உடல் வலி தீர மூலிகை மருத்துவம்!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 48 Second

வேலைப்பளு காரணமாக நாம் உடலை கவனிக்க தவறி விடுகிறோம். உடல் உழைப்புக்கு தேவையான கலோரிகள் எடுக்கப்பட்டு விட்டதா? என்பது குறித்து நாம் கவலைப்படுவதில்லை. அதன் விளைவாக நமக்கு உடல் வலி ஏற்படுகிறது. அந்த உடல் வலி நம்மை ஒரு நாள் மிகவும் துன்பம் கொடுத்து காய்ச்சலில் போய் நிறுத்தி விடுகிறது. டெங்கு காய்ச்சலின் அறிகுறியே உடல் வலிதான். எனவே, நல்ல உணவும் ஓய்வும் உடலுக்கு மிகவும் அவசியம்.

n உப்பை வறுத்து ஒற்றடம் கொடுத்தால் வீக்கம், கால்வலி உடம்பு வலி குணமாகும்.
n உப்புக்கரைசலை சுளுக்கு, வீக்கம் உள்ள பகுதியில் விட்டால் வலியும் வீக்கமும் குறையும்.
n உடல் உறுப்புகளிலும் தசைப்பகுதிகளிலும் வலி ஏற்படும்
சமயங்களில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் பாலில் கலந்து பருகினால் குணமடையலாம்.
n முருங்கை இலையுடன் உப்புசேர்த்து இடித்து பிழிந்து சாற்றை தசைபிடிப்பு இருக்கும் இடத்தில் தேய்த்துவிட வேண்டும்.
n நொச்சி இலையை நீரில் போட்டு நன்றாக காய்ச்சி இளஞ்சூட்டுடன் குளித்துவர வாதத்தினால் வந்த உடல் வலி தீரும்.
n 10 கிராம் வாயு விளங்கம் தூளை நூறு மி.லி. நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி ஆறிய பின் மேல் பூச்சாக தடவிவர மூட்டுவலி, வீக்கம் குணமாகும்.
n வெந்தைய கீரையை சுத்தம் செய்து, வதக்கி அத்துடன் வாதுமைப் பருப்பு கசகசா, கோதுமை சேர்த்து தேவையான அளவு பால் ஊற்றி நன்கு அறைத்து எடுத்துக் காய்ச்சி சிறிது நெய்விட்டு கிளறி அருந்த உடல் வலிமை பெறும். இடுப்பு வலி நீங்கும்.
n பார்லி அரிசியுடன் வில்வம் பழத்தோலை சேர்த்து காடிவிட்டு அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசினால் மூட்டுவலி, நரம்புவலி குணமாகும்.
n முருங்கை ஈர்க்கை இடித்து குடிநீராக்கி பருகினால் அசதி உடல் வலி மாயமாகும்.
n முடக்கத்தான் இலையை அரிசி மாவுடன் கலந்து அடைபோல் செய்து சாப்பிடலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழ்வென்பது… பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)
Next post நிலவேம்புவின் மகிமை !! (மருத்துவம்)