நீரிழிவைக் கட்டுப்படுத்த வைட்டமின் டி!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 52 Second

வைட்டமின் டி எலும்பு நலனுக்கு உகந்தது, சூரிய ஒளியில் கிடைப்பது என்று நமக்குத் தெரியும். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட North american menopause society ஆராய்ச்சியில், நீரிழிவிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் வைட்டமின் டி உதவுகிறது என்பது தெரிய வந்துள்ளது.

மனித உடலில் வயிற்றுக்கு பின் பக்கம் இருக்கும் கணையம் எனும் பகுதியிலிருந்து முறையாக இன்சுலின் சுரக்காமல் தடைபடும்போது குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோயில் டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகைகள் உள்ளது. இதில் டைப் 1 என்பது கணையத்திலிருந்து முற்றிலும் இன்சுலின் சுரக்காமல் இருப்பதால் ஏற்படும் குறைபாட்டால் ஏற்படுவது. டைப் 2 என்பது கணையத்திலிருந்து போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல் இருப்பதால் ஏற்படுவது. இதில் இந்தியாவில் அதிகமானோர் டைப் 2 வகை நீரிழிவு நோயால்தான் பாதிக்கப்படுகிறார்கள். இன்று புற்றுநோய்க்கு அடுத்தபடியாக அதிகமாக மக்களை அச்சுறுத்தி வருகிறது நீரிழிவு நோய். இதில் இந்தியர்களே அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

இதற்கு எத்தனையோ வகையான மருந்துகள் இருந்தும், நோய் வந்த பிறகு கட்டுப்படுத்த முடியுமே தவிர அதனை முழுவதும் தடுப்பதற்கென இதுவரை எந்த மருந்தும் இல்லை என்கிறது ஆய்வு. தற்போது டைப் 2 வகை நீரிழிவு நோய் சம்பந்தமாக வட அமெரிக்கன் மெனோபாஸ் சொசைட்டி மேற்கொண்ட ஆய்வில், தேவையான வைட்டமின் டி எடுத்துக்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம் என தெரிய வந்துள்ளது. வைட்டமின் டி போதுமான அளவில் எடுத்துக்கொள்வதன் மூலம் கணையத்தின் செயல்பாட்டை அதிகப்படுத்த முடியும். அதனால் இன்சுலின் அதிகம் சுரக்க வாய்ப்பு உள்ளது. இன்சுலின் அதிகமாக சுரக்க தொடங்கிவிட்டால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம் என்கிறது இந்த ஆய்வு!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொடங்கும் தேர்தல் நாடகங்கள் !! ( கட்டுரை)
Next post சில்லென்று ஒரு முத்தம் தொடங்கட்டும் யுத்தம்!! (அவ்வப்போது கிளாமர்)