வீட்டைப் பாதுகாக்கும் app!! ( கட்டுரை)
அனைத்து விதமான மின் சாதனங்களையும் ஒரே நெட்வொர்க்கில் இணைத்து, அவற்றை இன்டர்நெட் மூலமாகக் கட்டுப்படுத்துவதற்குப் பெயர்தான், ‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீட்டிலுள்ள மின் சாதனங்களை இணைத்து மின்சாரத்தைச் சேமிக்க முடியும். மின் கசிவைத் தடுக்கலாம். நாம் எங்கிருந்தாலும் வீட்டைக் கண்காணித்துப் பாதுகாத்துக் கொள்ளலாம். இதற்கெல்லாம் அந்த மின் சாதனங்கள் ‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’ தொழில்நுட்பத்தில் இயங்கு பவையாக இருத்தல் அவசியம்.
அதேநேரம் அந்த மின் சாதனங் களின் விலை அதிகம் என்பதால் இந்தத் தொழில்நுட்பம் சாமான்ய மக்களுக்குக் கனவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் அனைத்து மக்களும் தங்களின் வீட்டிலுள்ள மின் சாதனங்களை இணைத்து, அவற்றைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் ‘Gemicates Hagway Smart Hub’ என்ற இணைப்பு மையத்தையும், ‘Hagway’ என்ற ஆப்பையும் உருவாக்கியிருக்கிறார் இளம் பொறியாளர் விஜயராஜா. இதை சாமான்யர்களும் வாங்கிப் பயன்படுத்த முடியும் என்பதுதான் ஹைலைட். ‘‘வீட்ல இருக்கிற டிவி, ஃபேன் மாதிரியான மின் சாதனங்களை மொபைல் ஆப் அல்லது வாய்ஸ் கமாண்ட் வழியா கட்டுப்படுத்தறதை ‘ஹோம் ஆட்டோமேஷன்’னு சொல்றோம்.
ஸ்மார்ட்போன் மாதிரி வீட்டையே ஸ்மார்ட் ஹோமா மாத்துற டெக்னாலஜி இது. நம்ம வீட்டை ஹோம் ஆட்டோமேஷன் செய்யணும்னா டிவி, வாஷிங் மெஷின் உட்பட அனைத்து மின் சாதனங்களும் ஸ்மார்ட் டிவைஸ்களா இருக்கணும். இந்த டிவைஸ் தரமா இருந்தாலும் சில குறைபாடுகளும் இருக்கு. உதாரணமா ஸ்மார்ட் ஃபேனை இயக்க தனியா ஒரு ஆப்பை இன்ஸ்டால் பண்ணணும். அதே மாதிரி ஸ்மார்ட் லைட்டுக்கு இன்னொரு ஆப்.
இப்படி ஒவ்வொரு டிவைஸுக்கும் தனித்தனியா ஆப்பை இன்ஸ்டால் செய்துட்டே இருக்கணும். இது நிச்சயம் குழப்பத்தை உண்டாக்கும். தவிர, இந்த டெக்னாலஜியை நல்லா தெரிஞ்சவங்க மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனா, எங்க ஆட்டோமேஷன் கிட் மூலமா ஒரேயொரு ஆப்பினால் எல்லா மின் சாதனங்களையும் இயக்கலாம்! இதுக்காகவே ஸ்பெ ஷலா ‘Hagway’ ஆப்பை வடிவமைச்சிருக்கோம். இதை பதிவிறக்கம் செஞ்சாபோதும். ஸ்மார்ட் டிவைஸ்களை வாங்க வேண்டியதில்ல. எங்க ஹார்டுவேர் மற்றும் சென்சார் வழியா பழைய மின் சாதனங்க ளையே ஸ்மார்ட் டிவைஸ்களா மாத்தியமைக்க முடியும்.
இதுக்காக அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். ஸ்மார்ட்போன் பயன்படுத்தற எல்லாருமே எங்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும். வீடு தவிர வேளாண்துறை, விளையாட்டு மைதானங்கள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள்னு எங்க வேணும்னாலும் இதைப் பயன்படுத்தலாம்.
இன்னொரு விஷயம், சந்தைல இப்ப கிடைக்கிற ஸ்மார்ட் டிவைஸ்களையும் கூட இந்த ஆப்ல இணைக்கலாம்!’’ என தன் கண்டுபிடிப்பின் சிறப்புகளைப் பட்டியலிட்ட விஜயராஜா, ‘‘இப்ப எல்லா பெற்றோர்களும் வேலைக்குப் போறாங்க. அதனால பள்ளி முடிஞ்சு வீடு திரும்பற குழந்தைங்க தனியா வீட்ல இருக்க வேண்டிய நிலை. பெற்றோர் வரும் வரை குழந்தைகளுக்கு இது பாதுகாப்பற்ற சூழல்தான். இதையும் மனசுல வைச்சே இந்த ஆப் மற்றும் இணைப்பு மையத்தை வடிவமைச்சோம். ஆமா… பூமில எந்த மூலைல இருந்தாலும் ‘ஹேக்வே’ ஆப் வழியா குழந்தைகளோட ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனிக்க முடியும். தேவையற்ற பதற்றத்தை இதன் வழியா தவிர்க் கலாம்!’’ என்கிறார் அவர்.
Average Rating