மஞ்சள் எனும் அற்புதம்!! (மகளிர் பக்கம்)
நமது வீடுகளில் மிகவும் சுலபமாக கிடைக்கக் கூடிய ஒரு பொருள் என்றால் அது மஞ்சள். இது சமையலில் சேர்க்கக் கூடிய ஒரு பொருளாக மட்டும் இல்லாமல் அழகு சாதனப் பொருட்களில் முதல் இடத்தினை பெற்றுள்ளது. கிருமி நாசினியாக செயல்படுவது தொடங்கி, உடல் அழற்சியை தடுத்தல், காயங்களுக்கு மருந்தாகுதல், முகப்பருக்களை விரட்டுதல் என மஞ்சளின் மகிமைகள் ஏராளம். சமையலில் மசாலா பொருட்களின் மன்னன் என்றுகூட மஞ்சளை அழைக்கலாம். அவ்வளவு மருத்துவ குணங்கள் அதில் நிறைந்துள்ளன.
* மஞ்சள் இஞ்சி வகையைச் சார்ந்த ஒரு தாவரம்.
* மசாலா பொருட்களின் தங்கம் என வர்ணிக்கப்படுகிறது.
* அடிப்படையாக உணவில் பெருமளவு பயன்படுத்துவதால், இது மருத்துவ பொருளாக இடம் பெற்று வருகிறது.
* மஞ்சளில் முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கரிமஞ்சள், நாக மஞ்சள், காட்டு மஞ்சள், மர மஞ்சள் என பல ரகங்கள் உண்டு. இதில் முட்டா மஞ்சள் உருண்டையாக இருக்கும். இதனை அரைத்துத்தான் கிராமப் பெண்கள் முகத்தில் தடவுவர்.
* புதுவீடு புகுபவர்கள், முதலில் நுழைந்து சாமி படத்தின் முன் உப்பு மற்றும் மஞ்சளை வைத்துவிட்டு, பிறகு தான் பால் காய்ச்சி, அந்த நாளை கொண்டாடுவார்கள்.
* பல வீடுகளில், புது ஆடைகளை மஞ்சள், சந்தனம், குங்குமம் தடவி பிறகுதான் அணிவர்.
* மாரியம்மன் கோயிலுக்கு அக்கினி சட்டி எடுப்பவர்கள் மீது முதலில் மஞ்சள் கலந்த நீரை ஊற்றுவர்.
* வெதுவெது பாலில் மஞ்சள், மிளகு பொடிகளை கொஞ்சம் சேர்த்து சாப்பிட்டால் மழை காலத்தில் ஏற்படும் சளித் தொல்லையில் இருந்து விடுபெறலாம்.
* வீடுகளில், உணவு பண்டங்களில் இறுதி கலவையாக மஞ்சள் பொடியை இணைப்பர். இது ரத்தத்தை சுத்திகரிக்கும். புளிப்பு உட்பட பலவற்றின் வீரியத்தை குறைத்து தோல் வியாதிகள் வராமல் காக்கும்.
* வயிறு சம்பந்தமான தொல்லைகளுக்கு நல்லது. குறிப்பாக அடிவயிற்றுப்புண், வலியைக் குணப்படுத்தும்.
* சிலர் குழந்தை பிறந்து தொப்புள் கொடி அகற்றப்பட்டதும், அது செப்டிக் ஆகாமல் இருக்க மஞ்சளைத் தடவுவர். இது வங்காள தேசத்தில் இன்றும் நடைமுறையில் உள்ளது.
* இறைச்சி கெடாமல் இருக்கவும் அதில் உள்ள கிருமிகள் உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்கவும் இறைச்சியினை மஞ்சள் கொண்டு அலசுவது வழக்கம்.
* மஞ்சளை வயதானவர்கள் சேர்த்துக்கொள்வதால், நினைவு குறைபாடு நீங்கும்.
* உலகில் மஞ்சள் மிக அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான். அதனை அதிகம் பயன்படுத்துவது மற்றும் ஏற்றுமதி செய்வதிலும் முதலிடம் இந்தியாவுக்குத்தான். இந்திய மருத்துவத்தில், 4000 வருடங்களாக மஞ்சள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
* உணவில் விஷம் கலந்து சாப்பிட்டவர்கள் மஞ்சளை கரைத்துக் குடித்தால் வீரியம் குறையும்.
* வாயு உற்பத்தியைத் தடுக்கும். ஜீரண சக்தியை கூட்டும். கற்களை கரைக்கும். மூட்டுவலி தொல்லைகள் மறையும். ஆஸ்துமாவுக்கு நல்லது. சர்க்கரை நோய் சார்ந்த காயங்கள், மூக்கிலிருந்து நீர் கொட்டுதல், இருமல், மூக்கு சார்ந்த அழற்சிகளுக்கு மஞ்சள் அருமருந்து.
Average Rating