இளமையுடன் வாழ யோகா! (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 28 Second

ஐ.டி நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெண்கள் அடிக்கடி கழுத்துவலி, முதுகு வலியால் அவதிப்படுவதை காண்கிறோம். டூவீலர் ஓட்டும் பெண்கள் முதுகு தண்டுவடம் பாதிப்படைவதால் முதுகுவலி ஏற்படுகிறது. லேப்டாப்பில் அதிக நேரம் செலவிடுபவர்களையும் கழுத்துவலி விட்டுவைப்பதில்லை.
இதற்கு பல மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை என கவலைப்படுபவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது சென்னை தி.நகரில் உள்ள லட்சுமி ஆண்டியப்பன் என்பவரின் யோகாசன பயிற்சி மையம்.

யோகா என்றால் உடற்பயிற்சி என்று நினைத்திருந்த நமக்கு அது ஒரு மருத்துவமுறை என அதிரடி விளக்கத்துடன் ேபச ஆரம்பித்தார் லட்சுமி. இவர் பிரபல யோகாசன கலைஞர் ஆசனா ஆண்டியப்பனின் மகள்.
எம்.பி.பி.எஸ் மற்றும் யோகா தெரபியில் எம்.எஸ்.சி மற்றும் எம்.பில் பட்டம் பெற்றவர். 18 ஆண்டுகளாக சிங்கப்பூர், இலங்கை உள்பட பல நாடுகளுக்கு சென்று யோக வைத்தியமுறையை பரப்பிவருகிறார்.

‘‘யோகம் என்றால் மனதை ஒருநிலைப்படுத்துதல். ஆசனம் என்ற சொல்லுக்கு இருக்கை என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிப்பதே யோகாசனம். தினமும் 10 நிமிடம் சூர்ய நமஸ்காரம் செய்தால் உடலை கட்டுக்ேகாப்பாக வைத்துக் கொள்ளலாம். யோகா தெரபி மூலம் ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ், வயிற்றுவலி ஆகிய நோய்களை குணப்படுத்தலாம்.

ஆசனம் மூலம் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு, அல்சர் ஆகிய நோய்களை கட்டுப்படுத்தலாம். வாதம், பித்தம், கபம் என 3 பிரிவுகளை உள்ளடக்கியது இந்த யோக வைத்திய முறை. வாதப்பிரச்னை உள்ளவர்கள் மதியவேளைகளிலும், பித்த பிரச்னை உள்ளவர்கள் காலையிலும், கபம் பிரச்னை உள்ளவர்கள் மாலையிலும் ஆசனம் செய்வது அவசியம். பிராணாயாம முறைகளை கடைப்பிடித்தால் வயதானாலும் இளமையுடன் இருக்கலாம்.

இதற்கு 16-64-32 என்ற சூத்திரத்தை பின்பற்ற வேண்டும். 16 நொடிகள் மூச்சை உள்ளே இழுக்க வேண்டும், 64 நொடிகள் மூச்சை அப்படியே நிறுத்தவேண்டும், 32 நொடிகள் மூச்சை வெளியேற்ற வேண்டும். 3 வயது முதல் 85 வயது வரை இருபாலரும் ேயாகாசனம் செய்யலாம். நோயின் தன்மைக்கு ஏற்ப சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயாளிகள், அல்சர், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் பிராணாயாமம் செய்யலாம்.

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை, பி.சி.ஓ.டி குறைபாட்டை போக்க உத்தான பாதாசனம், புஜங்காசனம் போன்ற ஆசனங்கள் உள்ளன. ஆசனங்களை பயிற்சியாளர் இன்றி செய்யக்கூடாது. அது பின்விளைவுகளை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் முதுகு வலி, கால்வலி, கால்வீக்கம் ஆகியவற்றையும் ஆசனங்கள் மூலம் கட்டுப்படுத்தலாம். இயற்கையான பிரசவத்துக்கும் ஆசனங்கள் உள்ளன.

குழந்தைகளின் அலைபாயும் மனதை ஒருங்கிணைக்கவும் ஆசனம் சொல்லித்தருகிறோம். 10ம் வகுப்பு படித்தவர்கள் 1 ஆண்டு பயிற்சி முடித்தால் யோகா ஆசிரியராகலாம். இதற்கான பயிற்சியும் எங்கள் மையத்தில் அளிக்கிறோம்’’ என்றவர் யோகாசனத்தில் அர்ஜூனா விருது பெற்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இடையே…இடையிடையே…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post அழிவை நோக்கி மனித இனம்..? (மருத்துவம்)