துருக்கி – ரஷ்யா புது உறவுகள் !! (கட்டுரை)
பனிப்போரின் ஆண்டுகளில், துருக்கி சுதந்திரமான, அதாவது மேற்கத்திய நாடுகளின் நட்பு நாடாகவும், ரஷ்யா என்று இன்றழைக்கப்படும் சோவியத் யூனியனை “தீய சாம்ராஜ்யம்” என்று கொள்கை வழி நின்றதன் பயனாக, பல துருக்கியர்கள் ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டமை, மற்றும், குறிப்பாக உள்நாட்டில், “கம்யூனிசம்” மற்றும் “பயங்கரவாதம்” என்ற சொற்கள் ஒரே மாதிரியானவை என்று உண்மையிலேயே துருக்கியர் நம்பியமை, அதே நேரத்தில் செய்தித்தாள்கள் சோவியத் ஒன்றியத்தில் மில்லியன் கணக்கான துருக்கியர்களின் “ஒடுக்கப்பட்ட” நிலையைப் பற்றி எழுதியமை ஆகிய எல்லாம் சேர்ந்து ரஷ்யாவுக்கு எதிரான ஒரு துருக்கி நிலைப்பாட்டை வரலாற்றில் காட்டியிருந்தது.
ஆனால் 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் எல்லாம் மாறிவிட்டது. 1990கள் இருதரப்பு வர்த்தகத்தில் வளர்ச்சியின் ஒரு காலகட்டமாக மாறியது, ஏனெனில் சோவியத் ஒன்றியத்தின் சரிவு ஒரு “துருக்கிய நூற்றாண்டு” மற்றும் “அட்ரியாடிக் முதல் சீனாவின் பெரிய சுவர் வரையான துருக்கிய உலகம்” வருவதற்கான எதிர்பார்ப்புகளுக்கு வழிவகுத்திருந்தது. துருக்கியில் உள்ள பலரின் கூற்றுப்படி, ரஷ்யாவில் வாழும் துருக்கிய மொழி பேசும் மக்கள் இந்த வளர்ச்சி நிலையில் ஒரு இடத்தை ஆக்கிரமிக்கவும் தமக்காக பிரகடனம் செய்யவும் தலைப்பட்டுமிருந்தனர்.
படிப்படியாக, தேசியவாத கொள்கைகள் இல்லாது போக, 2000 களின் முற்பகுதியில் இருந்து, ரஷ்ய அரசாட்சியை வலுப்படுத்தியதன் மூலம், துருக்கி ரஷ்யாவுடன் நடைமுறை ஆதாயம் மற்றும் அதன் கூட்டாளியின் நலன்களுக்கு மரியாதை செலுத்துதல் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் உறவுகளை உருவாக்கி கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக, நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சியின் (ஏ.கே.பி) மிதமான முஸ்லீம் யதார்த்தவாதிகள் 2002 ல் துருக்கியில் ஆட்சிக்கு வந்ததுடன், ரஷ்யா – துருக்கி உறவுகள் ஓர் புதிய அத்தியாயத்தை எட்டியிருந்தது.
இந்த காலகட்டத்தில், அங்காராவின் வெளியுறவுக் கொள்கை நிகழ்ச்சி நிரலில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ மற்றும் அமெரிக்காவுடனான உறவுகள் இன்னும் முன்னுரிமையாக இருந்தபோதிலும், ஏ.கே.பி திட்டம் புதிய வலிமை மற்றும் புதிய வெளியுறவுக் கொள்கைக்கான நலன்களை அறிவித்தது. ஆயினும்கூட, மத்திய ஆசிய மற்றும் காகசியன் பிராந்தியங்களில் ரஷ்யாவுடன் நட்புறவை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த கொள்கை விரிவாக்கம் வலியுறுத்தியதுடன், மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவுகளில் அதிக கவனம் செலுத்த தொடங்கியிருந்தது.
தற்போதைய வெளியுறவுக் கொள்கைக் கோட்பாடு, மேற்கு நாடுகளுக்கான நாட்டின் மூலோபாய நோக்குநிலைக்கு ஆதரவாக அட்டதுர்க்கின் கொள்கை விருப்பத்திற்கு மாறாக பன்முகத்தன்மை வாய்ந்தது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒன்றிணைவதற்கான பல ஆண்டுகால ஆசை பின்னணியில் மங்கிவிட்டது, ஏனெனில் இப்போது முக்கிய பணியாக ஒரு சக்திவாய்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம், உள்நாட்டு அரசியல் பிரச்சினைகளுக்கு (முதன்மையாக குர்திஷ் பிரச்சினை) தீர்வுகளை ஏற்படுத்தல் காரணமாக துருக்கி ஆக்கபூர்வமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுகிறது. அதன் படி, நீண்ட கால நோக்கில் துருக்கியை உலக வல்லரசாக மாற்றுவதே பணியாக இன்றைய துருக்கியின் வெளியுறவு கொள்கை அமைகின்றது.
