காய் கனி உண்ணவும் கசக்குதா? (மருத்துவம்)
‘காய்கறி மற்றும் பழங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் இந்தியர்கள், போதுமான அளவில் காய்கறி, பழங்களைத் தங்களது உணவுகளில் சேர்த்துக்கொள்வது கிடையாது. வட இந்தியர்களைவிட தென் இந்தியர்களே அதிகமாகக் காய்கறி, பழங்களைச் சேர்த்துக்கொள்கின்றனர்’ என்கிறது இந்தியன் கவுன்சில் ஃபார் ரிசர்ச் ஆன் இன்டர்நேஷனல் எக்கனாமிக் ரிலேசன்ஸ் (ICRIER) என்ற அமைப்பு.
டெல்லி, குர்கான், நொய்டா, மும்பை, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய நகர்புறங்களில் வாழும் மத்தியதர வகுப்பினர் மற்றும் உயர் மத்தியதர வகுப்பினரிடையே எடுக்கப்பட்ட சர்வே இது. ‘ஒரு நபர் தினமும் 400 MG அளவுக்கு காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதாவது, தினசரி ஐந்து முறை காய்கறி, பழங்களை தங்கள் உணவில் எந்த வகையிலாவது சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், இந்தியர்களோ இரண்டு முறை (Servings) காய்கறியும் 1.5 முறை (Servings) பழங்களும் சேர்த்துக்கொள்கின்றனர்.
சராசரியாக, நகர்புறங்களில் இருப்போர் காய்கறி மற்றும் பழங்களைச் சாப்பிடுவோரின் அளவு சென்னை – 4.35 சர்விங்ஸ், ஹைதராபாத் – 4.05 சர்விங்ஸ், டெல்லி, கர்கன், நொய்டா – 3.19 சர்விங்ஸ், மும்பை – 3.17 சர்விங்ஸ், கொல்கத்தா – 2.81 சர்விங்ஸ். இதில், சென்னை முதல் இடத்தில் இருப்பது ஆறுதலான விஷயம். வேலைக்குச் செல்பவர்களைவிட வீட்டில் இருப்போர் அதிக அளவில் காய்கறி, பழங்களைச் சாப்பிடுகின்றனர். ஒரு நாளைக்கு காய்கறி மற்றும் பழங்களைச் சாப்பிடுவோரில் 18-25 வயதினர் – 2.97 %, 25-35 வயதினர் – 3.42 %, 35-50 வயதினர் – 3.74 %, 50-60 வயதினர் – 3.65 %, 60 வயது மேற்பட்டோர் – 3.1 % என்கிறார்கள்.
நம் மக்கள் போதுமான அளவு காய்கறி, பழங்களை எடுத்துக்கொள்ளாததற்கான என்னென்ன காரணங்கள் சொல்கிறார்கள்?
* வாழ்வியல் மாற்றம்
* சீஸன் சமயங்களில் மட்டும் கடைகளில் கிடைப்பதால்
* விலை அதிகம்
* பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடப் பிடிக்கவில்லை
* வாங்கி வருவதற்கான சரியான சூழல் இல்லாதது
* கிடைக்கும் காய்கறி, பழங்களின் தரம் குறைவு
* வீட்டில் சேமித்துவைக்க இடம் இல்லாதது
* சத்துக்கள் குறைவு என்ற கருத்து
* ஜங்க் ஃபுட், அசைவத்துக்கு முன்னுரிமை தருவது
என்று மக்களின் பட்டியல் நீளுகிறது. இதெல்லாம் ஒரு காரணமா சார்? சாப்பிட்டா நல்லதுன்னு உலக சுகாதார நிறுவனம் சொல்லுது. சாப்பிட மாட்டோம்னு காரணம் கண்டுப்பிடிச்சிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்?
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating