் நன்றாக இயங்குகிறதா என்று பரிசோதனை செய்வது சாலச்சிறந்தது.
அதேபோன்று ரத்த பரிசோதனை செய்து உங்கள் உடலில் முக்கிய உறுப்புகள் சீராக இருக்கிறதா அல்லது இயங்கி வருகிறதா என்று சிகிச்சை மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். உடலில் உள்ள முழு ரத்த அளவு Full blood count (FBC) அதாவது சிவப்பு மற்றும் ெவள்ளை ரத்த அணுக்களின் சராசரியான விகிதாசார அடிப்படையிலேயே ஒருவருடைய நோய் எதிர்ப்பு சக்தியை தீர்மானிக்க முடிகிறது.
30 வயதுகளில்…
இந்தப் பருவத்தில் குடும்ப பாரம் ஒவ்வொருவரின் தலைமேலும் தானாகவே ஏறிவிடும். இது வாழ்வையே அடமானம் வைத்து குடும்பத்தின் வளர்ச்சிக்காக தியாகம் செய்து உழைக்க வேண்டிய காலமாகிறது. அகவை 20-ல் குறிப்பிட்டதுபோலவே இந்த காலகட்டத்திலும் பொது மருத்துவரை அணுகி முழு ரத்த அளவு சீராக உள்ளதா கல்லீரலும், சிறுநீரகமும் பரிசோதிக்கப்படுவது மிக அவசியமாகும்.
அதேபோல் ரத்த பரிசோதனையில் சர்க்கரை நோய் இருக்கிறதா ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்துள்ளதா என்று இதுபோன்ற வலியில்லாத, எளிமையான சிறிய சிகிச்சை முறையின் மூலம் நமது உடலில் உள்ள நோய்களை பற்றி தெரிந்து கொண்டு அதற்கேற்ற சிகிச்சை முறையை கையாளலாம் அல்லது பின்பற்றலாம்.
ஒவ்வொருவரும் இரும்புச்சத்து உள்ளதா என்று மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அதிலும் குறிப்பாக Haemochromatosis உள்ளதா என்று சிகிச்சை மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். Haemochromatosis நோய் உள்ளவர்கள் இரும்பு சத்துகளை இழக்க வாய்ப்பு நேரிடுகிறது. அதேவேளையில் அதிக இரும்புச்சத்து இருந்தாலும் உங்கள் உடல் உறுப்புகள் பாதிப்படையும்.
40 வயதுகளில்…
குறிப்பாக ஆன்டிஜென் ரத்த பரிசோதனை மூலம் ஆண் பால் உறுப்புகளுக்கு உடனிணைவான சுரக்கும் சுரப்பி(Prostate) கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் அதிக சிறுநீர் கழிப்பவராக இருந்தால் மலம் மற்றும் ரத்தம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மூலம், குடல் புற்றுநோய் ஏதேனும் இருப்பதாக தெரிய வந்தால் கால தாமதமின்றி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
குடல் மற்றும் வயிற்றுப் பிரச்னை இருப்பதாக உணர்ந்தால் இரைப்பை குடல்(Gastroenterologist) மருத்துவரை அணுகி பெருங்குடல் மற்றும் இரைப்பையின் உட்தோற்றத்தை பரிசோதித்தல் அவசியமாகும். உங்கள் பரம்பரையில் யாருக்கேனும் அதிக உடல்பருமன் அல்லது லேசான நெஞ்சு வலி இருந்தால் நீங்கள் உஷாராகிவிட வேண்டும். இதயநோய் மருத்துவரை அணுகி எலக்ட்ரோகார்டியோ கிராம்(Electrocardiogram) சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
வருடத்திற்கு ஒரு முறை கண் மருத்துவரை பார்த்து கண்ணில் உயர் அழுத்தம்(Glaucoma), விழிப்புள்ளி சிதைவு(Macular degeneration), கண்புரை(Cataracts) வந்துள்ளதா எனவும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மரபணு மூலமாகவும் சர்க்கரை நோயாளிகளுக்கு கண் நோய் வர வாய்ப்புள்ளது. எனவே, மரபுரீதியிலான காரணங்களையும் திரும்பிப் பார்க்க வேண்டியது அவசியமாக உள்ளது.
50 முதல் 60 வயதுகளில்…
இந்த காலகட்டத்தில் முந்தைய வயதுகளில் செய்துகொள்ள வேண்டிய அவசிய பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். அதிக உடல்பருமன் உள்ளவராகவோ, பரம்பரையில் யாருக்காவது இதய நோய் இருந்தாலோ நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். அதேபோன்று இந்த கால கட்டத்தில் 3 அல்லது 5 வருடத்திற்கு ஒரு முறை பெருங்குடல் தொடர்பான புற்றுநோய் மருத்துவரை பார்த்து பரிசோதித்துக் கொள்வதும் அவசியம்.
Average Rating