Festival makeup!! (மகளிர் பக்கம்)
நவராத்திரியில் ஆரம்பித்து பொங்கல் வரை இது பண்டிகை காலம். பண்டிகைகள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து நெருங்குவதால் ஒவ்வொரு முறையும் அழகு நிலையங்களுக்கு செல்ல முடியாதவர்கள் தங்களை எப்படி வீட்டில் அழகு படுத்தலாம் என்பதை அழகுக்கலை நிபுணர் ஹேமலதா படங்களுடன் விளக்குகிறார்.
எப்போதுமே தங்களை அழகாக வெளிப்படுத்திக் கொள்வதில் பெண்களுக்கு ஆர்வம் அதிகம். அதுவே பண்டிகை காலங்கள் என்றால் அலங்காரத்தில் கவனம் சற்று கூடுதலாகவே இருக்கும். ஆனால் பண்டிகை நேர வேலைப்பளு, கூடவே வீட்டுக்கு வரும் விருந்தினர்களையும் உபசரிப்பது என கஷ்டப்பட்டு தாங்கள் போட்ட மேக்கப் கலையாமலும் நீண்ட நேரம் இருக்க வேண்டும். இதோ சின்னச் சின்ன ஸ்டெப்பில் சூப்பராக, நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கும் மேக்கப் எப்படிப் போடுவது என்பதை நமக்காகச் செய்து காட்டுகிறார் ஹேமலதா.
முகத்திற்கு…
1. ஃபேஸ்வாஷ் அல்லது சோப்பால் முகத்தை சுத்தம் செய்யவும்.
2. மிகச் சிறிய துளி ப்ரைமரை எடுத்து முகத்திற்கு அப்ளை செய்யவும்.
3. அடுத்தது மாய்ச்சரைசர். சில தயாரிப்புகளில் ப்ரைமர் கம் மாய்ச்சரைசர் இணைந்தே கிடைக்கிறது.
4. முகத்தில் கரும்புள்ளி, கருவளையம், தழும்பு இருந்தால் அதை மறைக்ககன்சீலரை தேய்க்காமல் டேப்பிங் செய்யவும்.
5. ஸ்பான்ஞ் அல்லது ஃப்ரஷ் வைத்து உங்கள் ஸ்கின் நிறத்தில் உள்ள ஃபவுண்டேஷனை போடவும்.
6. இப்போது முகம் பார்க்க க்ளீன் அண்ட் ஃப்ரஷ் லுக்.
கண்கள் மற்றும் இமைகளுக்கு…
1. பேஸ்ட் கம் பவுடர் தயாரிப்பில் வரும் புராடக்ட் பயன்படுத்தி புருவத்தை வரைய நேச்சுரல் லுக் மற்றும் ஐ புரோசும் பார்க்க அட்டகாசமாக இருக்கும்.
2. கண்களின் சைஸ் பொருத்து மேல் அல்லது கீழ் இமையின் பார்டர் லைனில் ஒரு பகுதி மட்டும் ஐ லைனர் போட கண்களின் லுக் இயல்பாக இருக்கும்.
3. கண்களின் இமை முடிகளில் மஸ்காரா போடவும்.
4. லைட் பிங்க் அல்லது ஸ்கின் நிறத்தில் சிங்கிள் கலர் ஷேடோ பயன்படுத்த ஹெவி லுக் இன்றி, கண்கள் மூடித் திறக்கையில் சைனிங் லுக் கிடைக்கும்.
5. லிப்லைனர் கொண்டு முதலில் உதடுகளின் ஓரங்களில் அழகாக உதட்டினை வரையவும். பிறகு லைட் நிறத்தில் லிப்ஸ்டிக் இடவும்.
6. இறுதியில் கண்கள் மற்றும் புருவங்களில் படாமல், காம்பேக்ட் பவுடரை தேய்க்காமல் ஒற்றி எடுக்கவும்.
டிப்ஸ் 1
குட்டீஸ்க்கு கன்சீலர், ஃபவுண்டேஷன் தேவையில்லை. ஐ ஷேடோ லிப்ஸ்டிக்கோடு நிறுத்தி, காம்பேக்ட் பயன்படுத்தலாம்.வயதானவர்களுக்கு கன்சீலருக்கு பதில் ஐஸ் க்யூப்ஸ் பயன்படுத்தலாம். ஐ ஷேடோ தவிர்த்து, ஐ ப்ரோஸ் மற்றும் லைட் ஷேட் லிப்ஸ்டிக் போட்டால் போதுமானது.
டிப்ஸ் 2
* பட்ஜெட்டுக்கு ஏற்ற புராடக்ட்ஸ் சந்தைகளில் தாராளமாய் கிடைக்கிறது.
* வறண்ட சருமம் என்றால் க்ரீம் பேஸ், எண்ணெய் சருமம் என்றால் லிப்ஸ்டிக்கில் இருந்து அனைத்தையும் ஜெல் பேஸ் பயன்படுத்த லுக் சூப்பராகும்.
* ஆலுவேரா, அவக்கோடா இவற்றில் எதை வேண்டுமானாலும் மாய்ச்சரைசராகப் பயன்படுத்தலாம்.
* ப்ரைமர் பயன்படுத்தினால் ஸ்கின் சாஃப்ட்டாகும்.
* டோனர் பயன்படுத்த மேக்கப் நீண்ட நேரம் கலையாது.
* ஃபவுண்டேஷன் ஷைனிங் லுக் தரும்.
* கன்சீலர் இல்லாதவர்கள், ஸ்கின் கலரை விட இரண்டு ஸ்டெப் அதிகமுள்ள ஃபவுண்டேஷனை மிக்ஸ் செய்து டார்க் ஸ்பாட்ஸ், கருவளையம், தழும்பு உள்ள இடத்தில் டேப்பிங் செய்யவும்.
* விரும்பினால் லிப்லைனர் இல்லாமலும் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளலாம்.
Average Rating