அழியாத கோலங்கள்-கலை வடிவில் போராட்டத்தை வைரலாக்கிய பெண்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 18 Second

சென்னை பெசன்ட் நகரில், குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மார்கழி மாதம் போடும் கோலத்தின் மூலமாக மக்கள் கூடும் இடங்களில் அதிகாலையில் நான்கு பெண்கள் உட்பட ஐவராக இணைந்து கோலத்தினால் NO TO NRA, NO TO CAA, NO TO NPR என கோலமிட்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த இந்தியாவும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களால் அதிர்ந்து கொண்டிருக்க, தமிழகத்தில் கோலம் போடுதல் போராட்டக்காரர்களின் வியூகமாக மாறி வரலாறு படைத்தது. இது குறித்து தகவல் அறிந்த பெசன்ட் நகர் காவலர்கள் கோலம் வரைந்த பெண்கள் உட்பட அனைவரையும் சிறை பிடித்ததோடு, அவர்களை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றிச் சென்று ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு விடுவித்தனர்.

பெசன்ட் நகரில் ஆரம்பித்த இந்தக் கோலப் போராட்டம், சற்று நேரத்தில் வைரலாகி, குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோலம் போடும் போராட்டமாக பட்டி தொட்டி எங்கும் பரவியது. பெண்களோடு ஆண்களும் இணைந்து தங்கள் வீட்டு வாசலில் கோலம் மூலமாக எதிர்ப்பு கோஷங்களை பதிவு செய்தனர்.

இந்தச் செயல் சமூக ஊடகங்களில் வைரலாக, ஒட்டுமொத்த தமிழகத்தையும் தொடர்ந்து அண்டை மாநிலங்களுக்கும் கோலப் போராட்டம் பரவியது. இதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் மைசூர் அரண்மனை வாயிலிலும் பெண்கள் கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை குடியுரிமை மசோதாவிற்கு எதிராகப் பதிவிட்டனர்.2019ம் ஆண்டின் இறுதி நாட்கள், போராட்டங்களை கலை வடிவில் கோலங்களின் வழியே உருவாக்கி வைத்து விடைபெற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொரோனா வைரஸ் – இதுவரை 80 பேர் பலி – 3000 பேர் பாதிப்பு!! (உலக செய்தி)
Next post டைம் இதழின் அட்டையை அலங்கரித்த கிரேட்டா தன்பெர்க்!! (மகளிர் பக்கம்)