மூட்டு வலிக்கு குட் பை சொல்லுங்க!! (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 32 Second

அலுவலகங்களில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவரா நீங்கள்? கழுத்துவலி, முதுகுவலி, மூட்டுத் தேய்மானப் பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்களா? மருந்து மாத்திரைகளாலும் பலனில்லையா? அட ஆமாம்பா.. ஆமாம்.. என்கிறீர்களா? உங்களுக்கென உடற்பயிற்சியும், எளிமையான சிகிச்சை முறையும் போதும் என்கிறார் ஆயுர்வேத மருத்துவரான டாக்டர் சுமிதா.

‘‘நாற்பதை தொட்டுவிட்டால் உங்களைத் தேடி வந்து ஒட்டிக்கொள்ளும் மூட்டுத் தேய்மானப் பிரச்சனை. குறிப்பாக பெண்களுக்கு இது முக்கியமான பிரச்னை. இதன் காரணமாக பெரும்பாலான பெண்களால் தங்களின் அன்றாட வேலைகளில் கவனம் செலுத்த முடிவதில்லை.

வலி நிவாரணிகளைப் பயன்படுத்திவிட்டு, தங்கள் உடலைப் பற்றி பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். இது நாளடைவில் மிகப் பெரும் பிரச்சனையாக மாறிவிடுகிறது. விளைவு, அறுவை சிகிச்சை. இந்தப் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை இல்லாமல், இயற்கை முறையிலேயே நிரந்தர தீர்வு காணலாம்.

வலி எதனால் ஏற்படுகிறது என்பதை முதலில் கண்டறிந்து அதை சரி செய்வதுதான் எங்களின் ஆயுர்வேத சிகிச்சை முறை. கடந்த 45 ஆண்டுகளாக நாங்களே ஆயுர்வேத மருந்துகளைத் தயாரித்து வழங்கி வருகிறோம். எங்களிடத்தில் கிடைக்கும் ஆயுர்வேத மருந்துகள் அனைத்துமே இயற்கை மூலிகைகளைக் கொண்டு தயார் செய்யப்படுகின்றன.

மூட்டுத் தேய்மானப் பிரச்சனைகளை உடையவர்கள் வலி தோன்றிய ஆரம்ப கட்டத்திலேயே ஆயுர்வேத சிகிச்சையை எடுத்துக்கொண்டால், இரண்டிலிருந்து மூன்று வாரங்களில் குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பிவிடலாம். தீவிர மூட்டுத் தேய்மானப் பிரச்சனை உடையவர்கள் மூன்று முதல் ஆறு மாதம் முறையாக சிகிச்சையினை தொடர்ந்து மேற்கொள்ளும்போது முழுமையாகக் குணமடைந்து வலியிலிருந்து விடுபடுவார்கள்.

இயற்கை முறையிலான சிகிச்சைகள் நீண்ட நாட்களை எடுத்துக்கொள்கிறது என்பதே இங்கு பெரும்பாலானவர்களின் குற்றச் சாட்டாக இருக்கிறது. உடனடித் தீர்வு கிடைக்கும் மருத்துவமுறைகளில் மீண்டும் மீண்டும் வலிகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்துகொண்டே இருக்கும். ஆயுர்வேத சிகிச்சை முறையானது நீண்ட நாட்களை எடுத்துக் கொண்டாலும் வலி நிவாரணத்திற்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.

அலுவலகப் பணிகளில் இருக்கும் பெண்கள் பெரும்பாலும், 8 மணிநேரமும் ஒரே இடத்தில் அமர்ந்து கணினியில் வேலை செய்பவர்களாக இருக்கின்றனர். இவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தங்கள் கை, கால்களை அமர்ந்த நிலையில் நீட்டியும் மடக்கியும் சிறுசிறு அசைவுகளை உடலுக்கு கொடுக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

இதன் காரணமாக, ஒரே இடத்தில் அமர்வதால் உண்டாகும் தோள்பட்டை வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவை சரியாகும். அதேபோல் தினமும் காலை மாலை இருவேளையும் ஒரு அரைமணி நேரமாவது நடக்க வேண்டும். வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரங்களில் எளிமையான உடற் பயிற்சிகளை செய்தல் வேண்டும்’’ என முடித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படுக்கையில் நீடித்த இன்பம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? (அவ்வப்போது கிளாமர்)
Next post இன்றுவரை திறக்கப்படாத 3 மர்ம கதவுகள்! (வீடியோ)