தாய்லாந்தில் பதவி இழந்த பிரதமர், கட்சிதலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார்

Read Time:1 Minute, 6 Second

Tailand.Flag.jpgதாய்லாந்து நாட்டில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து பிரதமர் தக்சின் ஷினவத்ரா பதவி இழந்தார். இடைக்கால பிரதமராக ஓய்வு பெற்ற ராணுவத்தளபதி சுராயுத் சூலாநொன்ட் நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார். இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்துள்ள தக்சின் மீதான ஊழல் புகார் பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தாய் ராக் தாய் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தக்சின் அறிவித்தார். தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்து இருப்பதாக தனது ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாக அக்கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
Next post சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியல் இந்தியாவின் இந்திரா நூயி முதலிடம்