அக்னி நட்சத்திரம் இன்று – வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 40 Second

இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு இன்று காலை 8.57 மணிக்கு அக்னி நட்சத்திரம் தொடங்கி தொடர்ந்து 24 நாட்கள் அதாவது வருகிற 28 ஆம் திகதி பகல் 1.51 மணியோடு நிறைவடைகிறது. இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துகள் முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கம் பெரிதாக பொதுமக்களுக்கு தெரியவில்லை.

அக்னி வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பகல் நேரங்களில் பருத்தி ஆடைகளை உடுத்துவதுடன், நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும். 24 நாட்கள் தொடரும் வெயிலில் முடிந்தவரை வெளியில் செல்வதை தவிர்த்தால் உடலில் நீர்வற்றிப்போகும் அபாயத்தை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 35 லட்சம் பேருக்கு கொரோனா – 247,470 பேர் உயிரிழப்பு!! (உலக செய்தி)
Next post மதுபானத்துக்கு 70% சிறப்பு கொரோனா கட்டணம்!!! (உலக செய்தி)