Adults Only! (அவ்வப்போது கிளாமர்)
* தாம்பத்திய உறவு மூலமாகப் பரவும் நோய்களை Sexually Transmitted Diseases(STD) எனவும், Reproductive Tract Infections (RTI)எனவும் இரண்டு வகைகளில் செக்ஸாலஜி மருத்துவர்கள் வகைப்படுத்துகின்றனர்.
* ஆண்களின் விரையின் பின்பக்கம் சிறுசிறு கட்டிகள் காணப்படுவது சிலருக்கு அச்சத்தை உண்டாக்கும். இவை விரைகள் மற்றும் விந்துப்பை தொங்கும் தசை நார்கள் ஆகியவற்றால் உருவாகக் கூடியன என்பதால் கவலைப்பட வேண்டியதில்லை. விரைப்புற்றுநோய் ஆண்களைத் தாக்கும் அபாயமும் ஒரு சதவிகிதமே!
* பாலியல் தொற்று உள்ள பெண்ணோடு உறவு கொள்ளும் ஆணுக்கு 2 முதல் 5 நாட்களுக்குள் கொனோரியா மற்றும் கிளமிடியா ஆகிய நோய்களுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும். 3 வாரங்களுக்கு மேலும் இந்த பாதிப்பு வெளிப்படலாம்.
* கொனோரியா, கிளமிடியா ஆகிய நோய்கள் இருப்பதை சிறுநீர் வெளியேறும்போது சிரமம் மற்றும் வலி, விரைகளில் வலியுடன் கூடிய வீக்கம் போன்றவற்றால் உணர்ந்து கொள்ளலாம்.
* பிறப்புறுப்புக்களில் மரு மற்றும் புண்கள் உண்டாகி சில வாரங்களில் தோலில் வழக்கத்துக்கு மாறாக சிவப்பு நிறம் காணப்பட்டால் அது மேகப்புண்ணாக இருக்கலாம். இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும்.
* பாக்டீரியா தொற்றால் ஏற்படுகிற மேகப்புண் நோயை ஆரம்பநிலையிலே கண்டுபிடித்து முறையான சிகிச்சை மேற்கொண்டால் முழுவதும் சரி செய்துவிட முடியும்.
* ஆண், பெண் இணையும்போது பெண்ணுடைய யோனிக்குழாய் அதிக அளவில் பாதிப்பு அடைகிறது. தொற்று உள்ள விந்து, அந்த உறுப்பில் நீண்ட நேரம் தங்குவதால், கர்ப்பப்பை, சினைக்குழாய்கள் மற்றும் சினைப்பை போன்ற உறுப்புகளில் தொற்றுகள் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக செக்ஸாலஜிஸ்ட்டுகள் தெரிவிக்கின்றனர்.
* பெண்ணின் இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படுகிற தொற்றுகள்
கவனிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனெனில், இத்தொற்றுக்கள் பெண்களை நேரடியாகப் பாதிப்பது கிடையாது. அதனால், நீண்ட கால வயிற்றுவலி அல்லது முதுகுவலி இருந்தால் கவனம் அவசியம்.
* பெண்களுக்குக் கொனோரியா, கிளமிடியா நோய் இருந்தால் அடிவயிற்றில் வலி, சிறுநீர் அடிக்கடி கழித்தல், மாதவிடாய் பிரச்னைகள், காய்ச்சல் போன்ற அறிகுறிகளின் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.
* யாஸ் நோய் என்றும், பறங்கி நோய் என்றும் பரவலாக செக்ஸாலஜிஸ்ட் மருத்துவர்களால் அழைக்கப்படும் நோய் பாக்டீரியாக்கள் மூலம் ஏற்படுகிற ஒருவகை தொற்று. இந்த நோய் நாளாக நாளாக தீவிரமடைந்து அதிகமாகவோ, மற்றவர்களுக்குப் பரவும் தன்மை கொண்டதாகவோ மாறிவிடும் அபாயம் கொண்டது.
* Human Immunodeficiency Virus(HIV) என்பது எய்ட்ஸை உண்டாக்கும் ஒருவித வைரஸ். நோய்களிடம் இருந்து காப்பாற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் செயல் இழக்க செய்யும் ஆற்றல் உடையது இந்த வைரஸ்.
* வியர்வை, சிறுநீர் மற்றும் மலம், உடல்நலக்குறைவால் ஏற்படுகிற வாந்தி ஆகியவற்றில் எச்.ஐ.வி. வைரஸ் காணப்படாது. எனவே, எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவருடன் சேர்ந்து தங்குதல், அவர் பயன்படுத்தும் பொருட்கள், கழிப்பறையை உபயோகித்தல், கட்டித்தழுவுதல், கை குலுக்கல், எச்சில் மற்றும் உமிழ்நீர் படாமல் முத்தம் இடுதல் போன்ற செயல்களால் எச். ஐ.வி. ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவாது.
* எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்ட நபரை வீட்டில் வைத்து கவனித்துக் கொள்வது அவசியம். ஏனெனில், அவருக்கு குடும்பத்தினருடைய
ஆதரவு அவசியம். அதேவேளையில், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம், சிறுநீர், மலம் போன்றவற்றை நேரடியாக அகற்றக் கூடாது. க்ளவுஸ் போட்டுக்கொண்டு சுத்தம் செய்வது பாதுகாப்பானது.
* வாசக்டமி என்பது ஆண்களுக்குச் செய்யப்படுகிற குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சையின்போது, விந்தணுக்களை வெளியே அனுப்பும் Vas deferens என்ற நாளத்தை அகற்றிவிடுவார்கள். இதனால் தாம்பத்திய ஆர்வம் குறைவதற்கோ, வேறு பிரச்னைகளோ ஏற்பட வாய்ப்புகள் இல்லை.
* சிறுநீர் பாதைத் தொற்று ஆண்களைவிட பெண்களை அதிகம் தாக்குகிறது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் போன்றவை இத்தொற்றுக்கான அறிகுறிகள்.
* தாம்பத்திய உறவு, தாய்மை அடைதல், சிறுநீர் வெளியேறும் வழியில் அடைப்பு ஆகியவை சிறுநீரகத் தொற்று ஏற்பட முக்கிய காரணங்களாக அமைகின்றன.
* பெண்ணுறுப்பில் 3 வகைகளில் தொற்று உருவாகிறது. இவற்றை டிரைகோமோனஸ் வகை கிருமித்தொற்று, ஈஸ்ட் வகை கிருமித்தொற்று, பாக்டீரியா கிருமித்தொற்று என குறிப்பிடுகின்றனர்.
* ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 6 லட்சம் பெண்களுக்கு கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை நடைபெறுவதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
– விஜயகுமார்
Average Rating