தாய்லாந்து வேட்பாளர் ராஜினாமா -ஐ.நா.பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில்

Read Time:1 Minute, 36 Second

ANI.World.2.gifஐ.நா.சபை பொதுச்செயலாளர் கோபிஅனன் பதவிகாலம் வருகிற டிசம்பர் 31-ந்தேதியுடன் முடிவடைவதை தொடர்ந்து அந்த பதவிக்கு புதிய பொதுச்செயலாளரை தேர்ந்து எடுப்பதற்காக தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் இந்தியாவின் சசி தரூர் உள்பட 7 பேர் முதலில் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 3 முறை நடந்த மாதிரி வாக்கெடுப்பில் தொடர்ந்து தென்கொரியாவின் பான் கி மூன் முதலிடம் பிடித்ததால் சசி தரூர் உள்பட சில வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகிக்கொண்டனர்.

தாய்லாந்து நாட்டின் சார்பில் சுராக்கியார்த் சதிராத்தாய் போட்டியிட்டார். இப்போது இவர் போட்டியில் இருந்து விலகிவிட்டதாக அந்த நாட்டின் இடைக்கால பிரதமர் சுராயுத் சூலான்னோன்ட் அறிவித்தார். சுராக்கியார்த் கவிழ்க்கப்பட்ட தக்சின் ஆட்சியில் துணைப்பிரதமராக இருந்தார்.

வருகிற 9-ந்தேதி முறைப்படியான தேர்தல் நடந்து வெற்றி பெற்ற வேட்பாளரை ஐ,நா.பொதுச்சபையின் 192 பேர் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மைக்கேல் ஜாக்சனை ரகசியமாக படம் பிடித்த விமான கம்பெனி அதிபருக்கு 6 மாதம் ஜெயில்
Next post வாகரைப்பகுதி வன்னிப்புலிகளின் நிலைகள்மீது TMVP முற்றுகைத் தாக்குதல்