e-book படிக்கலாம்!! (மகளிர் பக்கம்)
புத்தகம் நம் வாழ்வில் என்றும் நீங்காதவை. புதிய புத்தகமோ அல்லது பழைய புத்தகமோ எதுவாக இருந்தாலும் அதற்கென்று தனி வாசம் உண்டு. அதனை உணராதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த வாசனையே நம்மை அந்த புத்தகங்களை கையால் எடுத்து வருட தூண்டச் செய்யும்.ஆனால் இந்த தலைமுறையினருக்கு, புத்தகம் படிக்கும் பழக்கம் மேல் பெரிய அளவில் ஈர்ப்பு இல்லை என்று தான் சொல்லலாம். பாடப் புத்தகங்களை தவிர அவர்கள் கையில் வேறு புத்தகங்களை நாம் பார்ப்பது அரிதாகிவிட்டது. மேலும் பரபரப்பான இன்றைய வாழ்க்கை முறையில் புத்தகம் வாங்கவோ அல்லது அதை புரட்டி பார்க்கவோ நேரம் எங்குள்ளது.
அலுவலகம் செல்லும் போதே காரில் காலை சிற்றுண்டி சாப்பிடும் வழக்கத்திற்கு இன்றைய தலைமுறையினர் மாறிவிட்டனர். தொழில்நுட்பமும் வளர்ந்து வருவதால், எல்லாமே அவர்களின் விரல் நுனியில் வந்துவிட்டது. ஒரு பட்டனை தட்டினால் போதும், அவர்கள் விரும்பும் புத்தகத்தை ஆன்லைனிலேயே ஆர்டர் செய்தால் போதும். புத்தகம் அவர்கள் வீடு தேடி வந்திடும்.
அதே சமயம் இப்போது பலர் புத்தகத்தை சேமித்து வைக்க விரும்புவதில்லை. வீட்டின் ஒரு பகுதியை அவை சாப்பிட்டுவிடும் என்பதாலோ பலர் இணையத்திலேயே தான் விரும்பிய புத்தகங்களை தேடி படிக்க ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் படிக்க விரும்பும் புத்தகங்கள் அனைத்தும் இணையத்திலேயே குவிந்துள்ளன.
விரும்பும் புத்தகத்தை ஈ புக் முறையில் இணையத்தில் படித்துக் கொள்ளலாம். சில இணையங்கள் இலவசமாக படிக்க அனுமதி தந்தாலும், அதற்கான குறிப்பிட்ட புத்தகங்கள் மட்டுமே நாம் படிக்க முடியும். ஆனால் ஆங்கில புத்தகங்களை நாம் இணையத்தில் படிக்க சில குறைந்த கட்டணம் செலுத்தவேண்டும். கட்டணம் செலுத்த வேண்டுமா என்று திகைக்க வேண்டாம். எல்லாமே ரூ,50க்கு குறைவாக செலுத்தினால் போதும். சில புத்தகங்கள் 10 ரூபாய், சிலவற்ைற 12, சிலது 8 ரூபாய்க்கே படிக்கலாம். ஆனால் எந்த புத்தகமும் 50 ரூபாயை தாண்டாது.
இந்த வசதியினை கூகில் வாடிக்கையாளர்களுக்காக செய்துள்ளது. இதனை படிப்பது மிகவும் சுலபம். முதலில் கூகில் பிளேஸ்டோருக்குள் செல்ல வேண்டும். உள்ளே நுழைந்ததும் கேம்ஸ், ஆப்ஸ், மூவிஸ், புக்ஸ் என்று வகைப்பட்டு இருக்கும். அதில் புக்ஸ் என்ற கேட்டகெரிக்குள் செல்ல வேண்டும். அதில் ‘Books under 50 Rs’ என்று தலைப்பில் பல விதமான புத்தகங்கள் உள்ளன.
இதில் வரலாறு, பயோகிராபி, குழந்தைகளுக்கான புத்தகங்கள், அட்வென்சர், அறிவியல், பொது அறிவு, கணிதம், மாணவர்களுக்கான காம்பேடேடிவ் புத்தகங்கள், மானுடவியல், யோகா, ஹெல்த், தன்னம்பிக்கை, நாவல், மேஜிக் சார்ந்த புத்தகங்கள்… என அனைத்து புத்தகங்களும் இதில் உள்ளன. இவை அனைத்துமே 50 ரூபாய்க்கு குறைவான விலைதான். விரும்பும் புத்தகங்களை விரும்பிய நேரத்தில் கட்டணம் செலுத்தி படித்து மகிழுங்கள். உங்களுக்காக இதில் உள்ள சில புத்தகங்கள் மற்றும் அது பற்றிய விவரங்கள்…
The Power Of Your Subconscious Mind
இதன் முதல் பிரதி 1963ம் ஆண்டு வெளியானது. இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. உங்களை நீங்களே அறிந்து கொள்ளவும், பயங்களை போக்கவும், அச்சங்களைத் துடைக்கவும், சிறப்பாக தூங்கவும், சிறந்த உறவுகளை மேம்படுத்தவும், மகிழ்ச்சியாக உணரவும் போன்ற அனைத்து அம்சங்களையும் இந்த புத்தகம் படிப்பவர்களுக்கு அள்ளித் தெளித்துள்ளது. இதனை தெரிந்து கொள்ளக் கூடிய நுணுக்கங்கள் மிகவும் எளிமையானவை தான் என்றாலும் அதற்கான தீர்வுகளை நாம் உடனடியாக உணரமுடியும். இந்த புத்தகம் வாயிலாக உங்கள் உறவுகள், நிதி மற்றும் உடல் நலத்தினை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
Basics Of Physics
அடிப்படை இயற்பியல் ஒளி மற்றும் ஒலி முதல் அணு அறிவியல் மற்றும் புவியியல் வரை அனைத்தையும் உள்ளடக்கியது. இயற்பியலில் ஆப்டிகல் சயின்ஸ், குவாண்டம் மெக்கானிக்ஸ், தெர்மோடைனமிக்ஸ், மின்காந்தவியல், திரவ இயக்கவியல் உள்ளிட்ட பல கிளைகள் உள்ளன. அடிப்படை இயற்பியலின் இந்த கிளைகள் பரந்தவை மற்றும் சிக்கலானவை. இதனை பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
இந்த அடிப்படை இயற்பியல் புத்தகம் அறிவியல் மற்றும் பொறியியலின் பல்வேறு முக்கிய கருத்துக்களை உள்ளடக்கியது. இணைய விலை ரூ.20 மட்டுமேThe Complete Works of William Shakespeare : ஆங்கில இலக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பவர் கவிஞர் ஷேக்ஸ்பியர். இவர் கவிஞர் மட்டுமில்லை, நாடக எழுத்தாளரும் கூட. இவரின் 160 செய்யுள்கள், 37 நாடகங்கள் மற்றும் 5 கவிதைகள் கொண்ட புத்தகம் தான் இது, ரூ.19ல் இவரின் அனைத்து படைப்புகளுமே நாம் படித்து மகிழலாம்.
Karma Yoga The Yoga Action
ராமகிருஷ்ணா மடம் வெளியிட்ட இந்த புத்தகத்தில் அன்றாட வாழ்க்கையின் தேவைகளின் நடைமுறை பயன்பாடு குறித்து சுவாமி விவேகானந்தா ஆற்றிய எட்டு சொற்பொழிவுகள் உள்ளன. இந்த புத்தகம் ஒவ்வொருவரும் தங்களின் அவமதிப்பை கருத்தில் கொள்ளாமல், வாழ்க்கைக்கான கடமைகளை கைவிடாமல் மிக உயர்ந்த வாழ்க்கையை எவ்வாறு வழிநடத்துவது மூலம் இறுதியில் நாம் நம்மை உணர முடியும் என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது. இந்த புத்தகத்தை ஆன்லைனில் படிக்க ரூபாய் 10 செலுத்தினால் ேபாதும்.
Quantitative Aptitude for Competitive Exams
எந்த ஒரு துறைக்கான வேலையில் சேர வேண்டும் என்றால் அதற்கான் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். எல்லா போட்டித் தேர்வும் பாடங்களை சார்ந்து மட்டுமே இல்லாமல் திறனாய்வு சோதனை குறித்தும் கேள்விகள் கேட்கப்படும்.
திறனாய்வு சோதனைகளுக்கான கேள்விகள் மற்றும் அதற்கான விரிவான விளக்கங்கள் கொண்ட பதில்களை கொண்ட புத்தகம் தான் இது. இதன் விலை 49 ரூபாய். இதில் முந்தைய தேர்வுகளில் வெளியான திறனாய்வு சோதனைக்குரிய கேள்விகளும் உள்ளன. ரயில்வே, வங்கி, ஆயுள்காப்பீட்டு திட்டம் மற்றும் எஸ்.எஸ்.சி வேலைக்கான தேர்வினை எழுதும் மாணவர்கள் இந்த புத்தகத்தை படித்து பயன்பெறலாம்.
The World I See It
இந்த புத்தகத்தை இணையத்தில் படிக்க 19 ரூபாய் தான். பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் எயின்ஸ்டீனால் எழுதப்பட்ட இந்த புத்தகத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார். இதில் அவரின் நம்பிக்கைகள், தத்துவ சிந்தனைகள் மற்றும் பல பாடங்களில் உள்ள கருத்துக்களை ஆராய்வது மட்டும் இல்லாமல், அரசியல், மதம், கல்வி, வாழ்க்கையின் பொருள், யூதப் பிரச்சினைகள், உலகப் பொருளாதாரம், அமைதி மற்றும் சமாதானம் குறித்தும் இந்த புத்தகத்தில் விவரித்துள்ளார்.
Average Rating