இம்மாதம் 28 மற்றும் 29 இல் பேச்சு நடத்த இரு தரப்பும் உடன்பாடு

Read Time:3 Minute, 48 Second

00003.gifஇலங்கையில் அமைதியைக் ஏற்படுத்துவதற்கான சமரசப் பேச்சுவார்த்தைகளை இம்மாதம் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் சுவிஸ் நாட்டில் நடத்த விடுதலைப்புலிகளும், இலங்கை அரசாங்கத் தரப்பினரும் உடன்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை சுவிஸ் நாட்டில் இம்மாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடத்துவதற்கான நோர்வேயின் பரிந்துரையை இலங்கை அரசாங்கம் ஏற்றுள்ளதாக இலங்கை அரசாங்க சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை விடுதலைப்புலிகளின் மிரட்டல் பாணியிலான நடவடிக்கைகளுக்கான, பதில் நடவடிக்கைகளை எடுப்பதற்கான அரசாங்கத்தின் உரிமை குறித்தும் அரசாங்கம் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார்.

மற்றுமொரு கேள்விக்குப் பதிலளித்த அவர், பேச்சுவார்த்தைக்கான சரியான உறுதி மொழிகளை நோர்வே அரசாங்கம், மத்தியஸ்தர்கள் என்ற வகையில் விடுதலைப்புலிகளிடம் இருந்து பெற்றிருக்கும் என்று கருதியே, இந்த விடயத்தை முன்னெடுத்து செல்ல தாம் உடன்பட்டுள்ளதாகவும் கோகன்ன தெரிவித்தார்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு பேச்சுகள் நடத்தப்படுமா என்று கேட்டதற்குப் பதிலளித்த பாலித கோகன்ன அவர்கள், அதற்குப் பதிலாக பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காணுவதற்கான விவகாரங்கள் குறித்து, பொதுமக்களின் பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் குறித்துப் பேசப்படும் என்றும், ஜனநாயகம், பல்கட்சி தேர்தல்கள், அரசியல் ரீதியிலான மாறுபட்ட கருத்துக்களின் சகிப்புத் தன்மை, மனித உரிமைகள், சிறார் போராளிகள் மற்றும் வடக்குக் கிழக்கின் அபிவிருத்தி ஆகியன குறித்துப் பேசப்படும் என்றும் கூறினார்.

விடுதலைப்புலிகளும் ஒப்புதல்

அதேவேளை இந்தத் திகதிகள் குறித்து நோர்வே தரப்பினர் தம்மிடம் பேசியதாகக் கூறிய விடுதலைப்புலிகளின் இராணுவ விவகாரங்கள் குறித்துப் பேசவல்ல இளந்திரையன், அந்தத் திகதிகளில் பேச்சு நடத்த தாம் உடன்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆயினும் இலங்கைப் படையினர் தமது நிலைகள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவது குறித்து தாம் கவலையடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தையாக இருக்கும் என்று தான் கருதுவதாகக் கூறிய இளந்திரையன், போர் நிறுத்த ஒப்பந்தம், வன்செயல்களை நிறுத்துவது, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவது என்பவற்றுக்கு இந்தப் பேச்சுக்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
Next post இன்றைய தேவை பொது தேசிய கொள்கையை வகுப்பதே