நோய் எதிர்ப்பு சக்தியும் நிமோனியாவும்…!! (மருத்துவம்)

Read Time:10 Minute, 48 Second

நிமோனியா என்பது நுரையீரலை பாதிக்கக் கூடிய ஒரு வகை தொற்றுநோய். நிமோனியா பல காரணங்களால் பரவலாம். பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்று, வைரஸ் தொற்று, உடம்பு உருக்கி நோய் என்று குறிப்பிடப்படுகிற காசநோயான TB, பூஞ்சை(Fungus) போன்ற காரணங்களால் நிமோனியா உண்டாகலாம். நிமோனியாவை மருத்துவர்கள் இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். Community acquired pneumonia என்ற முதல் வகையினை குணப்படுத்துவது எளிதாகும். Hospital acquired pneumonia என்ற இரண்டாம் வகையினைக் குணப்படுத்துவது கடினம். காரணம், உட்கொள்ளும் மருந்தையும் பொருட்படுத்தாமல் நுரையீரலை எளிதில் தாக்கி பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வல்லமை கொண்டது Hospital acquired pneumonia.

நிமோனியா எப்போது அபாயமாகிறது?

பொதுவாக பாக்டீரியாவால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அதில் ஒன்றுதான் Pneumococcal pneumonia எனப்படும் நோயாகும். 10 முதல் 15 சதவிகிதம் பேருக்கு இந்த பாக்டீரியா தொற்றுநோய் மூக்கில் இருக்கும். இதன் காரணமாக மூளைக்காய்ச்சல் பாதிப்பு கூட ஏற்படலாம், இதயத்திலும் பாதிப்பு ஏற்படுத்தலாம். இந்த நோய் ரத்தத்தில் அதிகம் பரவினால் இன்னும் அதிக பாதிப்பும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. முன்னர் 60 வயதுக்கு ஏற்பட்டவர்களுக்கு நிமோனியா வந்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருந்தது. ஆனால், தற்போது அந்த அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

19 முதல் 65 வயதுடையவர்களுக்கு வேறேதும் உடல்ரீதியாக கோளாறு இருந்தால் நிமோனியா வரும் சாத்தியம் அதிகம். குறிப்பாக சர்க்கரை நோய், நுரையீரல் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், பால்வினை நோய் (HIV/AIDS) உள்ளவர்கள், ஊக்கமருந்து(Steroid) எடுத்துக்கொள்பவர்கள், மண்ணீரல் உறுப்பு அகற்றியவர்கள் ஆகியோருக்கு இந்த நோயின் தாக்கம் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு உள்ளவர்கள் நிமோனியா நோயால் அதிகமாக பாதிக்கப்படுவர்.

நிமோனியாவின் அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், இருமலுடன் சேர்த்து பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் சளி வரலாம், மார்பு பகுதியில் வலி இருக்கலாம், நுரையீரல் எங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதோ அங்கும் வலி இருக்கலாம். மேலும் உடல் சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவையும் நிமோனியாவின் அறிகுறிகள் ஆகும். மருத்துவர் நுரையீரலில் ஸ்டெதஸ்கோப் வைத்து பார்க்கும்போது வழக்கத்துக்கு மாறான சத்தம் கேட்கலாம். மறுபக்கம் பார்க்கும்போது நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் சுவாசிப்பதில் குறைவாக இருக்கலாம் அல்லது சிரமப்படலாம். காய்ச்சல் அதிகமாக இருக்கலாம்.

நிமோனியாவை எப்படி கண்டறிவார்கள்?

நிமோனியாவை தெரிந்துகொள்ள எக்ஸ்ரே எடுக்க வேண்டி இருக்கும். ஆக்சிஜன் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதுடன் சளி பரிசோதனை ஆகியவை ஆய்வுக்கு எடுத்துப் பார்ப்போம். நிமோனியா அதிகமானால் ICU-வில் நோயாளி அனுமதிக்கப்பட்டால், ரத்த மாதிரி எடுத்து நுரையீரலிலிருந்து வெளியேறிய கிருமிகள் ரத்தத்தில் கலந்து உள்ளதா என்று உறுதி செய்ய ஆய்வு செய்யப்படும். ஏற்கனவே சொன்னதுபோல சளி ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு எந்த மாதிரியான கிருமிகள் தாக்கியது என்று தெரிந்துகொண்டு சிகிச்சை கொடுக்கப்படுகிறது. சாதாரணமாக ஆன்டிபயாட்டிக் கொடுக்கப்படும். 35 வயது உடையவர் இருமல் சளி உள்ளவர் என்றால் Oral antibiotic கொடுக்கப்படும். அதுவே நோய் வாய்ப்பட்டவர்கள் அதிலும் முதியவர்களாக இருந்து இதய நோய், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்களை ICU-வில் அனுமதித்து High antibiotic கொடுக்க வேண்டியது இருக்கும்.

நிமோனியாவைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

5 வயதுக்கும் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு Pneumococcal vaccine போட வேண்டும். 2,3,4 மற்றும் 15 மாதம் என்று 4 ஊசி போட வேண்டும். அதேபோன்று 65 வயதுக்கு மேலே உள்ளவர்களுக்கு 2 doses of the vaccine pneumococcal vaccine போட வேண்டும். இளம் வயதுடையவர்கள் யாருக்கெல்லாம் இந்த நோய் வருவதற்கான வாய்ப்பிருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் இந்த ஊசி போட வேண்டியது கட்டாயம். சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கும் இந்த ஊசி போடலாம்.

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு Conjugate vaccine போடப்படுகிறது. வயது முதிர்ந்தவர்களுக்கு Conjugate ஊசியைத் தொடர்ந்து Polysaccharide vaccine என்ற இன்ஜக்‌ஷனும் போடப்படுகிறது. அதுவும் மருத்துவரின் ஆய்வுக்கு பிறகுதான் இந்த ஊசி போட பரிந்துரைக்கப்படுகிறது. நிமோனியா நோயை எதிர்கொள்ள அதிக ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. உறுதியான உடல் கட்டமைப்பு உள்ளவர்களுக்கு இந்த நோய் தாக்காது என்பது உறுதி. ஆக்சிஜன் குறைவாக இருந்தால் கொடுக்க வேண்டும். ஆன்டிபயாட்டிக் சிரிஞ்சாகவோ அல்லது மாத்திரையாகவோ கொடுக்கலாம். நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் Ventilation சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும்.

நிமோனியாவால் உயிரிழப்பவர்களின் சராசரி விகிதம் அதிகமாகவே இருக்கிறது. ஏனெனில், முன்னரே சொன்னதுபோல இது ஒரு தொற்றுநோய். நோய் உள்ளவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கும் எளிதாக சுவாசிக்கும் மூக்கின் வழியாக சென்று நுரையீரலை பாதிக்கச் செய்யும். நுரையீரலிலிருந்து ரத்தக்குழாய் மூலம் மற்ற உறுப்புகளுக்குச் சென்று இந்த நோயின் தாக்கம் அதிகரிப்பதுடன் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவில்லையென்றால் நிலைமை மோசமாகிவிடும்.

நிமோனியா எப்படி தாக்குகிறது?

நிமோனியா நோய் ஒருவரை நேரடியாக தாக்காது. குழந்தைக்கு இருக்கும் சளியில் 20% Pneumococcal மூக்கில் இருந்தாலும் அந்த குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதுவும் செய்யாது. அதுவே பராமரிப்பவர்கள் 65 வயதுக்கு மேல் இருந்தால் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களாக இருந்தால் நிமோனியா இப்படியாக பரவ வாய்ப்பிருக்கிறது. எனவே காற்று, சளி என்று மற்றவர்களால் காற்றின் வழியேயும், தொற்றின் வழியேயும் நிமொன் வழியாக பரவுகிறது. நிமோனியா காற்றின் மூலம் பரவும் நோயாக இருப்பதால் எலும்பு உருக்கி நோய் (TB) ஆக இருந்தாலும் சளி இல்லாமல் இருமல் மூலமாகவும் 90% பரவ வாய்ப்பிருக்கிறது. அம்மை(Chickenpox) போன்ற நோய் வழியாக காற்றின் மூலமும் எளிதாக பரவும் ஆற்றல் கொண்டது.

தடுப்பூசிகள் அவசியம்

நோயைத் தடுக்க ஒவ்வொரு ஆண்டும் காய்ச்சல் தடுப்பூசி(Flu vaccine) அனைவரும் போட்டுக்கொள்வது அவசியம். 20-60 வயது உள்ளவர்கள் சர்க்கரை மற்றும் இதயநோய் உள்ளவர்கள் நிமோனியா தடுப்பு மருந்து போட வேண்டும். அதேபோன்று 10 வருடத்திற்கு ஒருமுறை Tetanus ஊசி போடுவதும் அவசியமாகும். நம்மைச் சுற்றி உள்ள சுற்றுச்சூழலும் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று நாம் உறுதி செய்துகொள்ள வேண்டியது நோயின் தாக்கம் குறைய, ஓர் உத்தியாக பின்பற்ற வேண்டியது அவசியம்.

நோய் ஆற்றல் சக்தி கொண்ட உடலாக நம் உடல்நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஜங் உணவுகளை தவிர்த்து. சத்தான பச்சை காய்கறிகள் அதாவது பச்சைக் காய்கறிகள் உண்பது சாலச் சிறந்ததாகும். நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலில் உருவாக்கிக் கொள்வது ஒன்றே நம்மை இந்த நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள நல்ல திடமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி மற்றும் சத்தான பச்சை காய்கறிகள் உட்கொண்டாலே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்படிப்பட்ட அதீத புத்திசாலித்தனத்தை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்!! (வீடியோ)
Next post பாலும் பால் சார்ந்த பொருட்களும்…!! (மருத்துவம்)