பாரம்பரிய உணவுகளில் பணம் சம்பாதிக்கலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 4 Second

இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம் உண்ணும் உணவில் சத்து இருக்கிறதா எனப் பார்ப்பதைவிட அதில் விஷம் இல்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம்.

அந்தளவிற்கு பூச்சிக்கொல்லிகளால் மண் பாழ்பட்டு, அதில் விளையும் பயிர்கள் நாசமாகியுள்ளன. பொதுவாக நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அரிசி உணவை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரை. ஆனால், பாரம்பரிய அரிசிகளை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களும் சாப்பிடலாம்.

பாரம்பரிய அரிசி வகைகளில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் மட்டுமின்றி, மசாலாப் பொருட்கள், வடகம், பொடி, சூப், சத்துமாவு வகைகள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் மேனகா. சுமார் 52 வகையான வேல்யூ ஆடட் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் இவர், இதனை சிறுதொழிலாகவும் செய்தால் உடல்நலத்தோடு பணமும் சம்பாதிக்கலாம் என்று பல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

‘‘பாரம்பரிய அரிசி வகைகளில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவற்றைப் பிரபலப்படுத்தினாலே, அடுத்த தலைமுறைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள். வைத்தியனுக்கு தருவதை, வாணிபனுக்குக் கொடு என்பது பழமொழி.

நாம் பாரம்பரிய உணவுமுறைகளை மறந்து ஃபாஸ்ட் ஃபுட் உணவுமுறைக்கு மாறியதாலேயே இன்றைக்கு பலவித நோய்களை சுமந்து திரிகிறோம். பாரம்பரிய உணவு முறைக்கு மீண்டும் மாறினாலே, மருத்துவச் செலவுகளை கணிசமாக குறைக்க முடியும்’’ என்றவர் பாரம்பரிய அரிசி வகைகளை பற்றி விவரித்தார்.

‘‘முன்பு இந்தியாவில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் இருந்துள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரகங்கள் புழக்கத்தில் இருந்துள்ளது. ஆனால், காலப்போக்கில் இந்த எண்ணிக்கை குறைந்து அதிர்ச்சியளிக்கும் அளவில் உள்ளது.

இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதோடு, பாரம்பரிய அரிசி வகைகளில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து வெற்றிகரமாக விற்பனையும் செய்து வருகிறேன். என்னிடம் சுமார் 100-க்கும் அதிகமான அரிசி வகைகள் உள்ளன. பாரம்பரிய உணவுத் திருவிழா போன்றவற்றின் மூலம் மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். அதோடு, இரண்டு வருடத்திற்கு முன், ‘மண்வாசனை’ என்ற இயற்கை விளைபொருள் அங்காடியை ஆரம்பித்து, வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.

என் வெற்றிக்கு காரணம் என் கணவர். அவரின் பாரம்பரிய அரிசி வகைகள் குறித்த தேடல் தான் என்னையும் அதனுள் இழுத்து சென்றுள்ளது. பாரம்
பரிய நெல் ரகங்களைத் தேடி தமிழகத்தில் உள்ள ஊர்கள் மட்டுமின்றி, ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களுக்கும் என் கணவர் பயணித்தார். அங்குள்ள விவசாயிகளைச் சந்தித்து பாரம்பரிய நெல் ரகங்களைச் சந்தைப்படுத்த விவசாயிகளை ஊக்குவித்தார்.

அரிசி வகைகளை தேடி பத்தாண்டுகளுக்கு முன் என் கணவரோடு சேர்ந்து நாங்கள் களத்தில் இறங்கியபோது மக்களிடம் பாரம்பரிய தானிய வகைகளுக்கு போதிய விழிப்புணர்வு ஆர்வம் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் பாரம்பரிய தானிய அரிசி வகைகளின் மகத்துவத்தைப் பற்றி நாம் கூறும்போது ஆச்சரியமாக கேட்கும் மக்கள் அதை பயன்படுத்த முன்வருவதில் தயக்கம் காட்டுகிறார்கள்.

இந்த தயக்கம் ஏன் என்று எனக்கு புரியவில்லை. அன்றாட உணவில் நாம் பல்வேறு நச்சுப் பொருட்களை சேர்த்து உட்கொண்டு வருகிறோம். இதை தெரிந்த பிறகு பாரம்பரிய அரிசி தானிய வகைகளை பெருமளவில் வாங்குவதற்கு மக்கள் முன்வர வேண்டும். விவசாயிகளை ஆதரிக்காத எந்த நாடும் வாழ்ந்ததில்லை என்று சமூக வலைத்தளங்களில் பதிவு எழுதுபவர்கள் கூட விவசாய பொருட்களை கொள்முதல் செய்ய முன் வருவதில்லை.

இதன் காரணமாகவே ஆண்டு தோறும் டன் கணக்கில் உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை முறையிலான தானியங்கள் வீண் ஆக்கப்படுகின்றன. எனக்கு தெரிந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள், இயற்கை முறையில் விளைவித்த தானிய வகைகளை சந்தைப்படுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்’’ என தன் ஆதங்கத்தை கேள்வியாக முன்வைக்கிறார் மேனகா.

