அடிப்படை நிலை சைவ பேலியோ டயட்! (மருத்துவம்)
100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ். பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் மூன்று மாதங்களுக்காகவாவது இதை ஒருவேளை உணவாக எடுத்துக்கொள்வது நல்லது. இதிலுள்ள மெக்னீசியம் மற்றும் மற்ற வைட்டமின்கள் டயட்டின்போது உடலுக்குத் தேவையான சத்துகளை அளிக்கிறது. பசியைத் தாங்கும் ஒரு உணவாகவும் இருக்கிறது.
இந்த பாதாமை 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து அந்தத் தண்ணீரையும் மூன்று நான்கு முறை மாற்றிப் பின்னர் அதை சிறிது நேரம் உலரவைத்து, நெய்யில் தீயாமல் வதக்கி பின்னர் உண்ணவும்.அளவு 100 நம்பர்கள் பாதாம் இதன் எடை கூடக் குறைய 100 கிராம் இருக்கும். ஆக, பாதாம் 100 நம்பரா? கிராமா என்று குழம்பவேண்டாம். 100 நம்பர்கள் உண்ண முடியவில்லை என்றால் வயிறு நிரம்ப உண்ணவும்.
அது 75 நம்பர் பாதாமாக இருந்தாலும் பரவாயில்லை. பாதாம் உண்ணும் முன்னும், உண்ட பின்பும் 2 மணி நேரங்கள் தண்ணீர் தவிர வேறு உணவுகள் உண்ணவேண்டாம். அதன் சத்துகளை பாதாம் சேரவிடாது என்பதாலேயே இதைச் சொல்கிறோம். பாதாம் பச்சையாக சாப்பிட்டால் அல்லது நல்ல தரமாக இல்லாமல் இருந்தால் வயிற்று வலி / பேதி போன்றவைகள் வரலாம். வேறு பாதாம் வாங்கி முயற்சிக்கலாம்.
மதிய சாப்பாடு
காலிஃபிளவர் வித் காய்கறி. காலிஃபிளவரை மிக சின்ன அரிசி சைஸ் துண்டுகளாக நறுக்கி இட்லி பாத்திரத்தில் கொதிக்க வைத்து அரிசி போல் பாவித்து பருப்பில்லாத குழம்பில் ஊற்றி உண்ணவும் அல்லது காய்கறி சூப் ஏராளமாக பருகவும். உடன் சிறிது தேங்காய். வாரம் ஒரு நாள் 40 கிராம் கைக்குத்தல்/குதிரைவாலி அரிசி எடுத்து சமைத்து உண்ணலாம். அதற்கு மேல் வேண்டாம்.
ஒவ்வொருமுறை காய்கறி உணவாக எடுக்கும்பொழுதும் 30-40 கிராம் வெண்ணெய் அதனுடன் சேர்த்து உண்ணவும். கொழுப்பு என்பது ஒவ்வொரு உணவிற்கும் தேவை என்பதாலேயே இது சொல்லப்படுகிறது. சைவர்களுக்கு கொழுப்பு உணவு மூலம் கிடைக்கும் வழிகள் குறைவு என்பதால் மேற்சொன்ன விஷயங்களை கவனமாகப் பின்பற்றவும். நைட் டின்னர் : பனீர் டிக்கா. 200 கிராம் பனீரை நெய்யில் வதக்கி டிக்கா அல்லது உங்கள் விருப்பம் போல வீட்டில் தயாரித்த மசாலா கொண்டு சமைத்து உண்ணவும்.
ஸ்னாக்ஸ்: ஒரு கப் முழு கொழுப்பு உள்ள பால்/தயிர். தினம் 100 கிராம் கீரை (எல்லா வகைக் கீரைகளும் உண்ணலாம்) சேர்த்துக்கொள்ளவும்.சமையல் எண்ணெய் நெய்/பட்டர்/செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்/செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் / வசதி இருந்தால் ஆலிவ் ஆயில் மட்டுமே. எண்ணெயை கொதிக்க வைக்கக் கூடாது, உயர் வெப்பத்தில் காய்ச்சக் கூடாது, எந்த உணவையும் பொரித்து உண்ணக்கூடாது.
இனிப்பு எந்த வடிவிலும் (தேன், கருப்பட்டி, சுகர்ஃப்ரீ, வெள்ளை சர்க்கரை, நாட்டு சர்க்கரை, வெல்லம், ஸ்டீவியா, இன்னபிற கூடாது.) முட்டை சேர்த்த சைவ டயட் உங்கள் விருப்பமாக இருந்தால் மேலே சொன்னவற்றில் ஒரு உணவாக 4-5 முட்டைகள் சேர்த்துக்கொள்ளவும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating