நுரையீரல் நோய்களை போக்கும் தேக்கு!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 18 Second

நமக்கு அருகில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தோல்நோய்களை குணப்படுத்த கூடியதும், மாதவிலக்கு பிரச்னையை சரிசெய்யவல்லதும், மூக்கில் இருந்து ரத்தம் வடிதலை தடுக்க கூடியதுமான தேக்கின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். மரவேலைகளுக்கு பயன்படும் தேக்குமரம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.

இதன் இலை, பூக்கள், மரப்பட்டை மருந்தாகி பயன் தருகிறது. தேக்குமர பூக்கள் உள் மருந்தாகி சிறுநீரை பெருக்குகிறது. சிறுநீர்தாரையில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்கிறது. இலைகளை தேனீராக பருகும்போது சளியோடு வெளிவரும் ரத்த கசிவு குணமாகும். மாதவிலக்கின்போது அதிக ரத்தபோக்கை கட்டுப்படுத்துகிறது. ஈரலை பலப்படுத்தும் தன்மை கொண்டது. பித்தத்தை சமன் செய்கிறது. தோல்நோய்களுக்கு மருந்தாகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. காய்ச்சலை தணிக்கிறது. தேக்கு பூக்களை பயன்படுத்தி நுரையீரல் தொற்றை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: தேக்கு பூக்கள், பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு ஒருபிடி தேக்குமர பூக்கள், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர நுரையீரலில் ஏற்படும் தொற்று குணமாகும். அழற்சியை போக்கி இருமல், மூச்சிரைப்பு பிரச்னையை சரிசெய்கிறது. சிறுநீர் பெருக்கியாகவும் இது விளங்குகிறது. மரம் முழுவதும் பூத்திருக்கும் தேக்கு பூக்கள், நுரையீரலை பற்றிய நோய்களை குணப்படுத்துகிறது. சளியோடு ரத்தம் கலந்து வெளியேறுவதை சரிசெய்கிறது.

நுண்கிருமிகளை போக்கி நோயை தணிக்கவல்லதாக தேக்கு பூ பயன்படுகிறது. தேக்கு மரத்தின் இலைகளை கொண்டு மூக்கிலிருந்து ரத்தம் வடிதல், மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தபோக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேக்கு இலை, பூக்கள், பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதில், பொடி செய்து வைத்திருக்கும் தேக்கு இலை, பூக்கள் ஆகியவற்றை ஒரு ஸ்பூன் அளவுக்கு சேர்க்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

இதை வடிகட்டி குடித்துவர மூக்கில் ரத்தம் வடிதல் பிரச்னை சரியாகும். ஆசனவாயில் இருந்து வெளியேறும் ரத்தம், அதிக மாதவிலக்கு பிரச்னைகள் குணமாகும். இது, ரத்தத்தை கட்டுப்படுத்தும் நல்மருந்தாக விளங்குகிறது. தேக்கு மரத்தின் இலைகள், பூக்களை கொண்டு பொடுகை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேக்கு இலைகள், பூக்கள், தேங்காய் எண்ணெய். செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் விடவும். இதனுடன் அரைத்து வைத்திருக்கும் தேக்கு இலை, பூக்கள் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும்.

இதை வடிகட்டி தலையில் தேய்த்து குளிக்கும்போது பொடுகு இல்லாமல் போகும். தலைமுடி உதிர்வது நிற்கும். பூஞ்சை காளான்களால் தோலில் ஏற்படும் நோய்களுக்கு மேல் பூச்சாக இந்த தைலத்தை பயன்படுத்தலாம். தோலில் ஏற்படும் அரிப்பு, படை, சொரி, தேமல் குணமாகும். கால் ஆணியை குணப்படுத்தும் எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு புங்கன் எண்ணெய் மருந்தாகிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் புங்கன் எண்ணெய் வாங்கி ஆணி இருக்கும் இடத்தில் கட்டி வைத்தால் கால் ஆணி குணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செவ்வாய் கிரகத்தில் கூட்டம் கூட்டாமாக விலங்குகள்!! (வீடியோ)
Next post ஏலியன்ஸ் பற்றிய உண்மையை வெளியிட்டது நாசா!! (வீடியோ)