‘‘முதலில் என் குழந்தைகளுக்கு நல்ல சத்தான உணவு பொருட்களை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தானியங்கள் மீதான எங்களின் தேடல் அதிகரித்தது. அதுவே நாளடைவில் மற்ற குழந்தைகளையும் சேர வேண்டும் என்ற எண்ணம் என்னை பல்வேறு சவால்களையும் கடந்து இயங்க செய்கிறது.

பொதுவாகவே எந்த துறையாக இருந்தாலும் பெண்கள் அதில் நிற்பதே சிரமம்தான். இயற்கை விவசாயம் சார்ந்த இந்தத் துறையில் தனி பெண்மணியாக பல்வேறு சவால்களை தினந்தோறுமே எதிர்கொண்டு போராடி வருகிறேன்.

இங்கு சந்தைப்படுத்துவதுதான் மிகப் பெரிய சிக்கலாக இருக்கிறது. இயற்கை தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளையும், நுகர்வோரையும் சரியான முறையில் இணைத்து விட்டால் விவசாயம் மட்டுமல்ல மக்களின் உடல் நலம் வளம் பெரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை” என்ற மேனகா அதில் உள்ள சத்துக்களை பட்டியலிட்டார்.

‘‘ஒவ்வொரு அரிசி வகையை சமைத்து சாப்பிட ஆரம்பித்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. எனக்கு இருந்த தைராய்டு பிரச்னை இந்த பாரம்பரிய அரிசிகளைச் சாப்பிட்டு குணமானது. மருந்து மாத்திரையால் செய்ய முடியாததை இந்த அரிசி செய்தது. வெள்ளையாக பட்டை தீட்டப்பட்ட நாம் அன்றாடம் சாப்பிடும் அரிசிகளில் எந்த சத்துக்களும் இல்லை. பாரம்பரிய அரிசிகளில் வைட்டமின் சத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன.

ஆரம்பத்தில் தி.நகரில் மண்வாசனை என்ற பெயரில் கடை ஒன்றை ஆரம்பித்து பாரம்பரிய அரிசி விற்பனை செய்தேன். சில பாரம்பரிய அரிசி வகைகளை மணிக்கணக்கில் ஊற வைத்தால் மட்டுமே சமைக்க முடியும். இன்றைய இயந்திர உலகில் அதற்கான சாத்தியம் குறைவு. அதோடு அவை குழம்பில் ஒட்டாமல் அரிசி குழையாமல் இருக்கும். இதனால் பலருக்கு சுவை பிடிப்பதில்லை.

எனவே, வாடிக்கையாளர்களுக்கு எளிதாக சமைக்கும் வகையில், அதே சமயத்தில் சுவையாகவும் பாரம்பரிய அரிசி வகைகளை மாற்றித் தர முடிவு செய்தோம். அதனைத் தொடர்ந்து பாரம்பரிய அரிசி வகைகளில் இருந்து மதிப்புக்கூட்டும் பொருட்கள் தயாரிக்க ஆரம்பித்தோம். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததால், எங்கள் வியாபாரமும் சூடு பிடித்தது. மக்களுக்கு நல்ல பொருட்களை விற்பனை செய்கிறோம் என்ற திருப்தியும் கிடைக்கிறது.

தற்போது பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் தானியங்களைப் பயன்படுத்தி கஞ்சி, இட்லி, தோசை, பணியாரம், இடியாப்பம், சத்துமாவு உள்ளிட்ட ரெடி மிக்ஸ் வகைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். இயற்கை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படும் எனது தயாரிப்புகளை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

பெண்கள் ஒவ்ெவாரு பகுதியிலும், நம் பாரம்பரிய அரிசி வகைகளில் மதிப்புக்கூட்டப்பட்ட ெபாருட்கள் தயாரித்து விற்பனை செய்யலாம். இத்தொழிலில் குறைந்தபட்சமாக மாதம் பதினைந்தாயிரம் வரை சம்பாதிக்க வாய்ப்புள்ளது.

அதன்பிறகு, அவரவர் மார்க்கெட்டிங் திறமையைப் பொறுத்து ஐம்பதாயிரம் வரை கூட சம்பாதிக்கலாம். நமது பாரம்பரிய உணவுமுறை மற்றும் தானியங்கள் அழிந்துவிடாமல் காக்க வேண்டியது நம் கடமை. அத்துடன் நோய்நொடியின்றி வாழ நம் உணவுகளே சிறந்தது. அதனால்தான் உணவே மருந்து, மருந்தே உணவு’’ என்று நிறைவாக முடித்தார் மண்வாசனை மேனகா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலையை அள்ளித் தரும் ஆப்(app)கள்! (மகளிர் பக்கம்)
Next post இ-சிகரெட் விற்பனைக்கு தடை !! (உலக செய்தி)