சட்டம் நிறைவேறியதால் முத்தலாக்கை எதிர்த்து வழக்கு போட்ட பெண் மகிழ்ச்சி!! (உலக செய்தி)

Read Time:2 Minute, 30 Second

முத்தலாக் சட்டம் சட்ட விரோதமானது என்று கடந்த 2017-ம் ஆண்டு ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றவும் அறிவுறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து ‘முத்தலாக்’ தடை சட்டம் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.

கடந்த 2017, 2018-ம் ஆண்டுகளில் 2 தடவை பாராளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றியும், மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாமல் போனது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இச்சட்டம் நிறைவேறியது. அதன் மூலம் முத்தலாக் தடை சட்டம் சட்டவடிவம் பெற்றுள்ளது.

முத்தலாக்கை எதிர்த்து உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த சாய்ரா பானு இந்த சட்டம் நிறைவேறியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதை வரவேற்று அவர் கூறியதாவது:-

‘முத்தலாக்’ சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மிகப் பெரிய வெற்றியாகும். தற்போது இந்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருப்பது முத்தலாக் மூலம் பெண்களுக்கு விவாகரத்து கொடுக்கும் கணவன்மார்களுக்கு நிச்சயம் பயத்தை ஏற்படுத்தும்’’ என்றார்.

‘பாரதீய முஸ்லிம் மகிளா அன்டோலன்’ என்ற அமைப்பை சேர்ந்த ஷாகியா சோமன் கூறும்போது, ‘‘இது வரலாற்று சிறப்புமிக்க வளர்ச்சி’ இன்று இந்த சட்டம் புதிய தளத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் நாளை நீதி கிடைக்குமா என என்னால் தெரிவிக்க இயலாது.

ஆனால் சமுதாயத்தில் விழிப்புணர்வும், மறு சீரமைப்பும் உருவாகும். பெண்கள் தங்கள் குரலை எதிரொலிக்க சட்ட பாதுகாப்பு கிடைத்துள்ளது என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா!! (மகளிர் பக்கம்)
Next post போர் மற்றும் கலவரங்களில் 12 ஆயிரம் குழந்தைகள் பலி!! (உலக செய்தி)