சாப்பிட மறுத்ததால் தாயார் தாக்கியதில் சிறுமி பலி!! (உலக செய்தி)

Read Time:3 Minute, 9 Second

கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த பெரிய பள்ளியை சேர்ந்தவர் தீபு. இவரது மனைவி திவ்யா.

தீபு-திவ்யா தம்பதியின் மகள் தியா. 4 வயதே ஆகிறது. தியாவை அவரது பெற்றோர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெரிய பள்ளியில் உள்ள மருத்துவ கல்லூரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்படுவதாகவும், ரத்த வாந்தி எடுப்பதாகவும் கூறி சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள், குழந்தையின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை தியா பரிதாபமாக இறந்தது. இதையடுத்து திருவனந்தபுரம் அரசு வைத்தியசாலையில் குழந்தையின் உடலை வைத்தியர்கள் பரிசோதித்து பார்த்தனர். அப்போது குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதும், மூளையில் ரத்தம் உறைந்திருப்பதையும் கண்டனர்.

இதையடுத்து டாக்டர்கள், பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பொலிஸார் விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தை தியாவின் பெற்றோர் தீபு- திவ்யா இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

பொலிஸாரிடம் திவ்யா கூறும்போது, கடந்த சில வாரங்களுக்கு முன்பே குழந்தை தியாவுக்கு காய்ச்சல் இருந்தது. இதற்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன். அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய குழந்தைக்கு மாத்திரை கொடுக்கும் முன்பு உணவு உண்ண கூறினேன். ஆனால் குழந்தை உணவு உண்ண மறுத்தது.

இதில் ஆத்திரம் அடைந்து குழந்தையை தாக்கினேன். அடி தாங்காமல் குழந்தை மயங்கி விழுந்தது. உடனே வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம், என பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வைத்தியர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்பே, குழந்தை எப்படி இறந்தார் என்பது தெரியவரும். அதன்பின்பு மேல் நடவடிக்கை எடுக்க பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாயை மூடிக்கொள்ளதான் மருமகளா? (மகளிர் பக்கம்)
Next post முன்னாள் சபாநாயகர் கைது!! (உலக செய்தி)