ஸ்ரீதேவி சொன்ன ஃபிட்னஸ் ரகசியம்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 8 Second

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தன்னுடைய முதல் படமான ‘தடக்’ வெளியாவதற்கு முன்பே ரசிகர்களின் அன்பையும், பேராதரவையும் பெற்றுவிட்டார். இதற்கு காரணம் அவரது அழகு மட்டுமல்ல: ஃபிட்டான உடலமைப்பும்தான்! நடிப்புத்திறனாலும், அழகாலும் இந்தி சினிமாவில் கோலோச்சிய அவருடைய அம்மா ஸ்ரீதேவி சொன்ன ஒற்றை ஆலோசனைதான் ஜான்வியின் ஃபிட்னஸ் சீக்ரட்.

தன் ஆரோக்கியத்தின் மீது அக்கறையும், உடற்பயிற்சியின் மீது தீராக் காதலும் கொண்டவர் ஜான்வி. ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போடுவதைப் பார்த்தாலே இது புரியும். ‘ஃபிட்னஸ் என்பது எல்லோருக்கும் சொந்தமானது. சினிமா நடிகர்களுக்கு மட்டுமே உரிமையானது அல்ல. அதனால், நீ நடிகையாகாவிட்டாலும் கூட எப்போதும் உன் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்’ என்று முதல் படத்தில் நடிக்க வருவதற்கு முன்பே ஜான்விக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார் ஸ்ரீதேவி. இதை எப்போதும் ஜான்வி மறப்பதில்லை. இதனால் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் நிறைய காய்கறிகளையும், பழங்களையும் தன் உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்கிறார். இனிப்பு மற்றும் ஜங்க் ஃபுட்களை அறவே தவிர்த்துவிடும் ஜான்வி, காலையில் நிறைய தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

அப்படி என்னென்ன ஜான்வியின் டயட்டில் இருக்கிறது?

காலையில் பிரெட் டோஸ்ட், முட்டையின் வெள்ளைக்கரு, ஒரு டம்ளர் பழச்சாறு, தானியங்கள் மற்றும் பால். மதியம் பிரவுன் அரிசி சாதம், சிக்கன் சான்ட்விச், சாலட், பருப்பு வகைகள் சாப்பிடுவார்.

மிகவும் பிஸியான நாட்களில் பழங்கள், காய்கறி சாலட், ஜூஸ். இரவு உணவாக காய்கறி சூப், பருப்பு அல்லது வேகவைத்த காய்கறிகள் அல்லது பச்சைக் காய்கறி சாலட் மற்றும் க்ரில்ட் ஃபிஷ் என மிதமான இரவு உணவை உறங்கச் செல்லும் 3 மணி நேரம் முன்பாகவே முடித்துவிடுகிறார்.பிரபலங்கள் தன்னுடைய ஃபிட்னஸுக்காக எத்தனை திட்டமிடலையும், உழைப்பையும் அளிக்கிறார்கள் என்பதற்கு ஜான்வியும் ஓர் உதாரணம்தான்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலியல் உணர்வை அடக்க என்ன செய்ய வேண்டும்-? (அவ்வப்போது கிளாமர்)
Next post ராட்சசி ராக்ஸ்டார்! (மகளிர் பக்கம்)