அதேசமயம், கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையில் ஒரு “பாலமாக” நாட்டை சித்தரிக்க தொடர்ச்சியாகவே துருக்கி மறுத்தே வந்துள்ளது. இந்த வரையறையை 1980 களில் “புதிய துருக்கியின் கட்டிடக் கலைஞரான” துர்கட் ஓசால் ஏற்றுக்கொண்டார். தற்போதைய தலைமையின் படி, சர்வதேச உறவுகளில் இரண்டாம் நிலை வீரரின் அந்தஸ்தை நிலைநாட்டவே துருக்கி முனைவதுடன், வெறுமனே மேற்கு கிழக்குக்கான ஒரு பாலமாக அமைய துருக்கி விரும்பவில்லை. துருக்கி இப்போது யூரேசியாவின் மையத்தில் அமைந்துள்ள ஒரு “மத்திய தேசமாக” அமைவதும், இது ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் சொந்தமானதாக இருப்பது, துருக்கிக்கு தனது செல்வாக்கினை பால்கன், காகசஸ், மத்திய கிழக்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு செலுத்த உதவுகின்றது எனலாம் . இந்நிலை துருக்கியை பொறுத்தவரை யாருடனும் சலுகை பெற்ற உறவுகளை வழங்காத பன்முக வெளியுறவுக் கொள்கையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவே அமைகின்றது.
மேலும், துருக்கி முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியரால் பிரகடனப்படுத்தப்பட்ட மற்றொரு அடிப்படை யோசனை “அண்டை நாடுகளுடனான பூஜ்ஜிய பிரச்சினைகள்” என்ற கொள்கை – என்ற நிலையையும் பேண தலைப்படுகின்றது, இது அண்டை மாநிலங்களுடனான அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் மிக உயர்ந்த அளவைக் குறிக்கிறது. எது எவ்வாறாயினும், இன்றைய நிலையில், யேமென், ஏதென்ஸ், நிக்கோசியா, டமாஸ்கஸ், ஜெருசலேம், கெய்ரோ, ரியாத், மற்றும் ஓரளவிற்கு, பாக்தாத்துடனான உறவுகளில் ஏற்பட்ட சிக்கல்கள், புதிய ஓட்டோமனிசத்தின் கொள்கைக்கு மாறாக, “பூஜ்ஜிய பிரச்சினைகள்” கொள்கைகளில் உள்ள சிக்கல்களை நிரூபிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, துருக்கி ரஷ்யா உறவுகளின் படி, இருதரப்பு ஒத்துழைப்பு செயலில் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளைக் இரு நாடுகளும் முதன்மைப்படுத்துகின்றன. அக்குயு என்.பி.பி மற்றும் துருக்கிய நீரோடை போன்ற திட்டங்கள் இரு நாடுகளின் பொருளாதாரங்களை பல ஆண்டுகளாக இணைக்கும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளன. மேலும், அவர்களுக்கு ஒரு அரசியல் கூறு உள்ளது.
துருக்கிய நிபுணர் சமூகத்தில் அறிக்கைகளின் படி, இது பல்வேறான முடிவுகளுக்கான திறவுகோலாக பார்க்கமுடியும். இரு நாடுகளும் தங்களது சொந்த தேசிய நலன்களைப் பின்பற்றுகின்றன, அவை ஒத்துப்போகின்றன, ஆனால் ஓரளவு மட்டுமே என்பதே உண்மை. சில வல்லுநர்கள், நலன்கள் ஒன்றிணைந்த இடத்தில், துருக்கியும் ரஷ்யாவும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன, அங்கு அவர்கள் மோதுகிறார்கள், ஆனால் அவர்கள் தமக்கிடையிலான உறவுகளை கெடுக்க முயற்சிக்கவில்லை எனவே கருதுகின்றனர். தவிர, துருக்கி அமெரிக்காவை ரஷ்யாவிற்கு எதிராகவும், நேர்மாறாகவும் பயன்படுத்த முயற்சிக்கிறது.
சர்வதேச அரசியலில், எளிய தீர்வுகள் எதுவும் இல்லை என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். துருக்கி – ரஷ்யா உறவுகளில் அங்காராவுக்கு பன்முகத்தன்மை ஒரு சவாலாகவே உள்ளது. எனவே, துருக்கியின் மேற்கிலிருந்து தன்னைத் தூர விலக்குவதற்கான போக்கை மாஸ்கோவை நோக்கி மட்டுமே சறுக்கலுடன் ஒப்பிட வேண்டிய அவசியமில்லை. மாறாக, துருக்கியின் அண்மைக்கால போக்கே இதற்கான சான்றாகும்.
எது எவ்வாறாயினும், கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், துருக்கிய வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகளின் முழு நிறமாலையிலும் ரஷ்யாவின் பங்கு இன்னும் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இரு நாடுகளும் இட்லிப்பின் நிலைமை போன்ற குறிப்பிட்ட அக்கறை கொண்ட விடயங்களில் கூட சமரசம் செய்யும் திறனை இந்நிலை வெளிப்படுத்துகின்றன. பல மேற்கத்திய ஆய்வாளர்கள் ரஷ்ய-துருக்கிய ஒத்துழைப்பை சூழ்நிலை மற்றும் நேரத்துக்கான தேவை என்று கருதினாலும், ரஷ்யா இன்னும் கூடுதலான நம்பகத்தன்மையை நிரூபித்து வருகிறது. ஒரு முழுமையான கூட்டாளியாக இருந்துகொண்டால், எல்லா பகுதிகளிலும் நம்பகமான பங்காளியாக ரஷ்யாவுடனான ஒத்துழைப்பு பொருளாதார ரீதியாக நன்மை பயக்கும் என்பது துருக்கிக்கு அனுபவத்தின் மூலம் உணரப்பட்ட ஒரு உண்மை. இது மறுபுறம் மேற்கிலிருந்து துருக்கியை தனிமைப்படுத்தும் என்னும் நோக்கும் இந்நிலையில் சிந்திக்கப்படவேண்டிய ஒன்றாகும்
Average Rating