கவர்ச்சி தரும் நக அழகு!! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 17 Second

கடவுள் பெண்களின் ஒவ்வொரு உடல் உறுப்பிலும் ஒவ்வொரு விதமான அழகைப் படைத்திருக்கிறான். பெண்களின் கைவிரல்களும், விரல்களில் அமைந்துள்ள நகங்களும் பெண்களுக்குத் தனித்து ஒரு எழிலையும், கவர்ச்சியையும் அளிக்கின்றன.

* நகங்களை அழகுபடுத்துவதற்கான முதல் நிலை அவற்றை சீராக வெட்டவேண்டும்.

* நீண்ட விரல்களைப் பெற்ற பெண்கள், நகங்களை விரல்களோடு ஒட்டியிருக்கும் வண்ணம் வட்ட வடிவமாக வெட்டிவிட்டால்
அழகாக இருக்கும்.

* குட்டையான விரல்களைக் கொண்ட பெண்கள் கைவிரல்களைவிடச் சற்று நீளமாகக் கூம்பிய வடிவில் நகங்களை வெட்டி விட்டால் அமைப்பாக இருக்கும்.

* குட்டையான விரல் அமைப்பினைப் பெற்ற பெண்கள் நகங்களின் மையப் பகுதியை உள்ளிறங்கும் விதமாகச் சந்திர பிம்பம்போல வெட்டி விட்டால் அழகாக, கவர்ச்சியாக இருக்கும்.

* பாதாம் எண்ணெயை விரல் நகங்களில் தளரப்பூசி, அரை மணி நேரம் வைத்திருந்து பிறகு உடலை மாவினால் கழுவி சுத்தம் செய்து வந்தால் நகங்கள் நல்ல பிரகாசமாக காட்சியளிக்கும்.

* பாலைக் கொதிக்க வைத்து, இறக்கி, பொறுக்கும் சூடாக இருக்கும்போது நகங்களை அதில் படுமாறு நனைத்து, பின்பு சுத்தமான பஞ்சைக் கொண்டு நகங்களை நன்கு தேய்த்து, பாலிஷ் செய்தால் நல்ல பளபளப்பைப் பெற்று, பெருசாக தோற்றமளிக்கும்.

* பூந்திக் கொட்டையை வாங்கி, தண்ணீரில் ஊற வைத்து தேய்த்தால் சோப் நுரைபோல் வரும். அந்த நுரையைக் கொண்டு நகங்களை சுத்தம் செய்தால் நகங்கள் பளிச்சென்று பளபளக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முடிவுகளை எட்டாத கோரிக்கை உடன்படிக்கைகள்!! (கட்டுரை)
Next post காமம் என்பது என்ன? (அவ்வப்போது கிளாமர்)